பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரூ. பெட்ரோல் விலை 100ஐ நெருங்காமல் மோடிகாலம் முடியாது போலிருக்கின்றது

சீன பொருள், ஐரோப்பிய யூனியனின் உற்பத்தி, இந்திய பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதித்திருப்பது கடும் எதிரொலிகளை ஏற்படுத்திவிட்டது சீனாவும், இந்தியாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருளுக்கு வரியினை உயர்த்திவிட்டன‌ இதுகாலம் வரை சீனா, இந்தியா போன்றவற்றிலிருந்து இறக்குமதியான கச்சா இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கு அமெரிக்காவில் வரி கிடையாது ஆனால் அமெரிக்க உற்பத்தி பொருளுக்கு இந்நாடுகள் வரிவிதித்தன, இதனால் அமெரிக்க பொருளின் விலை இந்நாடுகளில் கணிசமாக இருந்தது இது அமெரிக்காவிற்கு எதிரான சதி என பொங்கிய டிரம்ப் […]

வாஞ்சியின் எதிர்ப்பு வெள்ளையன் எதிர்ப்பல்ல

வாஞ்சிநாதன் ஆஷ்துரையினை கொல்ல பல காரணம் சொல்லபட்டாலும், அவன் கைப்பட எழுதிய காரணம் “ஜார்ஜ் மன்னரின் கைகூலியினை கொல்வோம், அதுவும் பசுமாட்டு இறைச்சியினை உண்ணும் பஞ்சன் ஜார்ஜ் மன்னரை இந்திய அரசராக ஏற்க மாட்டோம், அவனை விரட்டுவொம்” என்பதாக இருக்கின்றது ஆக வாஞ்சியின் எதிர்ப்பு வெள்ளையன் எதிர்ப்பல்ல, மாறாக அவன் மாட்டுகறி உண்பதுதான் அவரின் பிரச்சினையாக இருந்திருக்கின்றது என்பது இன்னொரு கோணம் இன்று மாட்டுகறிக்காக வரிந்து கட்டுபவர்கள், அன்றே மாட்டுகறி உண்ணும் மிலேச்சன் என பிரிட்டிஷ் மன்னரை […]

இன்று வாஞ்சிநாதன் நினைவுநாள்

தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கும் இல்லா தனி சிறப்புகள் நெல்லைக்கு உண்டு, நாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு. ஆர்காடு நவாபிற்கே வரிசெலுத்தாமல் பின்னாளில் ஆங்கிலேயரிடம் போராடிய பூலித்தேவன் ஆகட்டும், எமது உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை என சீறிய கட்டபொம்மன் என ஒரு வரிசை உண்டு. பின்னாளில் அறிவில் சிறந்த பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி என அஞ்ஞாத பெரும் வரிசை உண்டு, இந்த காலத்தில் வாழ்ந்தவர் வாஞ்சிநாதன். […]

ஒரு தேவதை பெயர் கூகிள், இன்னொரு தேவதை பெயர் யூடியூப்

பச்சிளங்குழந்தையினை பராமரிப்பது எப்படி என்பதை இரு தேவதைகள் விளக்கி கொண்டிருக்கின்றார்கள், இப்போதைக்கு சங்கம் அவர்களின் பாதார விந்தங்களில்தான் விழுந்து கிடக்கின்றது ஒரு தேவதை பெயர் கூகிள், இன்னொரு தேவதை பெயர் யூடியூப் தவம் எல்லாம் இருக்க வேண்டியதில்லை, பட்டனை தட்டினால் வந்து நிற்கின்றார்கள், அவ்வளவு நல்லவர்கள் எது பற்றி கேட்டாலும் இருவரிடமும் பதில் இருக்கின்றது பெரியவர்களை அனுபவசாலிகள் என உலகம் சொல்லும், ஆயிரம் பேரின் அனுபவத்தை கவனித்து கருத்துக்களை சொல்பவன் ஞானி எனப்படுவான் ஞானிகளுக்கும் ஞானியாக பல்லாயிரகணக்கான […]

அந்த ரகசியம் யாருக்கு தெரியும்? யாரை பிரபாகரன் முழுக்க நம்பி இருப்பார் ?

புலிகள் காலத்தில் தங்கம் அவர்களிடம் குவிந்திருந்தது, மக்களிடம் வங்கி நடத்தி வசூலித்தது முதல் கிழக்கே காத்தன்குடி மக்களிடம் பிடுங்கியது, கடத்தலில் குவித்தது என ஏராளமான தங்கம் அவர்களிடம் இருந்தது இறுதி யுத்தத்தில் தோல்வி முகம் தெரிய அவர்கள் காடுகளில் ஆங்காங்கு அதனை புதைத்து வைத்தனர் முன்பு அமைதிபடை காலத்தில் இப்படி ஆயுதங்களை புதைத்து பின்னர் எடுத்த அனுபவம் அவர்களுக்கு ஏராளம் உண்டு என்பதால் அவர்களுக்கு சாதாரணம் ஆனால் மீள வர முடியாதவாறு அவர்கள் அழிக்கபட்டதால் அந்த தங்கத்தின் […]

ஹாட்ரிக் ரொனால்டோ

ஹாட்ரிக் அடித்து உலக கோப்பை போட்டியில் அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்திருக்கின்றார் கிறிஸ்டியானொ ரோனால்டோ ஸ்பெயினுக்கு எதிராக அவர் அடித்த ஹாட்ரிக் அவருக்கு பெரும் கவனத்தை கொடுத்துவிட்டது இனி இன்று ஐஸ்லாந்துக்கு எதிராக நடக்கும் போட்டியில் மெஸ்ஸி என்ன செய்யபோகின்றார் என உலகம் எதிர்பார்த்து  கொண்டிருக்கின்றது

விஜய் சேதுபதியின் “சேதுபதி” படம் ஒடிகொண்டிருக்கின்றது

விஜய் சேதுபதியின் “சேதுபதி” படம் ஒடிகொண்டிருக்கின்றது அந்த வேல்.ராமமூர்த்தியின் தாதா வேடத்தை கவனிப்பவர்களுக்கு அது யார் என சட்டென தெரிந்துவிடும், அதுவும் தென்மாவட்ட மக்களுக்கு உடனே புரியும் தென்னக பிரபல ரவுடி பசுபதிபாண்டியன் போன்றே தாடியும் ஆளுமாக கட்டமைக்கபட்ட பாத்திரம் அது. ஆக அது கூட தலித் மக்கள் படம்தான் , அதனை பற்றி எல்லாம் யாரும் பேசுவாரில்லை

சு.சாமி சும்மா கொளுத்தி போடவில்லை. விஷயம் பற்றி எரிகின்றது

சுப்பிரமணியன் சாமி இத்தாலியில் ராஜிவ் கொலைக்கு காரணமனவர் இருக்கின்றார் என சொன்னவுடன் மறுபடியும் ஈழபுலி அனுதாபிகள் உலகில் புயலடிக்கின்றது ராஜிவ் கொலையில் பிரதான குற்றவாளிகள் பிரபாகரன், பெண் புலி அகிலா, மற்றும் பொட்டு அம்மான் இதில் அகிலா இல்லை, அகிலா யார் என்றால் ராஜிவினை கொல்ல மனிதவெடிகுண்டாக பெண்ணை அனுப்பலாம் என திட்டமிட்டதே அவர்தான் இதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் தீக்குழந்தைகளை உருவாக்கி பெரும் இலக்கினை தகர்த்தவர் என பிரபாகரன் சொல்ல, இந்தியா கவனமாக குறித்தது […]

ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில்…..

ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருப்பதாக சுப்பிரமணிய சாமி புது குண்டை தூக்கி வீசிவிட்டார் அந்த போபர்ஸ் குவாட்ரோச்சி இருந்தாலும் அவரை கைகாட்டாலம் அவரும் செத்துவிட்டார், பின் யாரை சு.சாமி சுட்டி காட்டுகின்றார் என ஆளாளுக்கு மண்டையினை பிய்த்துகொண்டிருக்கின்றார்கள் முதலில் இந்த சு.சாமியினை பிடித்து விசாரித்தாலே பாதி சிக்கல் தீரும் இவர் அமைச்சராக இருந்தபொழுதுதான் ராஜிவிற்கான கருப்பு பூனை படை பாதுகாப்பு விலக்கபட்டது, அதன் பின்புதான் தனுவால் ராஜிவினை நெருங்க முடிந்தது கருப்புபூனை படை பாதுகாப்பு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications