பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முதலுக்கே மோசமாயிருமுங்க…

பாருங்க அண்ணாதுரை.. திருகுறள் இந்து நூல் தான் , அதை எவ்வளவு கஷ்டபட்டு நாமெல்லாம் மறைச்சி வச்சோம் இவர் பெத்த சிகாமணிய திமுக தலைவராக்கி, அவர் என்னமோ சொல்ல பதிலுக்கு பூரா பயலும் குறளை அக்குவேறு ஆணிவேறா பிரிச்சி போட்டு நம்ம மூஞ்சில கரிய பூசிட்டு இருக்கான்.. அதுவும் என்னையெல்லாம் இழுத்து போட்டு அடிக்குறானுவ.. நம்ம திராவிட கொள்கை நிலைக்கணுமுண்ணா இவரோட புத்திர சிகாமணிய வாய மூடிட்டு இருக்க சொல்லுங்க, இல்ல முதலுக்கே மோசமாயிருமுங்க…”

ஓர் நாள் அந்த அதிசயம் நடந்தே தீரும்

ஒரு காலத்தில் எல்லா இனங்களும் இந்தியாவினை தேடி வந்திருக்கின்றன, கிரேக்க அலெக்ஸாண்டர் முதல் கடைசியாக வந்த பிரிட்டன் வரை ஏராளமான பேர் ஏன் வந்தார்கள்? இந்திய செல்வத்தை தேடி வந்தார்கள், கொள்ளையோ வியாபாரமோ இல்லை ஆட்சியோ ஏன் வந்தார்கள் என்றால் இந்தியா செல்வமான நாடு என தேடி தேடி வந்தார்கள் ஆப்கன் கொள்ளையர் முதல் பிரிட்டன் கொண்டுசென்ற செல்வம் வரை ஏராளம் ஆக இந்தியாவில் அன்று ஏகபட்ட செல்வங்கள் இருந்திருக்கின்றன இந்நாடு பணக்கார நாடாய் இருந்தது, ஆனால் […]

வதந்திகள் இப்படித்தான் கிளம்பும் போல

ஒரு அரைமண்டையன் அல்லது தமிழக வரைபடத்தை கூட ஒழுங்காக தெரியாதவன் தற்போது பாகிஸ்தான் பார்த்து அலறும் புது காஷ்மீரிய வரைபடத்தை அதாவது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என பிரிக்கபட்டு வெளியிடபட்ட வரைபடத்தை பார்த்து ஏ பாஜக அரசே கார்கில் இப்படியா இங்கேயா வரும் என அலறிகொண்டிருந்தான் நாமும் முறையான படத்தை காட்டி கார்கில் சிரியா பக்கமா வரும், இங்குதான் வரும் என விளக்கி சொன்னோம் அவனோ கள் குடித்த குரங்காக சொன்னதையே சொன்னான், நாம் சொன்னோம் […]

இதோ அந்த வள்ளுவன் சிலைக்கான கால்கோள் விழா

என்னமோ கன்னியாகுமரி கடற்கரையினை ஆர்.எஸ்.எஸ் வளைத்து விவேகானந்தர், பரம்மஹம்சர், வியாசர், வால்மீகிக்கு எல்லாம் சிலை வைக்க வந்ததாகவும் , கருணாநிதி அதை தடுத்து வள்ளுவனுக்கு சிலை வைத்ததாகவும் திமுக உபிக்கள் சிலிர்த்து கொண்டிருந்தன‌ இதோ அந்த வள்ளுவன் சிலைக்கான கால்கோள் விழா அழைத்திருப்பது யார் தெரியுமா? அந்த ராணடே எனும் பெருமகன் எந்த ராணடே? விவேகானந்தர் நினைவாலயத்தை கன்னியாகுமரியில் அமைக்க வந்து, அது கிறிஸ்தவ இந்து மதமோதலாக வெடித்தபொழுது அகில இந்திய அளவில் ஆதரவு திரட்டி ஒரு […]

இம்மாதிரி காமெடி கோஷ்டி சிலவகை…

நல்ல யூதன் ஒருவன் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பான், மன இறுக்கத்தில் இருக்கும் நேதன்யாகுவுக்கு இதை அனுப்பினால் விழுந்து விழுந்து சிரிப்பார்பதர்கள் பலவகை, ஒவ்வொன்றும் ஒருவகை, அதில் இம்மாதிரி காமெடி கோஷ்டி சிலவகை…யூதநாடு அடையவே 2000 ஆண்டு போராடி அதுவும் இன்னும் நிம்மதியாக இல்லை, இதில் இவனுக வேறு காமெடி..பன்றிகள் முன்னால் முத்துக்களை எறியாதே என இவர்களுக்காகத்தான் இயேசு சொன்னாரோ என்னமோ..

இங்காவது சிக்கல் ..

திருகுறளை போல அற்புதமான நீதி நூல்கள் பண்டைய இலக்கியங்களில் உண்டு, நாலடியார் மூதுரை , ஆச்சாரகோவை போன்றவை எல்லாம் அதில் முக்கியமானவை இன்னும் ஏராளம் உண்டு, அற்புதமான நூல்கள் அவை சீராக் ஆகமும் , சாலமோனும், சாணக்கியனும் கூட சொல்லா தத்துவம் அவை திருகுறள் சொல்லா விஷயங்களையும் அவை சொல்லும் ஆனால் திராவிட குஞ்சுகள் அந்த பக்கமே செல்லாது, காரணம் கடவுளை தெய்வத்தை மகா மகா உறுதியாக சொல்லியிருப்பதால் செல்லமாட்டார்கள் அதை தொட்டால் இந்துமதத்தை தொட வேண்டிவரும் […]

நாடார் அவதாரத்துக்கு அநீதி..

தேவர் பெருமான் மானிட அவதாரம் போராளி என பசும்பொன்னில் வணங்குகின்றார்கள், குங்குமமிட்டு கொள்கின்றார்கள்அய்யா வைகுண்டரும் அவதாரமே, அவரும் சமூக போராளியேசுயமரியாதை இயக்க முன்னோடியே அவர்தான், தலையில் துண்டு கட்டி மரியாதையாக நில் என அம்மக்களுக்கு மானமும் அறிவும் கொடுத்ததே அவர்தான்ஆனால் ஒரு அரசியல்வாதியாவது அய்யா வைகுண்டரின் அவதார தினவிழா அன்று சாமிதோப்புக்கு சென்று வணங்கி விபூதி வைப்பானா என்றால் இல்லைஏன்?அதுதான் தமிழ்நாடுமுக்குலத்தோர் அவதாரத்துக்கு ஒரு நீதி, நாடார் அவதாரத்துக்கு அநீதி..

திருவள்ளுவரும் ஒரு ரவுண்ட் வருவார் போல‌

விஷ்ணு பகவான் உறங்கும் புத்தன், சிரிக்கும் புத்தன், 4 கை புத்தன் என உருமாறியது போல, பிரம்மன் 4 முக புத்தன் என உருமாறியது போல திருவள்ளுவரும் ஒரு ரவுண்ட் வருவார் போல‌ அதாவது பரவாயில்லை, ஆனால் எங்கே விநாயகர் சதுர்த்தி பிள்ளையார் போல பல வேடங்களில் வந்து, துப்பாக்கியுடனெல்லாம் வந்துவிடுவாரோ என்பதுதான் அச்சமாயிருக்கின்றது.

நாம் திமுக எதிரி அல்ல

நாம் ஒருவிஷயத்தை அழுத்தமாக சொல்லிகொள்கின்றோம் நாம் திமுக எதிரி அல்ல, அதற்கு அவசியமும் அல்ல. நமக்கும் அவர்களுக்கும் வாய்க்கால் தகறாறு கூட இல்லை அரசியலுக்காக அவர்கள் பழனிச்சாமியினை பிடித்து உலுக்கட்டும் அதிமுக முன்னால் குட்டிகரணம் அடிக்கட்டும் அதெல்லாம் வேறுவகை தமிழக நலனுக்காக போராடட்டும் , அரசியலுக்காக எதுவும் செய்யட்டும் , அது ஒரு கட்சி அவர்கள் எதையாவது கிளறாவிட்டால் களத்தில் நிற்க முடியாது, சரிதான் ஆனால் அவர்களின் இந்திய பிரிவினைவாத சாயலும் , இந்துமத எதிர்ப்பும் தமிழரை […]

பெரியாரை நான் ஆழ்வாராக பார்க்கின்றேன்

தமிழகத்தில் பிள்ளையார் சிலை முதலில் அதிகம் இல்லை, பெரியார் ஏதோ ஒரு போராட்டத்தில் பிள்ளையார் சிலையினை உடைக்க, வீதிக்கு வீதி பிள்ளையார் வந்தார் ராஜாஜி கூட ஆழ்வார்கள் செய்யா புரட்சி இது, பெரியாரை நான் ஆழ்வாராக பார்க்கின்றேன் என்றார் இனி வீதிக்கு வீதி வள்ளுவனும் வருவான் போல‌ ஆக இரண்டாம் பரிமேலழகர் யார் என உங்களுக்கே தெரியும்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications