பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தவறின் மேல் தவறு செய்கின்றார் ரஜினி…..

அந்த ஜெயலலிதா அப்பொழுது நடிகை, தான் தமிழச்சி என பத்திரிகைக்கு சொல்லிவிட்டு பெங்களூர் படபிடிப்பிற்கு சென்றார் இதே வாட்டாள் நாகராஜ் “கன்னட துரோகியே மன்னிப்பு கேள்” என அவர் தங்கிய வீட்டை முற்றுகையிட்டு பயமுறுத்தினான் படகுழுவும் இன்னபிற சக்திகளும் எவ்வளவோ கெஞ்சியும் “நான் தமிழச்சி, ஒருகாலமும் இவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என தமிழிலே பேசி தைரியமாக நின்றார் ஜெயா. அதன் பின் சட்ட நடவடிக்கை மூலம் விரட்டபட்டான் நாகராஜ் தன்னை மலையாளி என்றவர்களுக்கு பதிலடியாக கேரளா […]

பாவம் அந்த‌ நீதிபதி ஆறுமுகசாமி

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு பாதாம் அல்வா வழங்கப்பட்டதா மருத்துவர்களிடம் விசாரணை – செய்தி ஏதோ ஒரு படத்தில் இனிப்பு நீர் தாக்கிய‌ கிழவனுக்கு ஜாங்கிரி கொடுத்து கொன்று கவுண்டமணியும் செந்திலும் சொத்துக்களை பறிக்க திட்டமிடுவார்கள் அந்த காமெடி காட்சி அப்பல்லோவிலும் அரங்கேறிற்றோ என்னமோ? பாவம் அந்த‌ நீதிபதி ஆறுமுகசாமி, “உன்ன எவண்டா ஜாங்கிரி கொடுக்க சொன்னது?” என கொதிக்கும் கவுண்டமணியின் நிலை போல் ஆகிவிட்டது அவர் நிலை.  

காவேரி வேறு , காலா வேறு

கன்னட தேர்தலுக்காக காவேரியில் காலம் தாழ்த்தியவர்கள், இப்பொழுது காலா சினிமாவிற்காக காலம் தாழ்த்த முயற்சிக்கின்றார்கள் அரசியலில் கொள்கையாளர்கள் இருக்க வேண்டுமே அன்றி, சினிமாக்காரர்கள் இருந்தால் என்னாகும் என்பதற்கு நடக்கும் சம்பவங்களே சாட்சி காலா என்பது எவனோ ஒரு சினிமாக்காரன் முதலீடு செய்திருக்கும் படம், இது கன்னடத்தில் ஓடினால் என்ன? ஓடாவிட்டால் என்ன? சினிமாவினை சினிமாவால் எதிர்க்க இங்கிருக்கும் மற்ற கன்னட நடிகர்களை வாட்டாள் நாகராஜ் வீட்டுக்கு அனுப்புங்கள் மாறாக கமலஹாசன் சென்று குமாரசாமியிடம் கெஞ்சுவதும், தனுஷ் நீதிமன்றம் […]

 எனது கருத்துகள் தவறாக சித்திரிக்கப்படுகின்றன: ரஜினி

  மிஸ்டர் ரஜினி காலாவிற்காக கன்னடத்தில் கெஞ்சிய நீங்கள், காவேரிக்காக மட்டும் மவுன போராட்டம் ஏன் நடத்தினீர் காவேரியினை திறந்து விடுங்கள் என்றாவது கன்னடத்தில் பேசினீரா? ஏன் பேசவில்லை? இப்படிபட்ட சுயநலவாதியா நீங்கள் உமது படம் ஓடுவதற்கு கன்னடனிடம் கெஞ்சுவதும், காவேரி விவகாரத்தில் மவுன விரதம் இருப்பதும் தமிழர் நெஞ்சில் எவ்வளவு வெறுப்பினை ஏற்படுத்தும் என்பதை நினைத்தீரா? இதெல்லாம் மனசாட்சி உள்ள மனிதன் செய்யும் விஷயமா? துளி மனசாட்சி இருந்தாலும் இப்படி செய்வீரா? ச்சீ..தூதூ… இப்படி பணத்திற்காக […]

தூத்துக்குடி பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் இந்த விஜய் என்பவருக்கு வந்திருக்கும் சமூக பொறுப்பினை கண்டால் ஆன்மீக அரசியல், மய்யம் வரிசையில் அடுத்து இவர்தான் எனும் சந்தேகம் வலுக்கின்றது இவரின் அரசியல் என்னவாக இருக்கும்? “அனாதை தமிழர் அரசியல்”, “ஆதரவற்றோர் தமிழர் அரசியல்” என்ற வகையில் வரும்போலிருக்கின்றது அது இருக்கட்டும், இவர் எப்படி தூத்துகுடி வரை சென்றுவிட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால் வன்முறை வெடித்தது என சொல்லாமல் வரலாம்? […]

இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து

இந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து நடத்துவது மரபு, அனால் ரத்து செய்யபடுவது இது முதல்முறை அல்ல‌ கலாம் ஜனாதிபதியாக இருந்தபொழுது அதனை ரத்து செய்தார், ஆனால் அதற்கான பணத்தை அனாதை இல்லங்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்தார் பின்பு பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி அந்த விருந்தை மீண்டும் கொண்டுவந்தனர் இப்பொழுது இருக்கும் ஜனாதிபதி கோவிந்த், இது மதசார்பற்ற நாட்டின் ஜனாதிபதி இல்லம் அதனால் இங்கு இப்தார் விருந்து, […]

இலங்கையில் விடுதலைப் புலிகளின் 1500 கோடி ரூபா சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகிறது ; செய்தி

இலங்கையில் விடுதலைப் புலிகளின் 1500 கோடி ரூபா சொத்துகள் அரசுடைமையாக்கப்படுகிறது ; செய்தி அதாவது புலிகள் பயன்படுத்திய கட்டங்கள், படகுகள் இன்ன பிற சொத்துக்கள், நிலங்கள் எல்லாம் அரசு எடுத்துகொண்டது இது இந்திய பணத்தில் சுமார் 900 கோடி வரலாம் ஆனால் யாரும் கண்டிக்கவில்லை ஏன் என்றால் ஆட்சியில் இருப்பது பாஜக, கலைஞரும் ஓய்ந்துவிட்டார் இல்லை என்றால் எப்படி கிளம்புவார்கள்? இப்படித்தான் இலங்கை அரசு பெரும் அநீதி செய்திருகின்றது, புலிகளின் சொத்து ஈழமக்களுக்கோ இல்லை பிரபாகரனின் அண்ணனான […]

2004ல் இந்த நாளில்தான் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது

2004ல் இந்த நாளில்தான் தமிழ் செம்மொழி என தமிழன் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது அறிவிக்கபட்டது உலகின் தொன்மையான 6 மொழிகளில் ஒன்றான தமிழுக்கு இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து தாமதமாக கொடுக்கபட்டது என்றாலும் , கிடைக்கபெற்றது இதற்காக கலைஞர் உழைத்த உழைப்பு மறக்க முடியாதது, தன் வாழ்விலே அதனை செய்வேன் என சொல்லி பெற்றும் கொடுத்தார், அவரின் அரசியல் வாழ்வில் பெரு வெற்றி அது. இதனை தொடர்ந்த செம்மொழி மாநாடும், “செம்மொழியான‌ தமிழ்மொழியே..” எனும் ஒருவகையான கலைஞரின் வசன […]

குஷ்பூவின் கை ஓங்குகிறது, காங்கிரஸில் பரபரப்பு

தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பிலிருந்து நக்மா மாற்றம்; குஷ்பூவின் கை ஓங்குகிறது, காங்கிரஸில் பரபரப்பு இதில் என்ன பரபரப்பு நக்மா என்ன? அந்த ஐஸ்வர்யா ராய் தமிழக காங்கிரஸுக்கு வந்தால் கூட தலைவி முன்னால் தாக்குபிடிக்க முடியாது நாம் எப்பொழுதும் சொல்லிகொண்டே இருந்தோம், தலைவி சாமான்யம் அல்ல, அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு அவரின் தொண்டர்படையின் பலம் கொஞ்சம் அல்ல என சொல்லிகொண்டிருந்தோம் அப்பொழுதெல்லாம் பலர் நகைத்தார்கள், சிரித்தார்கள் இதோ எங்கள் தெய்வதை எதிர்த்த நக்மா ஓட […]

ஐரோப்பியாவில் பசு மாட்டு அரசியல்…

பசுமாடு வைத்து இந்தியாவில்தான் அரசியல் செய்வார்கள் என்றால் ஐரோப்பாவிலும் ஆரம்பித்துவிட்டார்கள் பொதுவாக ஐரோப்பிய நாடுகள் சிறியவை என்பதாலும், பால் அவர்களின் மகா முக்கிய பொருள் என்பதாலும் மாடுகள் வளர்ப்பிலும் அவைகளால் பரவும் நோய்கள் பற்றியும் கவனமாக இருப்பார்கள் ஒரு மாடு எல்லை தாண்டி செல்லவேண்டுமனால் அதற்கு நோயில்லை என மருத்துவர் கொடுத்த சான்றிதழுடனேத்தான் அந்த மாடும் அதன் உரிமையாளரும் எல்லை தாண்ட முடியும் இது அவர்களுக்குள்ள விதி இந்நிலையில் தமிழகத்து வைகோ, சைமன், கமலஹாசன் போல திசை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications