பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு மாதத்தில் ஜிஎஸ்டி …

இன்னும் ஒரு மாதத்தில் ஜிஎஸ்டி வரும் என அறிவித்தாகிவிட்டது சாமான்ய கடைக்காரனுக்கும், சிறிய தொழில்களுக்கும், கம்பெனிகளுக்கும் இன்னும் பணம் புழங்கும் இடத்தில் எல்லாம் இருப்பவர்களுக்கு இதெல்லாம் எப்படி புரியும்? அரசு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கபட்டிருக்கலாம், சாமானியருக்கு என்ன புரியும்? மளிகை முதல் இன்னும் பல கடை நடத்துவபர்கள் எல்லாம் கற்றறிந்தவர்களா? இல்லை அதில் பாமரரும் உண்டு இந்த ஜிஎஸ்டி நாட்டுக்கு தேவையா என்றால் நிச்சயம் தேவை, பெரும் வரிகுழப்பங்களை அது தீர்க்கும் ஆனால் அதற்கான தயாரிப்புகளை செய்துவிட்டோமா? […]

சங்கமித்ரா படத்தில் நயன் …

சங்கமித்ரா படத்தில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நயன் நடிக்க வரலாம் என பல முக்கிய பத்திரிகைகள் எழுதுகின்றன‌ அதாவது ஸ்ருதி ஹாசன் போனால் என்ன? நயன் பொருத்தமாக இருப்பார் என சமூக வலைதளத்தில் எழுதுகின்றார்களாம் யார் எழுதினார் என்றால் Chandran Kannan, Babu Rao இந்த இருவரை தவிர யாருமில்லை சங்கமித்ரா படத்தில் குஷ்பூ மிக பொருத்தமாக இருப்பார் என நாமெல்லாம், நமது சங்கம்,மன்றம், தற்கொலை, புரட்சி படை எல்லாம் எப்படி எல்லாம் எழுதுகின்றோம், எத்தனை கோடி […]

இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள்

இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள் 2004ல் இந்த நாளில்தான் தமிழ் செம்மொழி என தமிழன் அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது அறிவிக்கபட்டது உலகின் தொன்மையான 6 மொழிகளில் ஒன்றான தமிழுக்கு இந்தியாவில் செம்மொழி அந்தஸ்து தாமதமாக கொடுக்கபட்டது என்றாலும் , கிடைக்கபெற்றது இதற்காக கலைஞர் உழைத்த உழைப்பு மறக்க முடியாதது, தன் வாழ்விலே அதனை செய்வேன் என சொல்லி பெற்றும் கொடுத்தார், அவரின் அரசியல் வாழ்வில் பெரு வெற்றி அது. இதனை தொடர்ந்த செம்மொழி மாநாடும், “செம்மொழியான‌ […]

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் …

வரலாற்றில் அபூர்வமாக பிறக்கும் தைரிய மிக்க பெண்களில் ஒருவரான‌ Devi Somasundaram பிறந்தநாள் என மார்க் சொல்கின்றார். அப்படி ஒரு பெண் தமிழச்சியாக பிறந்தது இந்த தமிழ்நாடு செய்திருக்கும் தவப்பலன்களில் ஒன்று எல்லா விஷயங்களிலும் ஆழ்ந்த அறிவும், கூடவே பகுத்தறிவும் , பெரியார் கொள்கையில் அபார ஆராய்ச்சியும், எந்த கேள்விக்கும் ஆணிதரமாக பதில் சொல்லும் நுண்ணறிவும் அவருக்கு மிக எளிது. நிதானமாக, தைரியமாக அவர் பதிலளிக்கும் பல இடங்களில் நமக்கே பெரும் ஆச்சரியங்கள் உண்டு, நிச்சயம் அந்தபெண் […]

கத்தாரில் நடப்பது போருக்கான அறிகுறி அல்ல

கத்தாரில் நடப்பது போருக்கான அறிகுறி அல்ல, மாறாக அடிக்கடி நடக்கும் ஒரு அரசியல் விளையாட்டு தற்காலிக தொழில்முடக்கம் ஏற்படலாமேயன்றி, பெரும் போர் மூள வாய்ப்பில்லை, உலககோப்பை கால்பந்து உட்பட பெரும் பொறுப்புக்களை சுமக்கும் கத்தார் நிச்சயம் போரில் ஈடுபட வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம் ஈரான் மீதே தாக்குதல்கள் ஒத்திபோடபட்ட நிலையில், போர் எல்லாம் மூளாது இப்படி விமானம் வரக்கூடாது, தூதர் வரக்கூடாது என பணக்கார அரசியல் விளையாட்டு நடக்கும் கொஞ்சநாளில் எல்லாம் சரியாகும் ஈரானுடன் உறவு வைக்கும் […]

கத்தாருக்கு ஆபத்து இப்பொழுது வந்திருக்கின்றது

எண்ணெயும், இஸ்ரேலும் இருக்கும் வரை அரேபியாவில் அமைதி இல்லை, இந்த இரண்டும் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களுக்குள் அடித்துகொண்டுதான் இருக்கபோகின்றார்கள் ஆனாலும் இப்போதைய குழப்பத்திற்கு காரணம் இஸ்ரேலும், எண்ணெய்க்காக அமெரிக்கா செய்யும் அரசியலும் என்பது சொல்லி தெரியும் விஷயம் அல்ல‌ இஸ்ரேல் என்றாலே முன்பு எல்லா நாடுகளும் ஒன்று சேர்ந்து யுத்தம் செய்யும், வெற்றியா தோல்வியா என்பது தாண்டி அவர்கள் ஒன்று சேர்ந்தது அப்படித்தான், இஸ்ரேலுக்கு ஆகாதவர் என்றால் அழைத்து ஆராதித்தார்கள் ஜோர்டான், […]

எடப்பாடி அணி, தினகரன் அணி… அதிமுக கிரிகெட்…

கிரிக்கெட்டில் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணிகளும் தனி தனியே வட்டமாய் கூடி நின்று, தோளில் கைபோட்டு ஆலோசனை செய்வார்கள் அப்படி எடப்பாடி அணி ஒரு பக்கமும், தினகரன் அணி ஒரு பக்கமும் வட்டமாய் நின்று ஆலோசிக்கின்றார்கள் பெட் கட்டிய பந்தயக்காரர் போல பன்னீர் கோஷ்டி விரல் கடித்து பார்த்துகொண்டிருக்கின்றது, மேட்ஜ் பிக்சிங்க் செய்தார்களா என்பதெல்லாம் தெரியாது.. விரைவில் ஆட்டம் தொடங்கும் போலிருக்கின்றது, அநேகமாக டாஸ் போட்டு தொடங்கி வைப்பது பாஜகவாக இருக்கலாம்..

பொன்னார் செயலும் பேச்சும் மகா காமெடியாகவே இருக்கின்றன..

“வயதானவர்களைக் கொண்டு வைரவிழாவினை கொண்டாடியிருக்கின்றார்கள்” : பொன்னார் முதிர்ந்த வயதான கலைஞரை வாழ்த்த அவரோடு பயணித்த முதிர்ந்தவர்கள் தான் வருவார்கள், சிறுவர்களா சென்று வாழ்த்த முடியும்? வாஜ்பாயினை வாழ்த்தியது எல்லாம் பாஜக இளைஞர்களா? முதிர்ந்த அத்வாணிதானே முன்னின்று வாழ்த்தினார்.. 56 வயது யுவதி தமிழிசை கூட வாஜ்பாயினை வாழ்த்தவில்லையே அய்யா? ஏன்? வாஜ்பாயினை அந்த முதிர்ந்த பார்பண கூட்டம் வாழ்த்தும்பொழுது நீங்கள் இந்தியாவில்தானே இருந்தீர்கள், அதெல்லாம் மறந்துவிட்டதா மிஸ்டர் பொன்னார். கலைஞரை வாழ்த்த தகுதி இருக்கும் முதியோர் […]

விரைவில் பழனிச்சாமிக்கு ஊஊஊஊஊஊஊ…

சிறையில் உள்ள சசிகலாவைச் சந்திப்பதற்காக, டி.டி.வி.தினகரன் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். மனிதருக்கு சிறை ராசி, சிறை பறவையாக ஒவ்வொரு சிறைக்கும் பறந்துகொண்டே இருக்கின்றார் சசிகலாவினை பார்த்து பெங்களூர் சிறைக்கும், திகார் சிறைக்குமான வேறுபாடு பற்றியா பேசபோகின்றார்? விரைவில் பழனிச்சாமிக்கு ஊஊஊஊஊஊஊ… தமிழக சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது: ஜி.எஸ்.டி. மசோதா தாக்கலாகும் மத்திய அரசுக்கு “ஆமாம் சாமி” “உள்ளோம் அய்யா” என சொல்ல ஒரு சட்டசபை கூட்டம் என்பதை தவிர என்ன சொல்ல முடியும்? தி.மு.க.வுடன் இணைந்து செயல்படத் […]

பாஜக தமிழகத்தை புறவாசல் வழியாக ஆள்கின்றது : ராகுல் காட்டம்

பாஜக தமிழகத்தை புறவாசல் வழியாக ஆள்கின்றது : ராகுல் காட்டம் மிஸ்டர் ராகுல், அன்று உங்கள் பாட்டி ராமசந்திரன் வழியாக ஆளாத ஆட்சியா? உங்கள் தந்தை ஜெயா மூலம் ஆள நினைக்காத காட்சியா? இதற்குத்தான் உங்களை எல்லோரும் அடிக்கடி தாக்குகின்றார்கள், பின் விளைவுகள் தெரியாமல் பேசிவிடுகின்றீர், அப்படி தெரியவில்லை என்றால் அருகில் இருக்கு திருநாவுக்கரசரை கேளுங்கள், அவர்தான் பெரும் வாழும் சாட்சி ராகுலை அல்ல, அவருக்கு பேச எவனோ தமிழக காங்கிரசில் எழுதி கொடுத்திருக்கின்றான் அல்லவா? அவனை […]