பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆப்ரேஷன் எண்டபே : 01

குஷ்பூ பற்றி எழுத தொடங்கினால் என்ன எழுதுவது என்று தெரியவில்லை, நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது என்பது போல நடிகையர் மூலமும் பார்க்க கூடாது போல, காரணம் எவ்வளவு தேடியும் ஒன்றும் சிக்கவில்லை அவரை பற்றிய படங்கள் இணையத்தில் நிரம்ப கிடக்கின்றதே தவிர, தகவல்கள் மிக குறைவு. யாரிடம் கேட்டாலும் ஒன்றும் தெரியவில்லை, இரு தொடர்களாவது தேறுமா? என முயற்சித்தாலும் தகவல் திரட்ட முடியவில்லை. முடிந்தவரை திரட்டுகின்றோம் முடிந்தவரை திரட்டுகின்றோம் ஏதும் தகவல் கிடைத்தால் எழுதலாம், இல்லாவிட்டால் […]

தமிழ் படங்கள் : அப்படி ஒரு காப்பி ….

“ராமன் எத்தனை ராமனடி” என்றொரு சிவாஜிகணேசனின் படத்தை பார்க்க முடிந்தது, மனிதர் நன்றாக நடித்திருக்கின்றார் என்பது குஷ்பூ அழகாக இருக்கின்றார் என்பது போன்றது விஷயம் சிவாஜி நடிப்பல்ல‌ அந்த ஒரு படத்திலிருந்து பாக்யராஜின் தாவணிகனவுகளுக்கு மூலக்கதை, ரஜினியின் ராஜாதி ராஜாவிற்கு ஒரு கதை , சின்ன தம்பிக்கு ஒரு கதை, சத்யராஜின் வள்ளலுக்கு ஒரு கதை என சுமார் பத்து படத்திற்கு கதை எடுத்திருக்கின்றார்கள். அந்த படத்தின் சம்பவங்களை 10 ஆக பிரித்து பத்து படங்கள் 1990களில் […]

இந்திய வெளியுறவு துறை இலங்கையில் தோற்றுவிட்டது : திருநாவுக்கரசர்

இந்திய வெளியுறவு துறை இலங்கையில் தோற்றுவிட்டது : திருநாவுக்கரசர் அதாகபட்டது இலங்கை அதன் பாராளுமன்றத்தில் அதன் நாட்டு எல்லைக்குள் மீன்பிடிக்க வரும் அந்நிய நாட்டினருக்கு எதிராக கடும் சட்டங்களை இயற்றியுள்ளது இதனை மோடி அரசு ஓடி சென்று தடுக்கவில்லையாம் ஒரு நாடு இயற்றும் சட்டங்களை இன்னொரு நாடு எப்படி தடுக்க முடியும்? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இவர்தான் தமிழக காங்கிரசின் தலைவராம் என்னவோ காங்கிரஸ் அரசில் இலங்கையினை காலுக்குள் வைத்திருந்தது போலவும், இன்று மோடி […]

சீமானை பற்றி எழுத என்ன இருக்கின்றது ?(காணொளி )

இனி சீமானை பற்றி எழுத என்ன இருக்கின்றது, இந்த ஈழ நண்பர் பின்னி எடுத்துவிட்டார் இதற்கு மேலும் சீமான் மைக் பக்கம் வராமலும், மேடை ஏறாமலும் இருப்பது நல்லது, ஆயிரம் சொல்லுங்கள், சில ஈழதமிழர்களிடம் இருக்கும் சுவாரஸ்யமான நக்கலும், கிண்டலும் தமிழகத்தாருக்கு சுட்டு போட்டாலும் வராது வீடியோவினை பார்த்தால், நாம் தமிழர் கட்சியினர் கொடியினை இறக்கி வங்க கடலில் வீசுவது உறுதி உங்கள் வீட்டில் காமெடி சேனல் ஓடிகொண்டிருந்தால் நிறுத்திவிட்டு இதனை பாருங்கள் குறிப்பாக ரஜினி ரசிகர்களுக்கு […]

ஜிஎஸ்டி அலப்பறை கொஞ்சம் குறைந்திருக்கின்றது

இந்த ஜிஎஸ்டி அலப்பறை எப்பொழுது கொஞ்சம் குறைந்திருக்கின்றது ஆனால் அமெரிக்காவில் என்ன சதவீதம் தெரியுமா? சிங்கப்பூரில் எத்தனை சதவீதம் தெரியுமா? என இப்பொழுது அடுத்த ரவுண்ட் ஆனால் அமெரிக்காவில் 30% வருமான வரி என்பதனையும் மற்ற நாடுகளில் என்ன கொடும் வரி என்பதனையும் மறந்துவிடுவார்கள் அந்த கொடும் வரிக்கும் மேல்தான் அவர்கள் ஜிஎஸ்டி கட்ட வேண்டும், அது 10% வருகின்றதாம், இவர்கள் அதனை பிடித்து கொள்வார்கள் ஒரு அமெரிக்க டாலருக்கும், இந்திய பணத்திற்கும் மதிப்பென்ன? அப்படியானால் அவர்கள் […]

விசாலை விடுங்கள் ….

விசாலை விடுங்கள் அவர் எங்கும் இப்படி சிரித்துகொண்டுதான் இருப்பார், கீழே மூன்று பேர் இருக்கின்றார்கள் அல்லவா? அவர்கள் மீது கொலைவெறியினை தூண்டுதல், மன உளைச்சலை ஏற்படுத்துதல், சமூக அமைதியினை கெடுத்தல் , மக்களை ஆயுதம் ஏந்த வைத்தல் இது போன்ற பிரிவுகளில் வழக்கு பாயாதா? கண்டதும் சுடவேண்டிய நபர்கள் இவர்கள், டெங்கு கொசுக்களை விட அபாயமானவர்கள்    

கன்னி மரியாளுக்கு எப்படி குழந்தை பிறக்கும்- எச்.ராஜா

கன்னி மரியாளுக்கு எப்படி குழந்தை பிறக்கும்- எச்.ராஜா மஹாபாரத குந்திக்கு எப்படி கர்ணன் பிறந்தான் என நாங்கள் நாகரீகமாக கேட்டுவிடுமோம் ஆனால் பெரியார் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றார், எல்லாம் சபையில் சொல்லமுடியாத கேள்விகள், அவர் கேட்ட நாகரிகமான கேள்விகள் என இவைகளைத்தான் சொல்ல முடியும் “ஆண் சாமியான சிவனும், இன்னொரு ஆண் சாமியான விஷ்ணுவும் ஆணும் சேர்ந்து பெற்ற சாமி அய்யப்பனாம், இது எப்படிங்க முடியும்? ஆயிரம் வருஷம் வருஷம் வேலை வெட்டியே செய்யாம சிவன் உடலுறவு […]

ரஜினியோ அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கின்றார். : சீமான்

நாங்கள் மக்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம், ரஜினியோ அமெரிக்காவில் கேசினோ விளையாடி கொண்டிருக்கின்றார். : சீமான் எப்படி இருக்கின்றது இந்த பச்சை பொய். ரஜினி அமெரிக்கா சென்றிருக்கின்றார், சில இடங்களுக்கு செல்வார், அப்படி ஒரு கிளப்பிற்கு சென்றிருக்கின்றார் ஏன் ஆனானபட்ட நேருவே அமெரிக்க கிளப் சென்ற கதை இல்லையா? அவர் நாட்டுபற்று இல்லாதவரா? எம்ஜிஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவில்லையா? அப்பொழுது சில இடங்களுக்கு செல்லவில்லையா? அதற்காக அவரை கழுத்தை நெறித்து கொல்லவா செய்தார்கள்? சீமான் மக்களுக்காக போராடுகின்றாராம்? எங்கே சென்னையில் […]

அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள்

அமெரிக்கர்கள் சுதந்திரமானவர்கள், அடிக்கடி தமாஷ் செய்வார்கள், உடனே மற்றவர்களும் கூட சேர்ந்து பெரும் காமெடி செய்வார்கள் அப்படி டெக்சாஸ்லில் உள்ள மொலோசியா கிராமத்தில் 13 பேர் தாங்கள் தனிநாடு உருவாக்கிவிட்டதாக சொல்லி தமாஷ் செய்தார்கள், சும்மா அல்ல இது 40ம் ஆண்டு சுதந்திர விழா என சொல்லிகொண்டார்கள் மற்ற மக்களும் வாழ்த்தினார்கள், இவர்களோ இது எங்கள் கொடி இது எங்கள் அரசு, இது எங்கள் மக்கள் என சொல்லிகொண்டே இருந்தார்கள் அந்த 13 பேர்தான் அமைச்சர்கள், அதிபர்கள் […]

அ.தி.மு.க., ஆட்சியில் கொலைகள் குறைவு : முதல்வர் பழனிசாமி தகவல்

அ.தி.மு.க., ஆட்சியில் கொலைகள் குறைவு : முதல்வர் பழனிசாமி தகவல் அப்பல்லோ முதல் கொடநாடு வரை எவ்வளவு மர்மங்கள், சமீபத்தில் கூட கொடநாட்டில் ஒரு வேலைக்காரர் செத்திருந்தார் எத்தனை கவுரவ கொலைகள்? விஷ்ணுபிரியா போல எத்தனை காவலரின் மர்ம சாவுகள்?? இதனை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் கொலைகள் குறைவு என பெருமை பட்டுகொள்கின்றார் முதல்வர் ஒருவேளை அவை எல்லாம் கொலைகள் அல்ல, கட்சி கலாச்சாரம் என நினைத்துவிட்டாரோ?? கொலைகள் குறைவு என்பதை கொடநாட்டு மர்மங்களை மறைத்து சொல்லும் முதல்வருக்கு, […]