பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு குறள் .. தமிழிசை… கொட நாடு ….

குறள்: “வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. பொருள்: ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது. இப்படி சொல்லி ஜிஎஸ்டியினை பலர் கலாய்த்துகொண்டிருக்கின்றனர், பதிலுக்கு இப்படி சொல்ல ஒரு பாஜக காரனையும் காணவில்லை அவர்கள் எல்லாம் சமஸ்கிருதத்தை யோகா பாணியில் தலைகீழாக நின்று படிப்பார்கள் போலிருக்கின்றது குறள்: இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. பொருள்: […]

இஸ்ரேலில் நமது பிரதமர்….

இஸ்ரேலிய புண்ணிய ஸ்தலங்களை சுற்றி பார்க்கின்றார் மோடி (வி.கே ராமசாமி பாணியில் வாசிக்கவும்) “ஏம்பா..அந்த இயேசுநாதர இங்கதான் அடக்கம் பண்ணீங்களா, அந்த‌ கல்லறைய ஒழுங்கா மூடப்புடாது? அரைகுறையா மூடியிருக்காங்க உங்க ஆளுங்க‌   அந்த ஆள் திரும்ப வந்து உங்களுக்கும் பிரச்சினை, எங்களுக்கும் பிரச்சினை இதுக்குத்தான் எங்க ஊருல எல்லாம் ஒருத்தன கொன்னவுடனே எரிச்சிருவோம், இனியாவது எவனையும் கொன்னா எங்க பாணில எரிச்சிருங்க, எங்க முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்ல” “யூத பெண்கள் எல்லாம் பேரழகிகள் என்றார்கள், […]

பிக் பாஸ் அலப்பறை ….

அந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பதிலாக கமலஹாசனின் 1 மணி நேர பேட்டியினை தினமும் ஒளிபரப்பினால் நன்றாக இருக்கும், அது போதும் அவ்வளவு அனுபவங்கள் அவரிடம் கொட்டி கிடக்கின்றன, அவர் அதனை 100 நாள் சொன்னாலே மகா சுவாரஸ்யமாக இருக்கும் அதனை விட்டுவிட்டு 13 இம்சைகளை போட்டு வறுக்கின்றார்கள், நடிக்க வரவில்லை என்றால் அவர்களை ஏன் இந்த பாடுபடுத்தவேண்டும்? அதிலும் ஏதோ செவ்வாய் கிரகத்திற்கு 13 பேரையும் ராக்கெட்டில் ஏற்றி சென்றிருக்கும் பெரும் பொறுப்பினை சுமப்பது போல, தின்றது […]

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள்  அதிகரிக்கும் : டி.ராஜேந்தர்

தியேட்டர்கள் மூடபட்டால் குற்றங்கள்  அதிகரிக்கும் : டி.ராஜேந்தர் உண்மையினை சொன்ன இவரை வாழ்த்ததான் வேண்டும், மனிதர் அவ்வளவு வெள்ளந்தியானவர் அதாவது தியேட்டர்கள் மூடியபின‌ இரு நாளாக கிட்டதட்ட 50 கோடி வருமானம் இழப்பாம் பார்க்கிங், டிக்கெட், பாப்கார்ன் என எப்படியெல்லாம் கொள்ளையடித்த பணம், எவ்வளவு வருமானம்? இதனை இழந்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? அதனால் தியேட்டர்காரர்களும் ஊழியர்களும் வழிப்பறி, கத்தி காட்டி மிரட்டுதல், வீடு புகுந்து கொள்ளையடித்தல், காரினை மறித்து புடுங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடலாம் என்பதை […]

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி

சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது: ராஜஸ்தான் போலீஸார் அதிரடி அப்படியானால் தமிழக போலிஸ் என்ன செய்துகொண்டிருந்தது என யாரும் கேட்டுவிட கூடாது, குட்கா விவகாரம் எல்லாம் நினைவுக்கு வர கூடாது வழக்கமாக வாங்கும் மாமூலுக்கு ஜிஎஸ்டி எவ்வளவு என போட்டு கொண்டிருந்தார்களோ என்னமோ இவனை பிடிக்க மறந்துவிட்டார்கள் , ராஜஸ்தான் போலீஸ் அசத்திவிட்டது சரி, தமிழக காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சவர் யார்? எடப்பாடி பழனிச்சாமிதான் ஏன் தமிழக காவல்துறை தூங்கியது என கேட்டால், இது திமுகவின் சதி […]

மோடியினை இஸ்ரேல் வரவேற்று கொண்டிருக்கின்றது

ஊரை விட்டு ஒருவனை நாட்டாமை பட பாணியில் ஒதுக்கி வைத்திருக்கின்றார்கள், அவனோடு யாரும் பேசுவதுமில்லை, உறவாடுவதுமில்லை “கொலைகாரப்பயலோடு என்ன உறவு, இவன் சவகாசமே ஆகாது” என சொல்லிவிட்டு பார்த்த இடத்தில் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவார்கள் அப்படி விலக்கி வைக்கபட்டிருக்கும் ஒருவன் வீட்டுக்கு வழிபயணி ஒருவன் “ஹாய் கவ் ஆர் யூ, மே ஐ கம் இன்” என ஒருவன் வந்தால் அவனுக்கு எப்படி இருக்கும்? என்னையும் மதித்து என் வீட்டிற்கு வந்தீர்களா? என ஆனந்த கண்ணீர் விட மாட்டானா? […]

மீண்டும் தங்கை மகன் அழைத்தான்

கொஞ்சநாளைக்கு பின் தங்கை மகன் அழைத்தான், இம்முறை அவனின் கோரிக்கை வித்தியாசமாக இருந்தது “ஏலேய் மாமா, இந்த அம்மா காசு குறையா கொடுத்து சின்ன கிளாக் வாங்கிட்டால‌ அதுல 12 மணி வரைக்கும்தாம்ல இருக்கு, 13,14,15 எல்லாம் இல்லல.. அதுனால எப்பவும் இவா நேரம் இல்லண்ணு சொல்லிட்டே இருக்கால,ஸ்கூலுக்கு கிளம்பும்போது திட்டுதால, விளையாடும் போதும் திட்டுதால, 12 மணியோட இவ கிளாக் முடிஞ்சிறுதுல, அதுக்கு பிறவு 1 , 2ண்ணுதாம்ல வருது நீ நிறைய பைசா குடுத்து […]

கணித மேதை ராமானுஜம்

இந்திய கணித அறிவின் அடையாளமாக விளங்கியர் ராமானுஜம், அவரின் வாழ்க்கை படத்தினை இப்பொழுதுதான் பார்க்க வாய்ப்பு வந்தது மிக அழகாக ராமானுஜனின் வாழ்க்கையினை சொல்லியிருக்கின்றார்கள், பெரும் அறிவாளியான அவன் வறுமையில் வாடியது, வெள்ளையர்கள் லண்டனுக்கு அழைத்து அவனை பட்டை தீட்டியது, பெரும் கடவுள் நம்பிக்கை கொண்ட ராமானுஜம் இறுதிவரை அசைவம் தொடாமல் நோயுற்று செத்தது வரை அட்டகாசமாக செதுக்கியிருக்கின்றார்கள் எப்படிபட்ட மேதை ராமானுஜம், இன்றைய கணிப்பொறி காலத்திலும் அவன் கணக்கு இல்லாத விஞ்ஞான வசதியில்ல்லை, இன்றைக்கும் அவன் […]

தமிழிசைதான் அடுத்த கோல்டா மேயர்.. எச்.ராசாதான் அடுத்த மோசே தயான் …

உங்க ஊர்ல ராமர் கோவில் மாதிரி , இங்க யூத கோவில் அரசியல் மிஸ்டர் மோடி ஆனா உங்க நாடு மாதிரி ஜெருசலேம் மசூதிய‌ சட்டுபுட்டுண்ணு இடிக்க முடியல, அவமானமா இருக்கு இந்த “கரசேவகர்கள்” எல்லாம் எப்படி திரட்டனும்? ரதம் எல்லாம் ஏறி எப்படி சுற்றிவரணும்? என்னவெல்லாம் செய்யணும்? உங்கள விட்டா இதெல்லாம் சொல்லிதற உலகத்துல யார் இருக்க்கா சொல்லுங்க?”   இஸ்ரேல் என்னவென்றால் என்னவென்று தெரியாமலே சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான் இஸ்ரேல் யூதநாடாக உருவானது போல, இவர்கள் […]

ஆண்டவனின் மிக அழகான அற்புதமான‌ படைப்பு

கடும் ஆத்திகனுக்கும் இந்த முகத்தை கண்டால் கடவுள் நம்பிக்கை வரும் ஆண்டவனின் மிக அழகான அற்புதமான‌ படைப்பு,   மீத்தேன் வாயு எடுப்பதால் மட்டும்தான் கடல் நீர் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ளே வரும் என்றில்லை கட்டுபாடு இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகளை அமைப்பதாலும், நீர்மட்டம் வற்றி கடல்நீர் உள்ளே வரும், சில இடங்களில் வந்துகொண்டே இருக்கின்றது ஆக மீத்தேனால் மட்டும் நிலத்தடி நீருக்கு ஆபத்தல்ல, கட்டுபாடற்ற ஆழ்குழாய் கிணறுகளும் ஆபத்தானவை.. ரஜினிகாந்த் தேவையில்லை நானே அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் […]