பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடி தன் காதுகளை பொத்திகொள்வார்

ஏதோ காங்கிரஸ் ஆட்சியில் குஜராத் நாசமானதை போலவும், மோடி வந்துதான் அதனை காப்பாற்றியது போலவும் பிம்பம் காட்டிகொண்டிருக்கின்றார்கள் அதில் ஒன்றுதான் இந்திரா மோர்பி பக்கம் வந்தபொழுது மூக்கை மூடிகொண்டு வந்தார் என்பது அது ஆகஸ்டு 11/1979 அன்று பெரு வெள்ளத்தில் அப்பகுதி சிக்கி இருந்தது, பெரும் அழிவு கால்நடைகள் செத்து துர்நாற்றம் வீசியது அதனை நேரில் காண சென்ற இந்திரா மூக்கை மூடிகொண்டார், அவர் என்ன யாராக இருந்தாலும் மூக்கை மூடத்தான் செய்வார்கள் அப்படி இயற்கை சீற்றத்தால் […]

ஒரே ஒரு குஷ்பு

குஷ்புவின் பிள்ளைகள் அவரை போல் இல்லை என சிலர் சொல்லி சந்தோஷபடுகின்றார்களாம் வரலாற்றில் சிலர்தான் பெரும் அடையாளமிடுவார்கள், அவர்களின் வாரிசுகள் அவர்களை போல வருவதே இல்லை, சாலமோன், ராஜேந்திரசோழன் போன்ற மிக சிலர் விதிவிலக்கு அதிலும் சாலமோன் மகன் அவரை போலவா ஞானத்தோடு இருந்தான்? இல்லை கிளியோபாட்ராவின் வாரிசுகளில் ஒன்றாவது அவளை போல் இருந்ததா? கண்ணதாசனின் பிள்ளைகள் அவரை போலவா எழுதினார்கள்? இல்லை, காரணம் தனித்த அடையாளத்தோடு அவர்கள் வரலாற்றில் நிற்க வேண்டும் என்ற விதி அவர்களுக்கு […]

மூன்று கொள்ளையர்கள் வளர்த்த ஒருவன் கெட்டிகார பிள்ளையாம்

பத்திரிகைகளில் பாரம்பரியமுள்ளது இந்து பத்திரிகை ஆனால் இப்பொழுது சந்து பத்திரிகையாக, யாருக்கோ சிந்து பாடும் அளவு மாறிவிட்டது கடந்த செவ்வாய்கிழமை வந்த கட்டுரை அப்படி, அந்த கட்டுரை உலக பிரச்சினை, இந்திய பொருளாதாரம் உட்பட பல விஷயங்களை சொன்னாலும் பரவாயில்லை, அது சொன்னது தன் சுய உழைப்பில் பெரும் பணக்காரர் ஆன விவேக் என்பவரை பற்றியது அவர் ஏதோ வாரன் பெப்பட் போலவும், பில் கேட்ஸ் போலவும், அரபு எண்ணெய் கிணறில் கஷ்டபட்ட அம்பானி போலவும் பில்டெப் […]

சிறு குறு துணுக்ஸ்…..

சேக்கிழார் இங்கு நடந்த சண்டையில் மனம் வெறுத்து கப்பல் ஏறி லண்டன் சென்று சேக்ஸ்பியர் ஆனார் என்பதை வரலாறு மறைக்கின்றது இந்த இலுமினாட்டி சதிகளை உடைத்து சேக்கிழார் பெருமையினை எனும் தமிழனின் பெருமையினை உலகறிய செய்யும் தமிழக எழுச்சி வாழ்க, வெல்க கந்துவட்டி தொடர்பாக எனது கருத்துக்களை ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களே திரித்துக்கூறி இட்டுக்கட்டுவது வேதனை அளிக்கிறது: சீமான் பின்னே, உங்களை விட குறைவான வாக்குகளை பெற்றால் கட்சியினை கலைத்துவிட்டு உங்கள் கட்சியில் இணைவேன் என பகிரங்கமாக சவால்விட்டுவிட்டு, பின் […]

“இதுதான் என் குடும்பம், இவர்கள் தான் என் பிள்ளைகள்”

“இதுதான் என் குடும்பம், இவர்கள் தான் என் பிள்ளைகள்” என உலகிற்கு சொல்லிவிட்ட எங்கள் தலைவி உங்கள் ஜெயாவினை விட 100000000% உயர்ந்தவர் போங்கடா டேய்………………….. ஜெயா உங்களுக்கு தெய்வம் என்றால் குஷ்பு எங்களுக்கு “தெய்வத்தின்ட தெய்வம்”, “தெய்வ தலைவி”  

தென்கொரியாவின் ராணுவமும் அமெரிக்க கட்டுப்பாடே

பன்னீர் செல்வம் பழனிச்சாமி கோஷ்டியும், தினகரன் கோஷ்டியும் ஒரு மாதிரி சுற்றி சுற்றி வந்து மோத தயாராவது போல இந்த வடகொரியாவும் அமெரிக்காவும் சுற்றி திரிகின்றன‌ வடகொரியாவோ கொஞ்சமும் அசையாமல் அதே ஏவுகனை சோதனையினை செய்துகொண்டே இருக்கின்றது , அமெரிக்காவோ கடும் பொருளாதார தடைகளை ஏற்படுத்தியாயிற்று வடகொரியா விவகாரத்தில் கடும் அச்சத்தில் இருப்பவை ஜப்பானும், தென்கொரியாவும் ஜப்பான் இரண்டாம் உலகபோரின் முடிவிலே ராணுவத்தை கலைத்துவிட்ட நாடு, இப்போது பெயருக்கு சிறிய ராணுவம் உண்டு, பழைய ஜப்பானாக இருந்திருந்தால் […]

கட்சி பாரம்பரியம் அப்படி

  இப்பொழுது சில உண்மைகள் புரிகின்றது, உண்மையில் “நாம் தமிழர்” கட்சியில் இருந்து கொண்டு, “உங்கம்மா… த்தா என எழுதமுடியா வார்த்தைகளை பேசிகொண்டிருப்பது இந்த அதிமுகவினர்தான் சாட்சாத் அவர்களே தான் கலைஞரை , திமுகவினை திட்ட “நாம் தமிழர்” எனும் மாறுவேடத்தில் அலைந்திருக்கின்றார்கள் என நன்றாகவே புலனாகின்றது. “நாம் தமிழர்” மீது ஏன் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதன் ரகசியமும் விளங்கிற்று, சொந்த கட்சி மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? ஜெயலலிதா மகள் என சொல்லிகொள்பவரை […]

மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தை ….

மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தை , எம்ஜிஆர் பேருந்து நிலையமாக பழனிச்சாமி அரசு மாற்றிவிட்டதாம், சில சர்ச்சைகள் வருகின்றன‌ மாட்டு தாவணி என்பது மாட்டுக்கு தாவணி, சேலை எல்லாம் அணிவித்த இடம் அல்ல, அது தமிழரின் தொன்மையான பெயர் அக்காலத்தில் மாட்டுவண்டிகளே பிராதனம், கால்நடை என்றால் அதற்கு புல், நீர் ஓய்வு எல்லாம் வழங்க வேண்டும் அல்லவா? அப்படி குறிப்பிட்ட இடைவெளியில் தாவாணிகள் இருந்தன‌ அங்கு ஓய்வெடுத்து மாட்டுக்கு தீனி போட்டு இளைப்பாற்றுவார்கள். மாட்டின் தாகத்திற்கு நீரும் […]

உருகுவே நாட்டில் ஒரு வித்தியாசமான சம்பவம்

உருகுவே நாட்டில் வித்தியாசமான சம்பவம் நடந்திருக்கின்றது, அதாவது ஒரு பெண் தன் படத்தினை பதிவேற்றியிருக்கின்றார், லைக்குகள் குவிந்திருக்கின்றன‌ (எந்த நாட்டிலும் இப்படித்தான் இருக்கும் போல..) இதனால் ஆத்திரபட்ட கணவன் அந்த முகத்திலே குத்தி அவளை காயபடுத்தியிருக்கின்றான், அவள் இப்போது சிகிச்சையில் இருக்கின்றார் கணவனை காவல்துறை கைதுசெய்து விசாரித்தபொழுது உண்மை தெரிந்திருக்கின்றது, அதுவும் “இப்போ படத்தை போடு, இந்த மூஞ்சியினை போடு..” என சொல்லி சொல்லி அடித்திருக்கின்றான் ஆச்சரியமாக அடிபட்ட முகம்தான் உலகெல்லாம் பரவியிருக்கின்றது, உருகுவே நாட்டு முகநூல்காரன் […]

வடமாவட்டங்களை பற்றி எறிய செய்யும் செய்தி ஒன்று கிளம்புகின்றது

வடமாவட்டங்களை பற்றி எறிய செய்யும் செய்தி ஒன்று கிளம்புகின்றது இது எதில் முடியுமோ தெரியவில்லை, அவசர நடவடிக்கையில் அரசு இறங்கினால் நல்லது அதாவது ஒரு இளைஞன் கொல்லபட்டிருக்கின்றான் அதுவும் எரித்து கொல்லபட்டிருக்கின்றான், மிக கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றான் இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செய்த கொலை என ராமதாஸ் வரிந்து கட்டுகின்றார். விடுதலை சிறுத்தை கட்சியினர் தூண்டுதல் பேரில் அடாவடியில் ஈடுபட்டவர்களை அந்த இளைஞர் கண்டித்தார் அதனால் கொன்றிருக்கின்றார்கள், இதனை சும்மா விட போவதில்லை என சீறுகின்றார் ராமதாஸ் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications