பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காலா படத்துக்கு எங்குமே வரவேற்பில்லை

காலா படத்துக்கு எங்குமே வரவேற்பில்லை, அவரின் தீவிர ரசிகர்கள் கூட தேவதாஸ் கோலத்தில் ரஜினியினை காண விரும்பவில்ல்லை ரஜினியினை அவரின் ரசிகன் இந்த பரதேசி கோலத்தில் காண விரும்பமாட்டான், அவன் மனநிலை அப்படி ஏன் டிக்கெட் மந்தம் என்றால் ரசிகனின் கருத்துபடி படம் எப்படி இருக்கும் என்றால் இப்படித்தான் ரஜினிக்கு ஒரு மாதிரி பெயிண்ட் அடித்து , ஒரு மாதிரி ஆடை உடுத்தி போராளி போல உலாவ விட்டிருப்பார் ரஞ்சித், ரஜினி ஸ்டைலாக நடப்பார், ஸ்டைலாக சிரிப்பார் […]

உலகெல்லாம் இன்று சுற்று சூழல் தினம்

உலகெல்லாம் இன்று சுற்று சூழல் தினம் கொண்டாடுகின்றார்கள் என இந்தியாவும் கொண்டாடுகின்றதாம் உலகின் மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருக்கின்றது, அங்கு இருந்துகொண்டு மோடி என்னவோ முழங்கிகொண்டிருக்கின்றார் சுற்றுபுற சூழல் எல்லாம் அழிய ஆரம்பித்து நெடுங்காலம் ஆயிற்று, என்று தொழில்புரட்சி என ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் எந்திரமயம் ஆனதோ அன்று தொடங்கியது இந்த அழிவு ஆனால் அவர்கள் பின்னாளில் விழித்துகொண்டார்கள் , எதெல்லாம் ஆபத்தான சுற்றுசூழலை கெடுக்கும் விஷயமோ அதை எல்லாம் மூன்றாம் உலக நாடுகளில் தங்களின் […]

கனிமொழி கவிதைகள்…

  கனிமொழி என் இலக்கியவாரிசு என நேரடியாக சொல்லி அவர் அரசியல்வாரிசு அல்ல என மறைமுகமாகவும் சொன்னவர் கலைஞர் இலக்கிய வாரிசான‌ கனிமொழியினை பின் ஏன் எம்பி ஆக்கினார் எனது கலைஞரின் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அந்த கனிமொழி அவ்வப்போது கவிதை எல்லாம் எழுதுவார், அது கலைஞரின் சில வரிகள் போல ஓரளவுதான் புரியும், சில நேரம் கமலஹாசன் பேச்சை போலவே இருக்கும் கனிமொழி கவிதையினை ரசித்து கைதட்ட மனுஷ் போன்ற பெருங்கவிகள் முன்பு உண்டு. […]

குழந்தை பெத்துக்கிட்டா கவர்ச்சியா ஆடக்கூடாதா : நடிகை கஸ்தூரி ஆதங்கம்

  குழந்தை பெத்துக்கிட்டா கவர்ச்சியா ஆடக்கூடாதா : நடிகை கஸ்தூரி ஆதங்கம் எந்த நாய் உங்களை கவர்ச்சியாய் ஆடகூடாது என சொல்லிற்று? அவனை வன்மையாக கண்டிக்கின்றோம் முடிந்தால் அவனை கம்பத்தில் கட்டி தோலை உரிக்கவும் செய்கின்றோம், எவ்வளவு பெரிய அயோக்கியவன் அவன்?? நீங்கள் கவர்ச்சியாக‌ ஆடிகொண்டே இருங்கள், பார்க்க தமிழ் கூறும் நல்உலகம் எப்பொழுதும் தயாராக இருக்கின்றது உங்கள் கவர்ச்சி கலைச்சேவை எந்நாளும் தேவை… தயவு செய்து மனம் தளர்ந்துவிடாதீர்கள்..         காவிரி […]

ஜூன் 5 : ஈழ முதல் போராளி சிவகுமார் நினைவுநாள்

அது 1974ம் ஆண்டு, தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது. இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. அது சிறிமாவோ பண்டாரநாயக அரசு, ஒரு யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ ஒரு கடும் […]

