பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆந்திர செம்மர கடத்தல் கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன்

ஆந்திர செம்மர கடத்தல் கும்பல்கள் பல உண்டு, அவற்றில் ஒரு கும்பல் தலைவன் லட்சுமணன், பர்மாக்காரன் பெரும் கடத்தல் தலைவன் இவனே, இவனை 2015ல் ஆந்திரபோலிஸ் கைதுசெய்துவிட்டது, ஆனாலும் கடத்தல் தொடர்ந்தது எப்படி என போலிஸ் விசாரித்தபொழுதுதான் லட்சுமணனுக்கு கல்கத்தா காதலி இருப்பதும், அவள் கேங் லீடரான கதையும் தெரிந்தது அவள் கல்கத்தா நடிகை சங்கீதா, செம்மர கடத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது, கடத்தல் ராணியாக மாறினாள் சங்கீதா,போலிஸ் வலை விரித்தது ஆனால் அவள் சிக்கவில்லை, போலிசுக்கு தண்ணி, […]

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையில் திடீர் குழப்பங்கள் ..

கருணாசின் முக்குலத்தோர் புலிப்படையில் திடீர் குழப்பஙகள் ஏற்பட்டது பலருக்கு ஆச்சரியம். பெரும் கட்சியில் சண்டைவந்தால் அது வியப்பல்ல, ஆனா கருணாசுக்கு ஒரு கட்சி இருப்பதே பெரும் விஷயம், அதில் 4 பேர் இருப்பது அடுத்த ஆச்சரியம், அதில் கருணாஸ் சிலரை நீக்குவதும், அவர்கள் இவரை நீக்குவதும் பெரும் ஆச்சரியம் அப்படி என்ன நடந்தது? ஒன்றுமில்லை கூவத்தூர் பொற்காலங்களில் சுமார் 5 கோடி வரை கருணாஸ் அடித்துவிட்டார் என்ற செய்தி வந்தது, அவர் கடனை எல்லாம் அவர் அடைத்தத […]

ஈழதமிழர்களுக்கு வாய்க்கரிசி போட இவர்கள் ரெடி..

வறட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பாகிஸ்தான் அரசு 35 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை அனுப்பி வைத்தது. இலங்கை மிக செழிப்பான நாடு, எல்லா பயிறும் செழித்து வளரும் வளமான பூமி, மகாவலி போன்ற ஆறுகள் ஏராளமான குளங்கள் எல்லாம் உண்டு அதுவும் வன்னிபகுதி அக்கால‌ தமிழக தஞ்சைக்கு நிகரானது கடும் யுத்தம் அவர்களின் பல விவசாய நிலங்களை பாழாக்கிற்று, இனி அவை பழைய உருபற்று வர நெடுங்காலம் ஆகும் பற்றாக்குறைக்கு தமிழகத்தை போலவே அங்கும் கடும் வறட்சி […]

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு கேமரா

பணப்பட்டுவாடாவை தடுக்க ஆர்.கே.நகரில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டிய அப்பல்லோவில் இல்லாத கேமரா, போயஸ்கார்டனில் இல்லாத கேமரா, ஆர்கே நகர் எங்கும் வைக்கபடுமாம் ஏதோ தெருவில் தள்ளுவண்டியில் வைத்து பணம் கொடுப்பது போலவும், கேமராவில் அதனை பார்த்துபிடிப்பது போலவும் செய்து கொண்டிருக்கின்றார்கள் செய்திதாளுக்குள் கவர் வைத்து வீசுவது, போன் பில், கரண்ட் பில், மளிகை பில் கட்டுவது, காய்கறி கூடைக்குள் பணம், பூக்கட்டுக்குள் பணம் என‌ என 2000த்திலே செய்தார்கள் 2017ல் எவ்வளவு வளர்ந்திருப்பார்கள்? இணையம் இவ்வளவு […]

ஆர் கே நகர் : சூடு பிடிக்கும் பிரச்சாரம்…

தீபா, பன்னீர், தினகரன் என மூன்று பேரும் மாறி மாறி திட்டிகொள்வதன் பெயர் ஆர்.கே நகர் அதிமுக தேர்தல் பிரச்சாரம் அக்கட்சியின் வோட்டினை அவர்களே கெடுத்துகொள்ளலாம், முதலில் அதிமுக கட்சியே இல்லை, பல பெயர்களோடு பலர் கையில் அது சுற்றிகொண்டிருக்கின்றது திமுக முயல் ஆமை கதையினை போல கெத்தாக இருக்கின்றது மற்ற கட்சிகள் நிலை சொல்லிகொள்வது போல் இல்லை, கங்கை அமரனுக்கு விழவேண்டிய வோட்டுக்களை தடுப்பதில் எச். ராசா, சு.சாமி போன்றோர் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் அதனையும் […]

நயனின் “டோரா” படம் இன்று வெளிவருகிறது

நண்பர்கள் Babu Rao, Chandran Kannan மனதில் “டேரா” போட்டு தங்கியிருக்கும் நயனின் “டோரா” படம் இன்று வெளிவருகின்றதாம் Babu Rao நேற்றே விரதம் எல்லாம் இருந்து, காலையிலே சாமி கும்பிட்டு தியேட்டருக்கு கிளம்பியிருப்பார், இனி தியேட்டர் வாசலில் அரைமணி நேரம் தியானம் இருப்பார் முதல்காட்சி அவர் முன்னால்தான் திரையிடபடும் இதுவரை நயனின் தற்கொலை படை, , முதல்காட்சி படை, முகநூல் படை என எல்லா படைகளையும் நடத்திகொண்டிருந்த அவருக்கு ஆதரவாக சிலர் அகில இந்திய நயன் […]

விராட் கோஹ்லிக்கு பத்மஷ்ரி விருது

விராட் கோஹ்லிக்கு பத்மஷ்ரி விருது கோஹ்லி திறமையான ஆட்டக்காரர், ஆனால் ஏன் இவரை விட சிறந்த ஆட்டக்காரரான டோனிக்கு அந்த விருது ஏன் கிடைக்க்கவில்லை? டோனிக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏதோ உரசல் இருப்பது அவ்வப்போது தெரிகின்றது, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு, கேப்டன் பதவியிலிருந்து விலகல் என அந்த விஷயங்களில் நன்றாக தெரிகின்றது டோனியின் காலங்கள் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவ் காலத்திற்கு அடுத்த பொற்காலம் என்பதனை பின்பு வரலாறு சொல்லும்.. டோனிக்கும் ஒரு பத்மஷிரி கொடுத்திருக்கலாம், நிச்சயம் கொடுத்திருக்க […]

ஜெயா தொலைக்காட்சியில், குஷ்புவின் “இது நம்ம பூமி” படம்

  ஜெயா டிவியின் கொடுமையான செய்திகளுக்கு பின் ஆறுதலாக நல்ல படம் ஒளிபரப்புகின்றார்கள் இன்று குஷ்பூவின் “இது நம்ம பூமி” படம் ஓடிகொண்டிருக்கின்றது ஆலயமணியில் சிவாஜி நடந்த நடைக்குபின் மிக கம்பீரமான ஸ்டைலான நடையில் குஷ்பூ வருகின்றார் முன்பு என்றோ நிலாவில் சிறிய துண்டு ஒன்றை உடைக்க அமெரிக்கா திட்டமிட்டதாம், அப்படி உடைத்திருந்தால் அது இந்த பட குஷ்பூ போலத்தான் கியூட்டாக இருந்திருக்கும்… இந்த படத்திற்கு அல்லவா “இது நம்ம ஆளு” என தலைப்பு வைத்திருக்க வேண்டும்? […]

ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: முன்னாள் நீதிபதி கட்ஜூ

ஜெயலலிதாவை ஒருதலையாக காதலித்தேன்: மனம் திறக்கிறார் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கட்ஜூ ஓஓஓ மலரரும் நினைவுகள், மலரட்டும் அவர்தான் என்ன செய்வார்? முதலில் காதலை சொன்னால் எம்ஜிஆரால் தொல்லை, கட்ஜூ சென்னை ரோட்டில் ஓடவிடபட்டிருப்பார் அடுத்து சொல்ல நினைத்தால் மன்னார்குடி குடும்ப தொல்லை, “எங்கள் அட்சய பாத்திரம் மீதா ஆசைபடுகின்றாய்..” என ஆட்டோவினை கோர்ட்டுக்கே அனுப்பியிருப்பார்கள் கடந்தவருடம் கூட சொல்லியிருக்கலாம், சொல்லியிருந்தால் இன்னொரு மர்ம மரணம் என செய்திகள் வந்திருக்கும்.. அதனால் மனிதர் இன்னும் சொல்லாவிட்டால் […]

சொன்னார்கள் : வைகோ, வாசன், திருநாவுக்கரசு

ம.தி.மு.க. நடத்தும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினையொட்டி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் மதிமுகவிற்கு எதற்கு ராமசந்திரன் நூற்றாண்டு விழா? அவர் என்ன மதிமுக நிறுவணரா? புரவலாரா? தலைவரா? தற்காலிக உறுப்பினராக கூட ராமசந்திரன் மதிமுகவில் இல்லையே பின்ன ஏன்? விஜயகாந்த் மருத்துவமனைக்கு சென்றதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை, இந்த மனிதரையா நம்பினோம் என நினைத்தால் நெஞ்சு வலி வராதா? அதிமுகவிற்கு கொள்கையே இல்லை, மதிமுகவின் ஒரே […]