பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த சாதி வெறியர்களோடு வாழமுடியாது

ஒரு சிலர் சொல்லிகொண்டிருந்தான், கிறிஸ்தவர் பணத்திற்காக மதம் மாறினர் என்றும், இஸ்லாமியர் அதிகாரத்திற்காகவும் மதம் மாறினர் என்றும் உளறிகொண்டிருந்தான் அவனெல்லாம் உ.பி வீடியோவினை பார்த்தால் விஷயம் புரியும் இந்த கொடுமைதான் அக்காலமும் நடந்தது, இதனை விட கொடுமையான விஷயம் எல்லாம் நடந்தது, புத்தனனும் மகாவீரனும் ஓரளவு மாற்றம் கொடுத்தாலும் அது மறுபடி அந்த பூதம் எழுந்து நின்றது இக்கொடுமையில் வாழமுடியாமல்தான், இவர்களின் கொடூர சாதிவெறுப்பிற்கு தப்பித்தான், மனிதனை மாட்டை விட கேவலமாக பார்க்கும் இந்த சாதி வெறியர்களோடு […]

மலேசிய தமிழ் வானொலியில் பிக் பாஸ்

மலேசிய தமிழ் வானொலியில் காலை நிகழ்ச்சிகள் அசத்தும் அவர்கள் தமிழ் அவ்வளவு அழகு, விஷயங்களும் நல்ல பயனுள்ளதாக இருக்கும் அதற்கும் மேல் பல்துறை நிபுணர்கள், சாதனையாளர்கள் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது மக்கள் கவனமாக இருக்கவேண்டிய காரியங்கள் குறித்து ஆலோசனை சொல்வார்கள் குழந்தை நலம், சமூகம் நலம், மன‌ நலம், பண நலம் , உடல்நலம் என எல்லா விஷயங்களும் உண்டு இன்று வாழ்வியல் பிரச்சினை என பேசினார்கள், நல்ல தகவலை எல்லாம் சொன்னார்கள். பிரச்சினை […]

உபியில் பெரும் கொடுமை நடந்திருக்கின்றது

உபியில் பெரும் கொடுமை நடந்திருக்கின்றது. பாகிஸ்தானில் நடந்த அந்த பஞ்சாயத்திற்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் ஒன்றும் இல்லை ஏன் என்றால் அப்படித்தான், இன்று எல்லைகள் வகுத்துவிட்டாலும் ஆப்கன், பாகிஸ்தான் போன்ற சில காட்டுமிராண்டி கலாச்சாரம் வட இந்தியாவிலும் உண்டு, அவர்கள் பழக்கவழக்கம் அப்படி. இதனால்தான் பெரியார் சொன்னார் , “இந்தியா பாகிஸ்தான் என பிரிப்பதை விட , வட இந்தியா தென் இந்தியா என பிரியுங்கள். அவர்கள் கலாச்சாரம் என்பதும், மண்வாசனை என்பதும் வேறுமாதிரியானது, தென்னவர்கள் கலாச்சாரம் […]

தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம்

தென்கிழக்கு ஆசியாவில் ஒருவித பதற்றம் தெரிகின்றது, அமெரிக்கா தன் படைகுவிப்பினை பெரும் அபாயகரமான ஆயுதங்களுடன் செய்கின்றது, ஏதோ முடிவெடுத்துவிட்டார்கள் சீனா தன் ராணுவம் அமைக்கபட்ட 90ம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடுகின்றது, அதில் சீன அதிபர் எந்த ராணுவத்தையும் வீழ்த்த தயார் என சவால் விடுகின்றார், 90 ஆண்டுகளில் அவர்கள் தோற்றதே இல்லை என சவுடால் வேறு ஜப்பான் அவர்களை போட்டு அடித்தது கொஞ்சம் அல்ல, சோவியத் யூனியன் அடித்த அடியில் அவர்கள் அமெரிக்க அதிபரிடமே சரண்டைந்தார்கள், […]

அப்துல்கலாம் இந்தியனாக வாழ்ந்தார்

பகவத் கீதை இந்துக்களுக்கான நூலாக இருக்கட்டும், ஆனால் எல்லோரும் படிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அணுகுண்டை தயாரித்த ஓப்பன் ஹைமர் அதனை படித்திருக்கின்றார், தன் குறிப்புகளில் சொல்கின்றார் அமெரிக்க அணுஆராய்ச்சி மையத்தில் நடராஜர் சிலை உண்டு, ஒரு தத்துவமாக அவர்கள் அதனை பார்க்கின்றார்கள், யாரும் இது கிறிஸ்தவநாடு அந்நிய தெய்வம் எதற்கு என சீறவில்லை, அவர்கள் அப்படித்தான் அப்துல்கலாம் இந்தியனாக வாழ்ந்தார், தினமும் குரான் படித்தார், தொழுதார். குரானை தாண்டியும் நிரம்ப வாசித்தார், அது கீதையோ, […]

சிலந்திகள் பிக்பாஸ் பெண்கள்

முத்து படத்தில் வரும் வயதான ரஜினிபோல ஆகிவிட்டார் நண்பர் Omm Prakash “அண்ணே எல்லாம் நாடகம், எல்லாமே நாடகம், பிக்பாஸே நாடகம். ஏதோ பாவபட்ட புள்ளன்னு வேலை வெட்டி எல்லாம் விட்டுட்டு சப்போர்ட் பண்ணினோம், அங்க எல்லாம் நாடகம்ணே, இனி பிந்து மாதவி எல்லாம் வருமாம், ச்சே… நாடகம் எல்லாம் நாடகம் ஹ்ஹா ஹா ஹா ஹா” என சிரிப்பவரை பார்த்தால் பயமாக இருக்கின்றது தாடியும் அழுக்கு போர்வையும் இல்லை, மற்றபடி அதே விரக்தி சிரிப்பு விஷய என்னவென்றால், […]

பாகிஸ்தானில் எந்த பிரதமரும் 5 ஆண்டுகளை முடித்ததில்லை …

பாகிஸ்தானுக்கு ஒரு ராசி என்னவென்றால் எந்த பிரதமரும் 5 ஆண்டுகளை முடித்ததில்லை, முடிக்கும்முன் ஒன்று ராணுவம் விரட்டிவிடும் அல்லது ஏதாவது வழக்கில் சிக்கி அவர்களே சென்றுவிடுவார்கள் இதுதான் கடந்த 70 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்ச்சி அங்கு, அவர்கள் சாபம் அப்படி இப்பொழுது அந்த சாபம் நவாஸ் ஷெரீப்பிற்கும் வந்துவிட்டது, மனிதருக்கு நமது பன்னீர்செல்வம் ராசி போல, முன்பு இருந்தபொழுது அங்குள்ள தினகரன் முஷாராப்பால் விரட்டபட்டார், பின் முஷாரப் என்னமோ ஆகி இப்பொழுதுதான் வந்திருக்கின்றார் சிக்கல் என்னவென்றால் நாவசும் […]

பிக்பாஸை மூடு…

உண்மையிலே போர்குணம் மிக்கவர்கள் திமுகவினர், பேச்சிலும் எழுத்திலும் , களத்திலும் அவர்களிடம் வீரம் தெறிக்கும். அது வரலாறு மிக பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் அங்கு உண்டு, எனினும் கலைஞர் என்ற ஒற்றை மனிதனுக்காக கட்டுபட்டு நின்றார்கள், அவர் கண்ணசைத்திருந்தால் இந்த சீமான் போன்றவர்களை எல்லாம் என்றோ தூக்கி கொண்டுபோய் கதற, கதற கலைஞர் வாழ்க என சொல்ல வைத்திருப்பார்கள் ஆனால் தலமைக்கும், தலைவருக்கும் அவர்கள் கொடுக்கும் மதிப்பில்தான் தமிழகம் அமைதியாக இருக்கின்றது இப்பொழுது ஏன் இதனை சொல்கின்றோம் […]

கைதியினை மீட்டு சென்ற சம்பவம் …

நாங்குனேரி அருகே கிராமமே திரண்டு வந்து காவலர்களை உதைத்து , கைதியினை மீட்டு சென்ற சம்பவம் உறுதியாக நடந்திருக்கின்றது நீர் இல்லா தமிழகத்தில் இப்பொழுது மண்ணுக்கு சண்டை, மண் தகறாறில் ஒருவரை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றபொழுதுதான் இந்த அதிரடி தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது அந்த கிராம பெண்கள் வந்து அடித்து உதைத்து இழுத்து சென்றதுதான் ஹைலைட். கோவில்பட்டி வீரலட்சுமி தெரியும் இந்த வீரலட்சுமிகள் குறித்து இனிதான் வரலாறு பேசும். காவல்துறை பெரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை, […]

அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஒரு கிராமம் , காவலர்களை தாக்கி கைதியினை மீட்டுசென்றதாக சில செய்திகள் பரவுகின்றன‌ அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கெட்டுவிட்டது என்பதற்கு அடையாளமாகும் கதிராமங்கலத்தில் களமிறங்கி அடிக்க இறங்கும் காவல்துறை, மெரீனாவில் ஒரு எல்கேஜி பையன் வந்தாலும் விரட்டும் காவல்துறை இங்கு மட்டும் அமைதி காப்பதன் மர்மம் என்ன என்ற கேள்விகள் எழும் சில காவலர்கள் தாக்கபட்டு கைதிகள் மீட்கபட்டது உண்மையா? […]