அரசு மாடுகளுக்கு விடுதலை கொடுத்திருக்கின்றது
அறியாமை, நோய், வறுமை,ஆயுத குவிப்பு, தீவிரவாதம் என பல விஷயங்களில் இந்நாடு விடுதலை அடைய வேண்டி இருக்கின்றது, ஆனால் இந்த அரசு மாடுகளுக்கு விடுதலை கொடுத்திருக்கின்றது, இனி அவைகள் இஷ்டம் போல திரியலாமாம், பால் மட்டும் கறந்துவிட்டு மக்கள் சத்தம் போடாமல் இருந்துவிடவேண்டுமாம் அவற்றை கட்டுதல், வர்ணம் பூசுதல் இன்னபிற தொந்தரவுகள் எல்லாம் செய்ய கூடாதாம், வயதான மாடுகளுக்காக நாடெல்லாம் முதிர்ந்த மாட்டு இல்லம் அமைக்கபட்டு, அங்கே மாடுகள் பாதுகாக்கபட்டு பின் அடக்கம் செய்யபடுமாம். இது மாட்டுகறி […]
“காலா..” கருப்பர்களுக்கான படம்
“காலா..” கருப்பர்களுக்கான படம் என்பதால் இந்த பொன் முகத்தினை விட்டுவிட்டார்கள் நிலக்கரி குவியல் நடுவில் இந்த தங்க தட்டு எப்படி இருக்க முடியும்….முடியவே முடியாது. கருப்பு என பெயரிட்டுவிட்டு இந்த குங்குமத்தை எப்படி சேர்த்துகொள்ள முடியும்? நியாமான காரணம். இதனால் போராட்டம் நடத்துவதில்லை என சங்கம் முடிவெடுத்தாயிற்று கொசுறு ஒரு போலி கிறிஸ்தவன் வீடியோ காண நேர்ந்தது, “பவர்” , பவர் என கத்திகொண்டே கை நீட்டுகின்றார் உடனே எல்லோரும் பொத் பொத்தென்று விழுகின்றார்கள் இந்திய அரசு […]
இந்திய போர்விமானம் சுகோய் 30 காணாமல் போனது
இந்திய போர்விமானம் சுகோய் 30 காணாமல் போனது, இப்பொழுது பாகம் கண்டுபிடிக்கபட்டதாக சொல்கின்றார்கள் ரஷ்ய தயாரிப்பு அது, அதி நவீன ரகம். அது பறக்கும்பொழுது சிக்கல் வந்தால் ஏன் சுட்டு வீழ்த்தபட்டால் கூட விமானி பாராசூட்டில் குதித்து தப்பலாம், காற்றுவெளியிடை படத்தில் கூட சொன்னார்கள் சிரிய யுத்தத்தில் இதே விமானத்தை சுட்ட தீவிரவாதிகள் , அந்த விமானியினை உயிரோடு பிடித்து சுட்ட கொடுமையும் நடந்தது பறக்கும் பொழுதும் தாக்கபடும் பொழுதும் எல்லா விவரங்களையும் அது கட்டுபாட்டு அறைக்கு […]
பன்மொழி புலவர் க.அப்பாத்துரை
கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு பாடுபட்டது பலர், ஏராளமானோர் உண்டு மறைமலை அடிகள், உ.வேசா என வரிசை பெரிது தமிழனின் ஆராய்ச்சிக்கும் பாடுபட்டவர் பலர், தமிழனின் பழமை என்ன? மற்ற மொழிகளில் தமிழின் தொடர்பு என்ன? மற்ற கலாச்சாரங்களுடன் தமிழ் கலாச்சாரம் எப்படி ஒத்துவருகின்றது?, தமிழன் எப்படி மூத்தகுடி? அவன் எங்கிருந்திருக்கலாம் என ஆராய்ச்சி செய்தவர் வெகு சிலர் அவர்கள் தான் கடல்கொண்ட தென்னாடு, கபாட புரம் என ஆராய்ச்சியினை செய்தனர், பலமொழிகள் கற்று எல்லா மொழிகளிலும் ஆதாரம் […]
தாடி பாலாஜி நித்யா ஜோடி
இரு நாட்களாக ஒரு சங்கதி மீடியாவில் ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது உலக புரட்டிய புரட்சியாளரும் , புதிய இந்தியாவினை உருவாக்கி ஒளிகாட்டியவருமான ஒருவரின் செய்தி அது அந்த மாபெரும் தலைவன் , அகில உலகத்தை ஆட்டிய இந்திய பெருமகன் தன் காதல் மனைவியினை நாட்டு நலனுக்காகவும், தான் கொண்ட கொள்கைக்காகவும் பிரிய போகின்றானாம் அவனது உன்னத லட்சிய போராட்ட வாழ்வில், பல்லாயிரம் மக்களுக்கு அவன் வழிகாட்டும் மாபெரும் பணியில் அவன் இருக்க, அவனின் அருமை மனைவி அதாவது கார்ல்மார்க்ஸின் […]
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி காலமானார் கலைஞர் ஏரளமானோரை கவர்ந்தார், அதில் ரசிகர்கள், தொண்டர்கள், கொள்கையாளர், என ஏராள வகை உண்டு, சில பச்சோந்திகளும் உண்டு பக்தர்கள் என்றொரு பிரிவும் உண்டு, அதிலொருவர்தான் இவர், இன்று மறைந்துவிட்டார் தன் சமகாலத்தில் யார் இறந்தாலும் மரியாதை செலுத்துவதில் கலைஞர் மகத்தானவர், தன் தள்ளாத வயதில் அவர் செல்லமுடியாமல் இருந்தது கலாமிற்கும், ஜெயாவிற்குமே, மற்றபடி அந்த இறுதிமரியாதை விஷயத்தில் கலைஞரை பாராட்டியே தீரவேண்டும் அப்படிபட்ட கலைஞரின் முரட்டு […]
சன்னிலியோன் கவலை
எனக்கு யாருடைய புருஷனும் தேவை இல்லை ஆனாலும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை : சன்னிலியோன் கவலை இவருக்கு அவரின் கணவனே தேவையில்லை, இதில் அடுத்தவள் கணவன் எதற்கு? அம்மணிக்கு இன்னும் இந்திய மனைவிகள் பற்றி தெரியாது போல, முன்பின் தெரியாதவளை நோக்கினாலே கணவன் விழியினை தோண்டிவிடும் மனைவியர் உள்ள நாடு, மணாளனின் மனமகிழ்வே முக்கியம் என்ற கண்ணகி, நளாயினி எல்லாம் புராணத்தோடு சரி, நிஜத்தில் சாத்தியமே இல்லை புராணத்தில் வேண்டுமானால் சீதை தீகுளித்திருக்கலாம், […]
திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி
திரிகோணமலையின் ஒரு பக்கத்தில் அமெரிக்க முகாம் அமையலாம் : செய்தி 1980ல் அமெரிக்கா இதற்குத்தான் முயன்றது, தந்திரமாக ஆடிய இந்திரா அதனை முறியடித்தார், அதன் பின் புலிகள் இந்திய எதிரிகள் என்றாலும் இந்தியா விட்டுகொண்டே இருந்த காரணம் அதுதான், சிங்ளனை மிரட்ட ஒரு சக்தி தேவை இது பிரபாகரனுக்கு மிக நன்றாக தெரியும், அந்த தைரியத்தில்தான் ராஜிவ் கொலையினை ஒரு பொருட்டாக எடுக்காமல் இருந்தார் பிரபாகரன் 2009ல் விஷயம் எல்லை மீறியது, புலிகளை ஒழித்து தீருவோம் என […]
“நெல்லை வட்டாரத்தில் எமனை காலா சாமி என்பார்கள்” : ரஞ்சித்
“நெல்லை வட்டாரத்தில் எமனை காலா சாமி என்பார்கள், இது மும்பையில் நடக்கும் நெல்லை வட்டார கதை படம் என்பதால் காலா என பெயரிட்டோம்” : ரஞ்சித் ஏம்பா நெல்லை மக்கா, கருப்ப சாமி, சுடலைமாடன், இசக்கி தவிர காலாசாமி எங்காவது அந்த பக்கம் இருக்கின்றதா? காலா சாமி கொடை என எங்காவது பார்த்தோமா? எங்காவது “டேய் நான் காலா சாமிடா.. கரும்பு எங்கடா” என சாமி ஆடியிருக்கின்றதா? நெல்லையில் சுடலைதான் பிரதானம், அடுத்து இசக்கியும் கருப்பசாமியும், காலா […]