பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காந்திஜியை ரயிலில் இருந்து தள்ளிய நிகழ்வு

காந்தியின் வரலாற்றை மாற்றிய சம்பவம் தென்னாப்ரிக்காவில் நடந்த , ரயிலில் இருந்து அவரை வெள்ளையன் தென்னாப்ரிக்காவில் இறக்கிவிட்டது இல்லை மிதித்து தள்ளியது, ஆம் வெள்ளையர் இருக்கையில் அவர் அமர்ந்திருக்க அங்கு வந்த வெள்ளையன் அவரை அடித்து கீழே தள்ளினான் அதுவரை சமத்து வக்கீலாக ஒழுங்காக சம்பாதித்துகொண்டிருந்த காந்தி இந்த சம்பவத்திற்கு பின்பே போராட வந்தார், அது அங்கு வெற்றிபெற்றபின் அந்த தைரியத்தில் இந்தியாவிற்கும் போராட வந்தார் இச்சம்பவம் நடந்து 125 ஆண்டுகள் ஆகிவிட்டன, சம்பவம் நடந்த ரயில் […]

அரே ரஜ்னிபாய் என்ன படம் அது : மோடி

“அரே ரஜ்னிபாய் என்ன படம் அது, நம்பிள்ளே கலாய்ச்சியாம் நிற்ய கம்பிளைன்ட்ஸ் வருதூ அய்யோ மோடிஜி அப்படில்லாம் இல்லஜி, இது சினிமாஜி அர்ரே பய்யா நானே பெர்ய நடிகன், நம்பிள் நானா படேகர்க்கே ஆக்ட் சொல்லி கொடுப்பான், என்கிட்டயே நடிக்கிற்யா? மோடிஜி பாபாஜி சத்தியமா இல்ல எங்கயோ தப்பு நடந்துட்டு இதெல்லாம் ஜெயாஜி கலைஞர்ஜிட்ட வச்சுக்கோ, நம்பிள்ட்டே வச்சிட்டா தொலைச்சுபுடுவான் ஜாக்கிரதே அய்யோ ஜி நான் என்ன செய்யணும்? இன்னும் 6 மாசத்திலே தேர்தல் வருது, ராமர் கோவில் […]

காலா படத்தை உன்னிப்பாக பார்த்துவிட்டு நல்ல விமர்சர்கள் சொல்வது இதுதான்

காலா படத்தை உன்னிப்பாக பார்த்துவிட்டு நல்ல விமர்சர்கள் சொல்வது இதுதான் அதாவது மாமனாருக்கும் அவர் மருமகன் தனுஷுக்கும் நெருடல் இருந்திருக்கலாம், ரஜினியினை பழிவாங்க துடித்த தனுஷ் ரஞ்சித் மூலம் அதை நிறைவேற்றி இருக்கின்றார். ஏற்கனவே விஐபி படத்தில் வில்லனுக்கு ரஜினியின் இளைய மருகமகன் பெயரை வைத்து குடும்பத்தில் புயல் வீச வைத்தவர் தனுஷ் என்பது கூடுதல் செய்தி இப்பொழுதும் ரஜினியினை ரஞ்சித்தை வைத்து , பாரிசாலனை வேலூரில் சிலர் தாக்கியதை போல் ஊமைகுத்தாக குத்தியிருக்கின்றார் என்கின்றார்கள் சம்பளம் […]

தமிழிசை அக்கா காலா படம் பார்த்த்தார்

தமிழிசை அக்காவும் காலா படம் பார்த்துவிட்டாராம், பார்த்துவிட்டு “கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு” என மனதில் உற்சாகமாக பாடிகொண்டு பேட்டி கொடுக்க வந்துவிட்டார். படத்தை படமாக பார்க்க வேண்டுமாம், அக்கா பொன்மொழிகளை அள்ளி தெளித்திருகின்றார். ஆனால் “மெர்சல்” படத்தை ஏன் அக்கா படமாக பார்க்கவில்லை என நாம் கேட்க கூடாது. அக்காவும் பக்கா அரசியல்வாதி ஆகிவிட்டார், ரஜினி என்றால் அக்காவிற்கு ஒரு தனி பாசம் வந்துவிடுகின்றது பிஜேபியினை ரஜினி கிழித்து எறிந்தாலும் , அக்காவிற்கு பாஷா ரஜினி […]

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி பங்கேற்றால் சர்ச்சை வரத்தான் செய்யும்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு சில காங்., தலைவர்கள் எதிர்ப்பு , இப்படி ஒரு சர்ச்சை ஓடிகொண்டிருக்கின்றது ஆர்.எஸ்.எஸ் மேடையில் காந்தியே இருந்தார், இவர்களுக்கென்ன? என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர் ராஜிவ்காந்தியும் முன்பொரு காலத்தில் பிரபாகரனோடு போஸ் கொடுத்தார், அதற்காக ராஜிவ் பிரபாகரனை ஆதரித்தார் என சொல்ல முடியுமா? விஷயம் அது அல்ல‌ ஆர்.எஸ்.எஸ் என்பது பாகிஸ்தான் போர் காலங்களிலும் , சீனப்போர் காலங்களிலும் தளபதி கரியப்பா, நேரு போன்றவர்களால் பாராட்டபட்டது என்பது வேறு […]

மறுபடியும் குழப்புகின்றது அமெரிக்கா

இந்த வடகொரிய அதிபரும் டிரம்பும் சந்திக்க 4 நாட்களே உள்ள நிலையில் மறுபடியும் குழப்புகின்றது அமெரிக்கா அமெரிக்க உயர் அதிகாரி ஒரு இடத்தில் இதுபற்றி ” அட அந்த கிம் முழங்காலில் நின்று கெஞ்சி அழுத பின்புதான் நமது மாண்புமிகு அதிபர் டிரம் சம்மதித்தார்” என சொல்லிவிட விஷயம் பற்றி எரிகின்றது மானகொரியன் கிம் பக்கம் இருந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் கடும் எதிர்ப்பு வரும், மறக்குடி வடகொரியா இதனை சும்மா விடாது அடுத்து என்ன நடக்குமோ […]

ஈழத்தில் சாதிக் கொடுமை….

ஈழம், யாழ்பாணம் தமிழர் தொப்புள் கொடி இன்னபிற விஷயங்களுடன் கலைஞரும் திமுகவும் அவருக்கு துரோகம் இழைத்தது என சொல்லிகொண்டிருப்பவர்கள் இதனை கவனிக்கலாம் யாழ்பகுதியில் கண்ணகை ஆலயம் உள்ளது, அங்கு நடந்திருக்கும் சம்பவம் அப்படி கண்ணகை என்பது கண்ணம்பாள் சாமி வகையறா, கண்ணகிக்கு வேறு இடங்களில் அங்கு கோவில் உண்டு இங்கு திருவிழா கொண்டாடி இருக்கின்றார்கள், சிக்கல் சாதி வடிவில் வந்திருக்கின்றது ( சாதிய வன்மங்களுக்கு தமிழகத்தை விட தீபற்றி எரியும் பகுதி அது, புலிகள் ஈழத்தையே எரித்ததால் […]

ரஜினி நம்பிக்கைகுரிய மனிதரே அல்ல

பார்க்கும் இடமெல்லாம் கலைஞரை வணங்குவார் ரஜினி, 1996ல் கலைஞருடன் அவர் காட்டிய நெருக்கம் உலகறிந்தது பின் சட்டென மாறினார், என் வோட்டு இரட்டை இலைக்கு என்றார், வாக்களித்ததை கூட உலகெல்லாம் வீடியோவில் காட்டினார் கலைஞர் அமைதியாக சொன்னார்., “வாக்களிப்பது இவர் சொந்த விஷயம், ஆனால் இப்படி பகிரங்கமாக காட்ட வேண்டுமா? இந்த மனிதர் நம்பிக்கைகுரியவர் அல்ல” ஜெயா இதனால்தான் ரஜினியினை ஓரமாக‌ நிறுத்தியே வைத்திருந்தார், என்னதான் ரஜினி அம்மா ஜெயாஜி என்றாலும் ஜெயா அசரவில்லை ரஜினி நம்பிக்கைகுரிய […]

அந்த பெயரை மொத்தமாக அழிக்க வந்திருக்கும் படம் காலா

மும்பை அன்று சிறு தீவுகள் தொகுப்பு, மராட்டிய அரசர்களிடமிருந்து போர்த்துகீசியர் கைக்கு சென்றது பின்பு ஏதோ ஐரோப்பிய அரச திருமண‌ சம்பந்த விவகாரத்தில் அது பிரிட்டனுக்கு வந்தது, பிரிட்டன் அந்த மீன்பிடி தீவினை வணிக மையமாக மாற்றியது பம்பாய், ஹாங்காங், பினாங் எல்லாம் வெள்ளையனின் அந்த வகையறா. மராட்டிய பகுதியில் பருத்தி அபாரமாக விளைய மும்பையில் மில்கள் வந்தன, அதற்கு தொழிலாளர்கள் தேவைபட்டனர் மில் முதலாளிகள் எல்லாம் பார்சி, குஜராத்திவம்சம் என்றே இருந்தது 1900களிலே தென்னகத்தில் விவசாயம் […]

1986ல் காணாமல் போன ரஷ்ய விமானி சோர்ஜி மீண்டு திரும்பினார்

ஒவ்வொருவர் வாழ்வும் ஒவ்வொருவர் வகையில் விசித்திரமானது, அதில் இந்த ரஷ்யருக்கு ஏற்பட்டிருக்கும் நிலை மகா விசித்திரமானது அது 1986ம் ஆண்டு சோவியத் ரஷ்யா ஆப்கனில் நிலை கொண்ட நேரம் அந்த 30 வயது சோர்ஜி பேட்டலிக் எனும் பைலட் விமானத்தை ஓட்டி சென்றார், விமானத்தையும் அவரையும் காணவில்லை சோவியத் ஆப்கனிலிருந்து வாபஸ் ஆனபின்பு அவரை காணாமல் போனவர் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள், அவர் குடும்பத்தாரும் அவர் படத்திற்கு மாலை போட்டுவிட்டு ஊதிபத்தி கொளுத்திவிட்டனர் கர்பமாக இருந்த மனைவியும் மகளை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications