பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எங்கிருந்து இத்தேசம் உருப்படும்?

சங்கரின் கொலையாளிகளை தூக்கிலிட்டே தீரவேண்டுமாம், ஆனால் ராஜிவ் கொலையாளிகளை தொட்டுவிட கூடாதாம், அப்படியே விடுவித்துவிட வேண்டுமாம். இவ்வளவிற்கும் சங்கர் தனியாக செத்தான், ராஜிவ் 17 பேரோடு செத்தார். கை கால் போனவர்கள் கணக்கு தனி ஆக நாட்டுபற்றை விட சாதிவெறி ஓங்கி நிற்கும் சமூகம் இது என்பது தெரிகின்றது பின் எங்கிருந்த்து இத்தேசம் உருப்படும்? சேது சமுத்திர ராமர் பாலம் மனிதரால் கட்டபட்டது : அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவிப்பு இவ்வளவு நாளும் இன்றி இப்பொழுது ஏன் அவசர […]

ஒக்கி புயலால், நான்கு மீனவர்கள் மட்டுமே இறந்து உள்ளனர்

ஒக்கி புயலால், நான்கு மீனவர்கள் மட்டுமே இறந்து உள்ளனர். 13 நாட்டு படகுகளில் இருந்த, 35 மீனவர்களையும், 43 விசை படகுகளில் இருந்த, 427 மீனவர்களையும், கண்டுபிடிக்க வேண்டியுள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் ஆக இறந்த 4 மீணவர்களுக்குத்தான் 20 லட்சம், மற்ற மீணவர்கள் உடல் கிடைத்தால்தான் அது இறந்தவர் கணக்கில் வருமாம். இல்லாவிட்டால் அவர்கள் அப்படியே அண்டார்டிக்கா சென்று வாழ்வார்கள் என நாமாக எண்ணிகொள்ள வேண்டும் எப்படிபட்ட பாதிப்பு அது? எவ்வளவு அழிவு? ஆனால் இவர் […]

பிரதமருக்கு பறக்காவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் போல..

காந்தி எளிமையானவர்தான் ஆனால் அவர் எளிமையாக வாழ பெரும் பணம் செலவழிக்க வேண்டும் என்றொரு வரி முன்பு பிரபலம் இந்த மோடி என்பவரும் இப்பொழுது அதே சிக்கலுக்கு வருகின்றார், லட்சகணக்கு விலை உள்ள‌ கோட் போடுகின்றார், பேஷன் ஷோவிற்கு செல்வது போல டிசைன் டிசைனாக உடுத்துகின்றார் என்றெல்லாம் முன்பு சர்ச்சை வந்தது இப்பொழுது காளான் சர்ச்சை வேறு வந்துள்ளது, தைவானில் இருந்து விலை உயர்ந்த காளானை வரவழைத்து உண்கின்றார் மோடி என சர்ச்சை வெடிக்கின்றது அவரிடம் கேட்டால் […]

சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை

சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை காவல்துறையின் மீது சில சர்ச்சைகள் இருந்தாலும் இப்படி உயிரை கொடுத்து மக்களை காப்பதும் காவல்துறையே, அந்த சில சர்ச்சைகள் கூட அரசியல் அழுத்தமாக இருக்குமே அன்றி இவர்களால் இருக்காது இதோ ஒரு அதிகாரி குற்றவாளியினை விரட்டும்பொழுது அவனால் சுடபட்டி இறந்துவிட்டார், மிக பெரும் தியாகத்தை செய்து குற்றவாளிகளை அடையாளம் காட்டி சமூக பாதுகாப்பிற்காக உயிர்விட்டிருக்கின்றார் இவரது தியாகம் மிகபெரிது, இந்த வீரமகனுக்கு வீரவணக்கம் இந்த காவலரின் கொலை வெளிதெரிகின்றது, அஞ்சலியும் […]

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா சாவித்திரி ராமகிருஷ்னன்

முகநூலில் ஏராளமான நண்பர்கள் கிடைத்ததை போல நல்லதொரு தாயும் கிடைத்தார் முதிர்ந்த வயது, அதற்கேற்ப‌ பக்குவபட்ட மனநிலை, எல்லோரையும் தன் பிறப்பு போல் நோக்கும் மனோபாவம் என மிக உயர்ந்த மனதிற்கு சொந்தக்காரர் அவர் Savithri Ramakrishnan மிக சிறந்த பக்திமான், பக்திகேற்ப வார்த்தையிலும் செயலிலும் அவ்வளவு மென்மை. அவரை நட்பாக பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அந்த தாயிடம் அவரின் உயர்ந்த பண்பை விட மிஞ்சி நிற்பது அற்புதமான ஆங்கில அறிவு உண்மையில் ஆங்கிலம் மிக பண்பாகவும் […]

கணவன் மீது ஆசிட் ஊற்றியது யார்?

ஆந்திரமாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உலகமே அதிரும் பெரும் விபரீத திட்டம் ஒன்று காதலர்களால் போடபட்டு அது பிடியும் பட்டு பெரும் பரபரப்பாகின்றது அதாவது ஒரு ஆணும் பெண்ணும் காதலித்திருகின்றார்கள் , திருமணமும் செய்திருக்கின்றார்கள். அதன்பின் வந்திருக்கின்றது சிக்கல் அப்பெண்ணுக்கு இன்னொருவன் மேலும் காதல் வந்திருக்கின்றது, அப்படியானால் முதல் கணவனை என்ன செய்ய? போ என்றால் போவனா? இதனால் இந்த கள்ளகாதலர்களின் திட்டபடி அவன் முகத்தில் யாரோ ஆசிட் ஊற்றினார்கள் என சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம் என […]

குமரி மக்களுக்கும் வாழ்த்தா சொல்லமுடியும்

உலக அழகிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி குமரி மக்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லை : சீமான் சீற்றம் என்னது? குமரி மக்களுக்கும் வாழ்த்தா சொல்லமுடியும் பாதுகாப்பு துறை அமைச்சரும், ஆளுநரும் வந்தது இவருக்கு தெரியவில்லையா? மத்திய அரசு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியிருப்பதையும் அன்னார் சொல்லமாட்டாரா? ஏன் பழனிச்சாமியே இப்பொழுதானே வந்திருக்கின்றார் அதனை பற்றி அன்னார் ஏதும் சொன்னாரா? சொல்ல மாட்டார் அவர் அப்படித்தான் அன்புசெழியனிடம் ஏன் வட்டிக்கு வாங்குகின்றார்கள்? என கேட்டவர் சீமான், ஏன் மீணவர்கள் கடலுக்கு […]

அது என்ன மூன்றாம் கருப்பு தமிழன்?

ரஜினியினை அவர் ரசிகர்கள் எப்படி தூக்கிவிட்டார்களோ, அப்படியே அவரை அதல பாதாளத்திலும் இழுக்க துணிந்துவிட்டார்கள் இல்லாவிட்டால் இப்படி எல்லாம் கட் அவுட் வைப்பார்களா? முன்பு காந்திக்கும் காமராஜருக்கும் இடையில் சிவாஜி படத்தை வைத்து அதற்கு உரையாற்ற ஜெயகாந்தனை அழைத்தார்கள், தனக்கே உரித்தான ஸ்டைலில் சீறினார் அவர் “இப்பக்கம் காலா காந்தி அப்பக்கம் காந்தி இடையில் ஏன் ஒரு சனியனை வைத்திருக்கின்றீர்கள்? இப்படித்தான் திமுகவில் ஒரு சாத்தானை வளர்த்தார்கள் அது தமிழ்நாட்டை சீரழித்துகொண்டிருக்கின்றது” இப்பொழுது நல்ல வேளையாக ஜெயகாந்தன் […]

லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி

லேட்டாக கன்னியாகுமரி வந்தாலும் , ஆறுதலோடு வந்திருக்கின்றார் பழனிச்சாமி இறந்தவர் குடும்பத்திற்கு 20 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கபடும், படகு போன்றவைகளுக்கு இழப்பீடும் வழங்கபடும் என சொல்லியிருக்கின்றார் பாதிக்கபட்டு போராட்டத்தில் இறங்கியோர் மீது பதியபட்ட வழக்குகளில் சில சலுகைகள் காட்டபடும் என சொல்லியிருப்பதும் நல்ல செய்தி வெறும் அறிவிப்போடு இல்லாமல், உடனே இந்த அறிவிப்புகள் செயல்வடிவம் பெற்றால் நிச்சயம் பழனிச்சாமியினை வாழ்த்தலாம் மாநில அரசு தன் உதவியினை அறிவித்துவிட்டடு, மத்திய அரசு என்ன செய்கின்றது […]

ரஜினி பிறந்த நாளையொட்டி எல்லா சேனலிலும் ரஜினி படமே ஓடுகின்றது

ரஜினி பிறந்த நாளையொட்டி எல்லா சேனலிலும் ரஜினி படமே ஓடுகின்றது பொல்லாதவன் என்றொரு படம் ஓடிகொண்டிருக்கின்றது, அந்த தாடியும் கண்ணாடியும் கொண்ட‌ இறுக்கமான முகத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கின்றது இந்த படத்தின் தாடியும் கண்ணாடியுமே பின்னாளில் பாட்ஷா, கபாலி என ரஜினி வந்து நிற்க காரணம், அது இன்றும் தொடர்கின்றது படம் அக்கால பார்முலா என்றாலும் நடிகை லட்சுமி அவ்வளவு அழகு. அழகு என்பதையும் மீறி மிகசிறந்த நடிகை ரஜினியிடம் விஷேசித்த ஒரு தன்மை இருக்கின்றது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications