பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கடலூரில் காபரே… இன்னும் பிற ….

அது 1982ம் ஆண்டு, மதுகடை திறப்பால் தாய்குலங்களிடம் இமேஜ் சரிந்திருந்த ராமசந்திரன் ஜெயலலிதாவினை வலுகட்டாயமாக அழைத்து வந்து கட்சியில் சேர்த்து கடலூர் மாநாட்டிலும் பேசவைத்தார் அதன்பின் அலங்கார வாகனத்தில் ஜெயலலிதா கடலூர் தெருக்ககளில் அழைத்துவரபட்டார். அதிமுகவிலே சர்ச்சை வெடித்தது, ஆர்.எம் வீரப்பன் கோஷ்டி குதித்தது இன்னும் ஏராளமான சர்ச்சை பேச்சுக்கள் வந்தன‌ முரசொலி தனக்கே உரித்தான ஸ்டைலில் செய்தி வெளியிட்டது, எப்படி? “கடலூரில் காபரே” அந்த அட்டகாச முரசொலி இப்பொழுது முழுக்க தன் இடிமுழக்கத்தை இழந்து நிற்கின்றது. […]

தில்லி தமிழ் நாடு இல்லங்கள் பெயர் மாற்றம்…

இந்த பாஜக செய்யும் பெயர் மாற்றி விளையாடும் விளையாட்டிற்கு டெல்லி தமிழ்நாடு இல்லமும் தப்பவில்லை அதாகபட்டது பொருளாதார சிக்கலா? பண நோட்டின் கலரை மாற்று, பாஸ்போர்ட் சிக்கலா? அதன் கலரை மாற்று இப்படி பெயின்ட் அடித்துவிளையாடும் ஆட்சி பாஜகவுடையது, நியுமராலாஜி போல கரலாலாஜி எனும் நம்பிக்கையில் ஆண்டு கொண்டிருப்பவர்கள் அப்படிபட்டவர்கள் கண்ணில் டெல்லி தமிழ்நாடு இல்லம் பட்டிருக்கின்றது. எல்லா மாநில முதல்வரும் தங்க டெல்லியில் வீடு உண்டு அப்படி தமிழக முதல்வர் தங்கும் இல்லம் தமிழ்நாடு இல்லம் என […]

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக – கடம்பூர் ராஜூ

இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக – கடம்பூர் ராஜூ காஞ்சிமட சங்கராச்சாரியாரை ஓடவிட்டு அடித்த கட்சி எது? அதென்ன இந்துக்களுக்கு ஆதரவான கட்சியா? கபாலீஸ்வரர் குளம் தூர்வாரியது முதல் திருவாருர் தேரினை ஓடவைத்தது வரை திமுகவின் இந்து ஆலய பணி பெரிது. திருவண்ணாமலை ஆசிரமத்தை நெருக்கும் விதமாக ஜெயா எழுப்பிய அரசு கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றி அந்த ஆசிரமத்தை காப்பாற்றியவர் கலைஞர், மறுக்க முடியுமா? அவ்வளவு ஏன்? அண்ணா ஆட்சியிலே கும்பகோண மகாமக குளத்தினை சீர் […]

மலேசியாவில் அண்ணா நினவு தினம் ….

நேற்று அண்ணா நினைவுநாள், தமிழகம் தவிர உலகெல்லாம் நினைவு கூர்ந்தார்கள். 1965ல் அண்ணா மலேசியா வந்து உரையாற்றியதை எல்லாம் மலேசிய வானொலி ஒளிபரப்பியது “எல்லா நாடுகளிலும் தமிழர் இருக்கின்றார்கள், மலேசியாவிலே வாழுகின்றார்கள்..” என்ற தன் கரகரத்த குரலில் அண்ணாவின் குரலை கேட்டபொழுது உள்ளம் சிலிர்த்தது உண்மையில் அம்மனிதனின் பேச்சு பெரும் அறிஞனின் பேச்சை போலவே இருக்கின்றது, எதுகை மோனை வார்த்தைகள் எல்லாம் தாவி வந்து அவர் பேச்சில் அமைகின்றன. அவரை பேரறிஞர் என சொன்னதில் ஆச்சரியமில்லை. சென்னைக்கு […]

எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை

எரித்திரியாவில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ன ஒரு அருமையான சட்டம், இது அல்லவா அரசு?. நமக்கும் வந்து வாய்த்திருக்கின்றார்களே கிராதகர்கள், அதாவது அங்கு மக்கள் தொகை குறைந்துவிட்டதாம்,இதனால் ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்து மக்கள் தொகையினை பெருக்க வேண்டுமாம், இதனால் இந்த சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்திருக்கின்றது. இப்படி ஒரு சட்டம் இயற்றிவிட்டு வெளிநாட்டு ஆண்களுக்கு இங்கு குடியுரிமை தரப்படும் என்றொரு அறிவிப்பினை அந்நாடு ஏன் செய்யவில்லை என்பதுதான் ஆச்சரியம் அப்படி மட்டும் அறிவிப்பு […]

எப்படி சமாளிக்க போகின்றார் டிரம்ப்?

  டிரம்பினை விரட்டியே தீருவதென்று சிலர் களமிரங்கி இருப்பது தெரிகின்றது, தேர்தலில் ரஷ்ய உதவி கோரினார் என்ற விவகாரம் ஓடிகொண்டிருக்கும்பொழுதே இப்பொழுது அடுத்த பரபரப்பு விஷயம் வருகின்றது விஷயம் கிட்டதட்ட கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி போன்றது (டிரம்ப் பெயர் இப்படி அடிபட, அந்த சந்தோஷத்தில் வடகொரிய அதிபர் ஒரு சுற்று பருத்துவிட்டாராம்) அதாவது டிரம்ப் கிட்டதட்ட அந்தபுர விஷயங்களில் நெற்றிக்கண் ரஜினி போன்றவர் மன்மத லீலை கமலஹாசன் போன்றவர் அப்படி ஒரு நடிகையுடன் முன்பு நெருக்கமாக இருந்ததாகவும், […]

தலைவி 30 நிமிடம் கூடுதலாக பேசியதற்கு வழக்காம்…

நெல்லை முக்கூடலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் 3 மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் வரவில்லையாம் அப்படி சில நபர்கள் உண்டா என்பது வேறுவிஷயம். ஆனால் கூட்டம் அள்ளியிருக்கின்றது. தங்க தலைவியின் பேச்சை கேட்க பெரும் கூட்டம் ஆரவாரமாக கூடியிருக்கின்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன‌ 1980களில் ஜெயலலிதாவிற்கு இருந்த அதே வரவேற்பு தலைவிக்கு இருக்கின்றது என்பதை இப்பொழுது எல்லோரும் ஒப்புகொள்ள தொடங்கியாயிற்று, அன்று ஜெயாவிற்கு இருந்த அதே தைரியம் இப்பொழுது குஷ்பு ஒருவருக்கே இருக்கின்றது என தமிழகமும் நோக்க தொடங்கிவிட்டது […]

தேசிய ஜிஎஸ்டி ஆணையாளர், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது

தேசிய ஜிஎஸ்டி ஆணையாளர் லஞ்ச வழக்கில் சிபிஐயினால் கைது செய்யபட்டார், பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது இவை எல்லாம் மிக உயர் பதவியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கி சிக்கிய செய்திகள், சாதாரண பதவி பற்றி சொல்ல வேண்டியதில்லை ஜிஎஸ்டி ஆணையாளர் லஞ்சம் வாங்கி சிக்கியது சாதாரணம் அல்ல, இது நிதித்துறைக்கு கீழ் வரும் இலகா ஆனால் நிதியமைச்சர் ஜெட்லி பட்ஜெட் தொடரில் என்ன சொன்னாரென்றால் நாட்டை ஊழலில் இருந்து விடுவித்ததாக பெருமையாக வாசித்துகொண்டிருந்தார் […]

சீமான் சரத்குமார் இணைந்து செயல்பட முடிவு

சீமான் சரத்குமார் இணைந்து செயல்பட முடிவு : செய்தி ஆக அங்கிள் சைமன் கூட்டணிக்கு தயாராகின்றார் என்பது புரிகின்றது. இவ்வளவு நாளும் கூட்டணி கிடையாது, புலி வேட்டைக்கு போகும் பொழுது தனியாகவே செல்லும், நாய்தான் கூட்டமாக செல்லும் என்றெல்லாம் பேசிகொண்டிருந்தவர் சைமன் ஆக புலி நாயாகி கொண்டிருக்கின்றதா? அல்லது புலிவேடமிட்ட நாய் வேடத்தை கலைக்கின்றதா என்பதை தமிழகமே முடிவு செய்யட்டும் எந்த கொள்கை அடிப்படையில் இருவரும் கூட்டணி ஆனார்கள், தேடுவாரற்று போன தார்மீக அடிப்படையாக இருக்கலாம் என்றாலும் […]

நெல்லை காங்கிரசில் தலைவி குஷ்புவிற்கு எதிராக நடந்ததுதான் என்ன?

நெல்லை காங்கிரசில் தலைவி குஷ்புவிற்கு எதிராக நடந்த விஷயங்களை சங்கம் சும்மா விடுமா? தீவிர புலனாய்வில் சங்கத்தின் உளவுபடை இறங்கியது, அது கொடுத்த தகவல் அறிக்கை இப்படி சொல்கின்றது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையினை விட குழப்பங்கள் அதிகமுள்ள கட்சி காங்கிரஸ் என்பது உலகறிந்தது. கோஷ்டிக்குள்ளும் கோஷ்டிகள் இருக்கின்றது என்பது யாரும் அறியாதது அதாகபட்டது நெல்லை பகுதி பொறுப்பில் இருப்பவர்கள் சங்கரபாண்டியன் எனும் கோஷ்டியினராம். இவர்கள் பெயரை பார்த்தாலே சில விஷயங்கள் உங்களுக்கு புரியலாம் ஆம், இவர்கள் சில […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications