பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்: அய்யாக்கண்ணு

தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும்: அய்யாக்கண்ணு அப்படியே கந்துவட்டிக்காரன் கடனையும் முடிந்தால் அவனையும் தள்ளுபடி செய்ய வேண்டும், அக்கம்பக்கத்தில் கைமாற்றாக வாங்கியிருந்தாலும் தள்ளுபடி வேண்டும் ஒரு வங்கியும், ஒரு நிறுவணமும் இனி விவசாயிக்கு கடன் கொடுக்கவே கூடாது, கொடுத்ததால் தானே இவ்வளவு சிக்கல், அடுத்த‌ விவசாயி பணமே இன்றி அலையட்டும் கொடுத்தால் முதலிலே இலவசம் என கொடுத்துவிடலாம், ஒரு போராட்டமும் இருக்காது..அப்படி கொடுத்ததை உடனே விவசாயி மறந்துவிடவும் வேண்டும் எல்லாம் தள்ளுபடியானால் வங்கிகள் என்ன […]

தமிழை எதிர்த்து போராட்டம் நடத்தபடும் : எச்.ராசா

தமிழை எதிர்த்து போராட்டம் நடத்தபடும் : எச்.ராசா இந்நாட்டில் பெரும் சுதந்திரபோராட்டம் நடந்தபொழுதும் வெள்ளையனை ஆதரித்துகொண்டிருந்தவர்களின் வாரிசுகள் இப்படித்தான் பேசுவார்கள் இந்தியாவே வெள்ளையனை எதிர்க்க இந்த கூட்டம் அவனை ஆதரித்தது அப்படி தமிழர்கள் இந்தியினை எதிர்த்தால் இவர் தமிழை எதிர்ப்பாராம்? இதுதான் கலைஞர் சொல்லும் “கருவின்” குற்றம் எப்படி எதிர்ப்பார்? தொல்காப்பியம் முதலான தமிழ்நூல்களை எரிப்பாரா? திருகுறளை அடுப்பில் இடுவாரா? அதனை டெல்லிபக்கம் சென்று அல்லவா எதிர்க்கவேண்டும்? எத்தனை ஆயிரம் செட்டியார்கள் பட்டினத்தார் காலம் முதல் கண்ணதாசன் […]

சிரியாவில் விஷவாயு குண்டு வெடித்திருக்கின்றது…

எங்கெல்லாம் இரு நாடுகள் மோதுகின்றதோ அங்கெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் ஆயுதங்களை சோதிப்பது ஹிட்லருக்கு பின் உலகில் நடக்கும் விஷயம் ஆயுதங்களை சொந்த மக்கள் மீதா சோதிக்கமுடியும்? அடுத்த நாட்டில்தான் சோதிக்க முடியும். சில நாடுகள் இந்த் ஆபத்தை தவிர்க்கின்றன, ஈரான் போன்றவை ஒரு மாதிரி சமாளிக்கின்றன, வடகொரியா ஏதாவது சீறி, மிரட்டியாவது தன்னை தற்காத்துகொள்கின்றது இந்தியாவின் பங்கு இதில் பாரட்டதக்கது, பெரும்பாலும் இன்னொரு நாடு தன் விஷயத்தில் தலையிட வாய்ப்பளிக்காது சீன போரில் கூட இந்தியா […]

அங்கிள் சைமனின் ஆடியோ ….

அங்கிள் சைமனின் ஆடியோ ஒன்று கேட்க நேர்ந்தது அதாகபட்டது அங்கிள் சைமனை ஆர்.கே நகரில் அவர் செதுக்கிய பிள்ளைகளும், இனமான தம்பிகளும் தெருவில் விட்டுவிட்டார்கள் போல, , ஆர்.கே நகர் வீதிகளில் “ஞான ஓளி” சிவாஜிகணேசன் போல மெழுகு வர்த்தியுடன் தனியே அலைந்திருக்கின்றார் தனிமை பிரச்சாரத்தில் அங்களுக்கு ஞானத்திற்கு பதிலாக கடும் ஆத்திரம் வந்துவிட்டது,, கூடவே அழுகையும் வந்திருக்கின்றது “தேவனே என்னை பாருங்கள்” என பாடல் பாடியதாக தகவல் இல்லை, மாறாக போனை எடுத்து தம்பிகளிடம் கொந்தளித்துவிட்டார் […]

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட அமெரிக்காவிற்கு ஆசை….

காஷ்மீர் பிரச்சினையில் எப்படியாவது தலையிட வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் ஆசை எதற்கு? இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியாக இணங்கி, காஷ்மீரில் அமைதி திரும்பவா? இல்லை, அப்படிபட்ட நல்ல ஆசை எல்லாம் அமெரிக்காவிற்கு வராது அதன் ஆசை எல்லாம் எப்படியாவது காஷ்மீருக்குள் வந்து, அங்கு தன் படைபிரிவினை நிறுத்தவேண்டும் என்பதே. 1950 முதல் அது இதற்காக காத்துகொண்டிருக்கின்றது, அதுவும் பாகிஸ்தான் அதன் கூட்டாளியான பின் அடிக்கடி சொல்லிகொண்டே இருக்கும் அதுவும் சோவியத் வெளியேறிய ஆப்கனிலிருந்து தீவிரவாதிகளை காஷ்மீருக்கு […]

துணுக்ஸ்….

எஸ்.பி.பி.,யின் பாஸ்போர்ட், பணம் அமெரிக்காவில் திருட்டு மனிதருக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை போலிருக்கின்றது, சிக்கல்கள் அவரை தேடி வருகின்றன… எச்-1பி விசாவை தவறாக பயன்படுத்த கூடாது: அமெரிக்க நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை அதாவது எந்த நாட்டுகாரர்களுக்குமே விசா கொடுக்க கூடாது , அப்படி கொடுத்தால் தவறாக பயன்படுத்துகின்றார்கள் என டிரம்ப் அரசு பாய்ந்துவிடும்.

சுந்தரம்பிள்ளையின் பிறந்தநாள்

அவர் பெயர் சுந்தரம் பிள்ளை, 1855ல் பிறந்தார். கேரளாவில் பிறந்த தமிழர், தமிழை கசடற கற்றவர், பல பட்டங்களை பெற்றவர், பின் நெல்லை கல்லூரி ஒன்றில் பேராசிரியரானார் அக்கல்லூரி பின் இந்து கல்லூரி ஆயிற்று, இன்றும் அக்கல்லூரி நெல்லையில் உண்டு. அதன் பின் திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவயியல் ஆசிரியரானார், திறமையானவர் என்பதால் பிரிட்டிஷ் அரசின் பல பட்டங்கள், ராவ் பகதூர் பட்டம் வரை வாங்கினார், திருவிதாங்கூர் அரண்மனை திவானாகவும் இருந்தார் பல படிப்புகள் படித்திருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சிகளில் […]

பர பர செய்திகள் ….

17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த 21 வயது பெண் கேரளாவில் கைது, முகநூல் காதலால் சம்பவம் நடந்ததாக கேரளாவில் பரபரப்பு வரவர ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக இந்நாடு போய்விட்டது, கொடூர காமுகச்சி கைது, அப்பாவி ஆணுக்கு என்ன நீதி? என ஒரு பத்திரிகையாவது எழுதுகின்றதா? இல்லை பெண்ணாதிக்கம் ஒழிக‌….. ஆனாலும் 17 வயது பையன் முகநூலில் ஏதோ சாதித்திருக்கின்றான், நாமெல்லாம் எழுதி என்ன கிடைத்தது ஒன்றுமே இல்லை.. நாமெல்லாம் முகநூலுக்கு சரிவர மாட்டோம் என்பது […]

விவசாயிகள் போராட்டம்…

கூட்டுறவு வங்கிகளில் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்: ஐகோர்ட் தமிழக விவசாயிகள் சென்னை பக்கம் வராமல் டெல்லிக்கு சென்று ஒப்பாரி வைத்தனர் சென்னை கோர்ட் இங்கே உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம், அங்கே என்ன சத்தம் என்பது போல சொல்லியிருக்கின்றது சும்மாவே தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி, இதில் இந்த தள்ளுபடியில் இறங்கினால் அரசு தள்ளாடும் நிலை வரும். மாநில அரசு டெல்லி போராட்டத்தை அனுமதித்திருக்கின்றது, அதனை ரசிக்கின்றது என்ற எண்ணம் டெல்லிக்கு ஏற்பட்டிருக்கின்றது டெல்லி […]

55 ஆண்டுகளில் மோசமான ஆட்சி: எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கு

55 ஆண்டுகளில் மோசமான ஆட்சி: சித்தராமையாவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா தாக்கு இந்த எஸ்.எம் கிருஷ்ணா முன்னாள் காங்கிரஸ்காரர், கன்னட முதல்வராக கூட இருந்தவர், நாட்டின் உயர்ந்த‌ பல பொறுப்புக்களை காங்கிரஸ் சார்பில் வகித்தவர் அன்னாரோ மத்தியில் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் அமைச்சர், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி என்றால் நான் முதல்வர் எனும் கொள்கையில் வாழ்ந்தவர் மத்தியில் ஆட்சியில்லை, கன்னடத்தில் இவரை முதல்வராக்கவில்லை எனும் கோபம் இருந்தது, காங்கிரசுக்கும் நேரம் சரியில்லை பழம் இல்லாத மரத்தில் எந்த வவ்வால் […]