பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞர் டிவியில் இன்று உருப்படியான காரியத்தை செய்கின்றது

கலைஞர் டிவியில் இன்று உருப்படியான காரியத்தை செய்கின்றது, இனி செய்யுமா என தெரியாது 94 வருட கலைஞரின் வாழ்க்கையினை சொல்கின்றது, பல விஷயங்களை சொல்கின்றார்கள், கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது ஆனால் அவரின் போராட்ட வாழ்வு பற்றி ஒன்றும் பெரிதாக இல்லை, மாறாக அவரின் கலைவாழ்வு, அரசியல் என மேம்போக்காக சொல்கின்றார்கள் இன்னும் அழுத்தம் வேண்டும், அப்படி சொல்ல அது முரசொலியா? அதனால் எதிர்பார்க்க கூடாது அண்ணா, பெரியார் முதல் எல்லோரும் கலைஞர் பற்றி என்ன சொன்னார்கள் என […]

எல்லா தலைவர்களும், எல்லா துறையினரும் கலைஞரை வாழ்த்துகின்றனர்

எல்லா தலைவர்களும், எல்லா துறையினரும் கலைஞரை வாழ்த்துகின்றனர் ஆனால் இந்த தமிழக துறையினரிடமிருந்து ஒரு சத்தமும் இல்லை, இதே கும்பல் முன்பு கலைஞர் ஆட்சியில் இருக்கும்பொழுது அவருக்கு எத்தனை விழா நடத்தியது? அடிப்படையில் கலைஞர் சினிமாக்காரர், கலைஞரின் வெற்றி ஒவ்வொரு சினிமா கலைஞனும் தன் வெற்றியாக கொண்டாட வேண்டிய வெற்றி கூத்தாடிகள் என்றும் கணிய கூட்டம் என்றழைக்கபட்ட அந்த துறையினை கலைத்துறை என மாற்றியதே கலைஞர்தான். தமிழகத்தில் அந்த துறைக்கு கலைஞரால்தான் பெரும் பெயர் கிடைத்தது சந்தேகமே […]

இலங்கையில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு ஒரு நினைவு சின்னம்

இந்திய அரசு உடனே செய்யவேண்டியது மெரீனாவில் அன்று இலங்கையில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டியது அந்த சின்னம் அன்றே அமைக்கபட்டிருக்க வேண்டும், கலைஞர் அந்த அமைதிபடையினையே வரவேற்கமாட்டேன் என அரசியல் செய்தவர், ஜெயா ராஜ்வின் ரத்தம் எனும் நன்றியினை மறந்தவர் இந்த திருமுருகன் போன்றோரின் அழிச்சாட்டியத்தை நிறுத்தவேண்டுமென்றால், உடனே மெரினாவில் அந்த 1600 வீரர்கள் நினைவாக ஒரு நினைவு சின்னம் இலங்கையில் இருப்பது போல் அமைக்கபட வேண்டும் அந்த வீரர்களுக்கு இலங்கையில் […]

வாழ்த்துபவர்கள் வாழ்த்தட்டும்

 வாழ்த்துபவர்கள் வாழ்த்தட்டும், ஆனால் அந்த மனம் கோபாலபுரத்து அறையிலிருந்து என்ன சொல்ல துடிக்கும்? என்ன எழுத துடிக்கும்? இப்படித்தான் துடிக்கும் “வைரவிழா என்றும், பிறந்தநாள் என்றும் என்னை வாழ்த்துகின்றீர்கள், உங்கள் வாழ்த்துக்கெல்லாம் நன்றி இன்று காலத்தால் முடக்கபட்டுவிட்ட நான், அன்று முதலில் போராட தொடங்கிய காலங்களை, அதாவது 14 வயதிலே நான் எழுத தொடங்கிய காலங்களை நினைக்கின்றேன் ஆம் அன்று நிலை அப்படித்தான் இருந்தது, அவர்கள் தான் ஆண்டார்கள், அவர்கள் என்றால் வெள்ளையன் அல்ல, வெள்ளையனுக்கு பிரதிநிதியாக, […]

கமலஹாசன் சினிமா விட்டு போகின்றாராம்

செய்யும் தொழிலுக்கு வரி கட்டு, ஜிஎஸ்டி எனும் வரியினை ஒழுங்காக கட்டு என்றால் கமலஹாசன் சினிமா விட்டு போகின்றாராம் கலை என் வாழ்வு என்றவர், சினிமாவுக்கு சம்பாதிக்க வரவில்லை என சொல்லும் மிக சிலரில் ஒருவர் இப்படி சொல்வது என்ன வகை? எதற்குடுத்தாலும் நாட்டை விட்டு போகின்றேன், சினிமா விட்டு போகின்றேன் என சொல்வதே இவருக்கு வழக்கமாயிற்று சினிமா என்பது மனைவிகளில் ஒன்று என நினைத்தாரோ என்னமோ?  

சீனா சென்றார் குஷ்பூ

சீனா சென்றார் குஷ்பூ என்ற செய்தியினை தவிர்த்து ஒன்றும் வரவில்லை அந்த சீனரை நம்ப முடியாது, ஆனானபட்ட நேருவினையே நம்ப வைத்து கழுத்தறுத்தவர்கள் குஷ்பூவினை காவலில் வைத்துவிட்டு அருணாச்சல பிரதேசத்தை தந்தால்தான் அவரை விடுவோம் என்றால் நாமெல்லாம் தாங்க முடியுமா? இந்த நாடுதான் தாங்குமா? அதனால் அவர் நல்லபடியாக சீன பயணத்தை முடித்து வருமளவும், அவரின் கோடான கோடி ரசிகர்களின் இதயதுடிப்பு எகிறிகொண்டேதான் இருக்கின்றது.. பாதுகாப்பாக வந்துவிடுங்கள் தாயே….

கலைஞர் என்பது பெரும் நதி, அதுவும் பல கிளைகளாக ஓடிய நதி

கலைஞருக்கு முன் ஜூன் 3ம் நாள் அவ்வளவு விஷேசமில்லை, கலைஞருக்கு பின் அது கவனிக்கபடாமல் செல்ல போவதுமில்லை அந்த மனிதர் ஓய்ந்துவிட்டார், காலம் அவருக்கு உழைக்க கொடுத்த வாய்ப்பு முடிந்து இப்பொழுது ஓய்விற்கு கட்டளையிட்டிருக்கின்றது வருடாவருடம் ஜூன்3ல் வந்து தொண்டர்களை கை கூப்பி சந்திக்கும் அவர் இம்முறை வரமாட்டார், அவர் தொண்டர்கள் அவருக்கு விழா நடத்துவார்கள், நடத்தட்டும் அது வைர விழாவோ, வைடூரிய விழாவோ அவர்கள் கட்சி அவர்கள் நடத்தட்டும், இனி வருடாவருடம் நடத்தபோகும் விழாக்கள் இப்படித்தான் […]

“தனி தமிழ்நாடே தீர்வு” என்பவர்களுக்கு…..

தான் தீவிர தமிழர், தனிதமிழ்நாடே தீர்வு என்று சொல்லும் சீமானிய முகமூடி ஒன்று போதிக்க வந்தது, இந்தி திணிப்பு, காவேரி என எப்படிஎல்லாம் இந்த தமிழர்களை இந்தியா வஞ்சிக்கின்றது தெரியுமா?, சிந்தியுங்கள் தம்பி, தனிநாடு இன்றி இனி தமிழகம் வாழமுடியாது என ஒரே போதனை “சரி தமிழ்நாடு அடைந்தால் கவேரி பிரச்சினை எப்படி தீரும்? நாம் இந்தியாவிடம் அல்லவா சண்டையிட வேண்டும்? சர்வதேச கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் அல்லவா?? அதான் தம்பி, நாம் தனிநாடாகிவிட்டால் அப்படித்தான் செல்லவேண்டும் […]

மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள்

மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள், ஒரு வாதத்தை முன் வைக்கின்றார்களாம் அதாவது முன்பு நரிகுறவன் நரி, கொக்கு எல்லாம் உண்டானாம், அவனை முன்னேற்ற பலரும் அரசும் அழைத்து படிக்க சொன்னார்களாம், வேறு தொழில்களில் ஈடுபடுத்தினார்களாம், அவன் இன்று திருந்திவிட்டானாம் என் உணவு, என் நரி, என் பன்றி என அவன் சொல்லவில்லையாம், என் உணவினை தடுக்க நீ யார்? என அழிச்சாட்டியம் செய்யவில்லையாம். அப்படி செய்தால் இன்றும் அவன் நாரையினை தின்றுகொண்டிருப்பானாம். எப்படி எங்கள் வாதம் […]

ஒரு சனியன் யாரென்றே தெரியவில்லை…

ஒரு சனியன் யாரென்றே தெரியவில்லை, திடீரென வந்து நான் உன்னோடு படித்தவன் என்கின்றது பார்த்த நினைவுமில்லை, என்னோடு படித்ததாக சொல்லி கொண்டிருக்கின்றது, உனக்கு பைத்தியம் என‌ சொல்லி என் பதிவுகளில் எல்லாம் பின்னூட்டம் இடுகின்றது அவனோடு படித்ததாகவோ, சைட் அடித்ததாகவோ, துண்டு பீடி குடித்ததாகவோ நினைவே இல்லை. அவனை எனக்கு தெரியாது நாம் பெரும் எழுத்துக்களை எல்லாம் எழுதவில்லை, ஆனால் நாட்டு நடப்புக்களை, நம் ரசனைகளை எழுதுகின்றோம், அதற்கு அங்கீகாரமளிக்க இந்த பைத்தியம் யார்? வடிவேலுவிடம் விலாசம் […]