சங்கம் புதிதாக குஷ்பு மதம் என்றொரு மதத்தை தொடங்கிவிட்டது

சாதி சான்றிதழை கிழித்துவிட்டால் சாதி ஒளிந்துவிடுமாம், அமீரும் ரஞ்சித்தும் கண்டுகொண்டார்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தில் அவர்கள் குருநாதன் பாரதிராஜா என்பவரை காணவில்லை முதலில் இவர்கள் குடியுரிமையினை கிழித்துவிட்டு இந்தியர் அல்ல என அடித்து விரட்ட வேண்டும் ஏம்பா அமீர், ரஞ்சிதிடம் சென்று சாதி ஒழிப்போம் என்றால் வருவானா? சாதி இல்லாமல் அவனால் எப்படி வாழ முடியும்? இவ்வளவு பேசும் அமீர் தான் இஸ்லாமியன் இல்லை என தாடி எடுத்துவிட்டு மதத்தை துறப்பானா என்றால் இல்லை சாதி […]

காவேரி முதல் ஜல்லிக்கட்டு வரை

காவிரி விவகாரம், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் : கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு ஒரு மயிறு பேச்சுவார்த்தையும் வேண்டாம், உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவேரியினை திறந்துவிடுங்கள் என பழனிச்சாமி சொல்ல வேண்டும் வழக்கு முடிந்தாயிற்று, காவேரி வாரியம் அமைந்தாயிற்று, அரசிதழிலிலும் முடிவு வந்தாயிற்று பின் என்ன பேச்சுவார்த்தை வேண்டிகிடக்கின்றது??? மிஸ்டர் பழனிச்சாமி, ஏய் குமாரசாமி உன்னிடம் பேச வேண்டிய அவசியமில்லை என தைரியமாக சொல்லுங்கள், எஜமான் மோடி எவ்வளவு சந்தோஷபடுவார் தெரியுமா?  கன்னட முதல்வர் குமாரசாமியினை சந்தித்து குறுவை […]

படிப்பு மட்டுமே வாழ்க்கை என்பது அல்ல‌

அந்த பிரதீபா நன்றாகத்தான் படித்திருக்கின்றாள், ஆனால் நீட் தேர்வு தோல்வி சோகத்தில் தற்கொலை செய்திருக்கின்றாள் மிகபெரும் சோகம் எனினும் நிச்சயம் அப்பெண் அப்படி செய்திருக்க கூடாது ஆமை தன் முட்டையின் வாய் பகுதியினை கடலை நோக்கியே திருப்பி வைத்திருக்குமாம், காரணம் முட்டையினை விட்டு வெளிவரும் குஞ்சுகள் நேரே கடலுக்கு செல்ல ஏற்பாடாம், இல்லை என்றால் அக்குஞ்சுகள் திசைமாறி செல்லுமாம் அப்படி பத்தாம் வகுப்பிலிருந்தே டாக்டர் கனவு கண்ட அந்த மாணவி, பின் பல நெருக்கடிகளால் திசைமாற , […]

ஜூன் 4 ராஜிவின் மாபெரும் துணிச்சல் தெரிந்த நாள்

இலங்கையில் வடமாராட்சி என்றொரு பகுதி உண்டு, அன்று புலிகளின் கோட்டை அது அப்பொழுது இருந்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே ஆப்பரேஷன் லிபரேஷனை தொடங்கினார், அதாவது புலிகளை முற்றிலும் ஒழிப்பது பிரபாகரனின் ஏ1 முகாம் உட்பட பல்லாயிரம் தமிழரோடு அப்பகுதியினை வளைத்தது சிங்களபடை, புலிகள் அப்பொழுது தற்கொலை தாக்குதல் வேறு நடத்தியதில் சிங்கள படை கொலை வெறியில் இருந்தது மில்லர் எனும் புலி நடத்திய தாக்குதலில் பல ராணுவத்தார் கொல்லபட சீறி நின்றது சிங்கள தரப்பு இனி பொறுப்பதில்லை, […]

ஒரு வழியாக டிரெம்ப் வழிக்கு வந்துவிட்டார்

ஒரு வழியாக டிரெம்ப் வழிக்கு வந்துவிட்டார், வடகொரிய அதிபரை சிங்கப்பூரில் சந்திக்க ஒப்புகொண்டுவிட்டார் விட்டால் புட்டீன் வடகொரிய அதிபரை சந்தித்துவிடுவார் அதன் பின் நம் மதிப்பு என்னாவது என ஓடி வருகின்றார் டிரம்ப் அமெரிக்க அதிபர் வருகின்றார் என்றால் அமெரிக்க உளவுதுறை முதல் பாதுகாப்பு அதிகாரிகள் வரை குவிந்து பாதுகாப்பினை பலபடுத்துவார்கள் கடலில் நீர்மூழ்கி முதல் வானத்தில் செயற்கைகோள் வரை தீவிரமாக அமெரிக்க அதிபருக்காக காவல் செய்யும் அவர்களிடம் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் காவலை செம்மைபடுத்துகின்றோம் என்பதை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications