பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முரசொலி பவள விழாவில் ரஜினி கமல் பங்கேற்பு

முரசொலி பவள விழாவில் ரஜினி கமல் பங்கேற்பு இரு நாள் தூங்காமல் போர் நடத்தியதில் காயம்பட்ட நெப்போலியன் களத்திலிருந்து வெளியேறிவிட்டான், அவன் தூங்கியே ஆகவேண்டிய நிலை அந்த சேனைக்கோ என்ன செய்வதென அறியாத நிலை , அவனை எழுப்பியே ஆகவேண்டிய நிலை, சென்றார்கள் அவன் தூங்கும் அறைக்கு வெளியே ஒரு மேஜையில் சில குறிப்புகள் இருந்தனவாம் தான் வெளியேறிவிட்டாலும் என்னென்ன செய்யவேண்டும் என அவன் எழுதி வைத்துவிட்டுத்தான் ஓய்வெடுக்க சென்றான் அந்த மாவீரன் அப்படியே சேனையும் போரிட்டு […]

ஆண்பால் பெண்பால் அன்பால் …

சிகப்பு ரோஜாக்கள் கமலஹாசன் பெண்களால் பாதிக்கபட்டு சைக்கோ ஆனதை படமாக பார்த்திருப்போம் அப்படி ஆண்களாலும் பாதிக்கபட்டு உண்மையில் ஒரு மாதிரி ஆகிவிட்டவர்கள் நிறையபேர் இருப்பார்கள் போலும், அது சிக்கல் இல்லை ஆனால் அவர்கள் எழுத வந்து நிற்பதுதான் மகா சிக்கல் சில மதவெறியர்களின் கொடூர எழுத்துக்கள் போல, சில சாமியார்களின் அரைகுறை உளறல் போல இந்த பெண்ணும் அப்பட்டமான ஆண் வெறுப்பில் எழுதிகொண்டிருக்கின்றது சொந்த பாதிப்பினை ஏதோ உலகளாவிய பாதிப்பாக எண்ணுவது ஒரு வகை வியாதி அந்த […]

நாங்கள் கமலுக்கு உறுதுணையாக இருப்போம் : விஷால்

கமலஹாசன் சலசலப்பு ரஜினியின் அரசியல் வருகைக்கு வைக்கபடும் மிரட்டல் அல்லது செக் என பலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உண்மையில் தமிழக அரசும் கமலஹாசனும் கட்டிபுரண்டு சண்டையிடுவதில் ரஜினிக்குத்தான் நிம்மதி, எப்படியோ தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதில் அவருக்கு மகா மகிழ்ச்சி ரஜினியினை உணர்ந்த யாரும் எளிதாக யூகிக்கும் விஷயம் அது, தனக்கு வந்தது கமலைபோட்டு தாக்குகின்றது என்பதில் அவருக்கே ஆறுதல். கமலஹாசனை சிலர் ஆட்டுவிக்கின்றனர் என பலர் சொல்கின்றனர், இருக்கலாமோ இல்லையோ தெரியாது. ஆனால் எம்மிடம் கேட்டால் கமலை […]

சமீபத்தில் இரு விஷயங்களில் இந்தியா சாதித்திருக்கின்றது

சமீபத்தில் இரு விஷயங்களில் இந்தியா சாதித்திருக்கின்றது மிகபெரும் லஷ்கர் தீவிரவாதி ஒருவன், நாட்டின் பல நாசவேலைகளுக்கு காரணமான அவன் சலீம் கான். துபாய்க்கு தப்பிய அவன் அங்கு சாதரண தொழிலாளியாக வேலை செய்திருக்கின்றான் மறுபடியும் ஏதோ திட்டத்துடன் மும்பை வந்த அவனை ஈரசாக்கு போட்டு தூக்கிவிட்டது மும்பை போலீஸ் அதாவது அவன் துபாயின் என்ன செய்கின்றான்? எந்த போலிபாஸ்போர்ட்டில் வருகின்றான் என சகலத்தையும் இந்திய உளவுதுறை திரட்டியிருக்கின்றது, பின் அவன் மும்பை வரும் தகவலை சொல்லிவிட்டது, அமுக்கிவிட்டார்கள் […]

அடால்ப் ஈச்மென் Vs மொசாத் : 05

பெரும் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தது குழு. பட்சி சிக்கியாயிற்று இனி உயிரோடு இஸ்ரேல் கொண்டுசெல்லவேண்டும். பக்கத்து நாடு என்றால் பொதுவாக தொட்டி ஆட்டோவிலே கடத்துவார்கள். ஐரோப்பா என்றால் ஏதாவது ஒரு மீன்பாடி வண்டி அல்லது மினிலாரி அல்லது ஆம்புலன்ஸ்லில் கொண்டு சென்று ஆளில்லா கடல்கரை வழியாக படகில் நடுகடலில் நிற்கும் இஸ்ரேல் படகினை அடைவார்கள், நடுக்கடலில் எந்த குடியுரிமை சோதனையையும் கடல்மீன்கள் செய்யாது. ஐரோப்பா மற்றும் மேற்காசியாவில் இப்படித்தான் செய்வார்கள், குடியுரிமை சோதனை பாஸ்போர்ட் எல்லாம் அவர்களுக்கு தேவையே […]

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு

தமிழக எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு அரசின் கடன் 4 லட்சம் கோடியாக இருக்கும் பொழுது இது அவசியமா? இவர்கள் கிழிக்கும் கிழிக்கி இந்த சம்பளம் எதற்காக? கூவத்தூரில் இருந்தற்கும், சின்னம்மா வாழ்க, தினகரன் வாழ்க என சொல்வதற்கும் அரசு சம்பளமா? நிச்சயம் எதிர்கட்சியும் இதனைபற்றி பேசமுடியாது அவர்களிடமும் 80 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றார்கள், பேச விடமாட்டார்கள். ஆக கூவத்தூரில் கொடுப்பதாக சொன்னதை சம்பளத்தை ஏற்றி கொடுத்து சரிசெய்கின்றார்கள், நெல்லுக்கு பாயும் […]

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞர் படுகொலை இதனை எல்லாம் இந்த திராவிட கழகம், பெரியாரிஸ்டுகள் எல்லாம் கண்டிக்கமாட்டார்கள், மாறாக பிராமணரின் பூனூலில் மட்டும் தலைகீழாக தொங்கிகொண்டிருப்பார்கள். இரு பன்றிகளை பிடித்து இது தலித் பன்றி, இது உயர்சாதி பன்றி அந்த இரண்டிற்கும் திருமணம் செய்வித்து எங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம் என சொல்லட்டும் பார்க்கலாம் அதெல்லாம் செய்யமாட்டார்கள் அதுவும் ஒரு பன்றிக்கு வன்னியர் என்றும், ஒரு பன்றிக்கு நாடார், தேவர், தலித் எனவும் பெயரிட சொன்னால் வங்க கடலை […]

சசிகலாவை பொறி வைத்து பிடித்த மத்திய அரசு : செய்தி

சசிகலாவை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடித்த மத்திய அரசு : செய்தி இவர்களுக்கு இதுவே வேலையாகிபோனது, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுகொள்ளமாட்டார்கள், ரூபா போன்ற நேர்மமையான அதிகார்கள் உண்மையினை வெளிகொணர்ந்தால் நாங்கள் தான் பொறிவைத்தோம் என வந்து நிற்பார்கள் அப்படி பொறி வைப்பவர்கள், அப்பல்லோ மர்மத்தை வெளிகொணர்ந்தால் என்ன? செய்யமாட்டார்கள். இனி என்றொவது ஒரு நாளில் மர்மம் வெளிவந்தால் மோடி மேஜிக் என்பார்கள் எல்லா இடத்திலும் இதே அட்டகாசம், இதோ எல்லையில் சீனா மல்லுகட்டுகின்றது, நாளை அவர்களே […]

முதுகெலும்பு இல்லாத கோழை கமல் : ஹெச்.ராஜா

முதுகெலும்பு இல்லாத கோழை: கமலால் முதலமைச்சராக முடியாது –ஹெச்.ராஜா இப்பொழுது கமல் நான் முதலமைச்சராக போகிறேன் என எங்கு சொன்னார்???, சரி இந்த முதுகெலும்புள்ள மாவீரன் எத்தனை முறை முதல்வராகிவிட்டார்.. எங்கே? இந்த மாவீரன் ராமர்கோவிலை கட்டிவிடட்டும் பார்க்கலாம் அட அதுகூட வேண்டாம் முதுகெலும்புள்ள வீரனாக பாகிஸ்தான் எல்லையில் ஒரு கல்வீசி வந்துவிடுங்கள் பார்க்கலாம்.. TV பேட்டியில் தான் சொன்னதை கூட, உலகமே பார்த்த விஷயத்தையே பயத்தில், ” நான் அப்படி சொல்லங்கிறேன்” என பல்டி அடிக்கும் […]

குஷ்பூ குறுகுறு விழி எங்கே ….

எலேய் திருட்டுமுழி கஞ்சா கண்ணா, செத்த மூஞ்சி சிநேகரே என்ன சொன்னீர்? அந்த ஓட்டைபல்லும், ஒட்டுபல்லுமாக இருக்கும் “சூர்ப்பநகை” சூலி அடுத்த குஷ்பூவா? சித்தன்னவாசல் ஓவியம் போலிருக்கும் குஷ்பூவிற்கு, மாலிக்காபூரால் உடைக்கபட்ட சிலையின் முகம் போலிருக்கும் ஜூலி சமமா?? இதனை சும்மா விட மாட்டோம் குஷ்பூ குறுகுறு விழி எங்கே,  இந்த ஜூலியின் திருட்டு முழி எங்கே? குஷ்பூ மயில் ஜூலி மந்தி,  குஷ்பூ குளிர்நிலவு ஜூலி கொள்ளிகட்டை கருவாடு மீனாகாது, ராமராஜன் ரஜினி ஆகமாட்டார், புரியாத […]