பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியில் எழுதுவதற்கு வைகோ கொதிப்பு

நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியில் எழுதுவதற்கு வைகோ கொதிப்பு, பகல் கனவு பலிக்காது என சாடல் இவர்தான் ஆளுநர், மோடி, ஜெட்லி என பறந்து பறந்து சந்தித்தவர், ஆனால் அவர்களிடம் ஏதும் பேசாமல், எங்கு வந்து குட்டிகரணம் அடிக்கின்றார் பார்த்தீர்களா? என்னது? பகல் கனவு பலிக்காதா? பிரபாகரன் தமிழீழ அதிபராகவும், தான் தமிழக முதல்வராகவும் இருப்போம் என நண்பகல் 12 மணிக்கு எல்லாம் கனவுகண்டவர் அல்லவா? அதனால் பகல் கனவு பற்றி அவருக்கு நன்றாக தெரியும்…  

கந்தன் கருணை இல்லம் : புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு

அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம் அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே எடுத்துகொள்வார்கள், கேட்டால் கொல்வார்கள், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம் இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது “கந்தன் கருணை” என பெயரிடபட்ட பெரும் வீடு, ஒரு செல்வர்க்கானது, அவரை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், அது புலிகுகை ஆயிற்று […]

சத்யமூர்த்தி …

அந்த காந்தி காலத்து காங்கிரஸ் சுதந்திரத்திற்கா உழைத்து கொண்டிருந்த காலங்களில் தமிழகத்தில் அதன் தூணாக நின்றவர் அந்த சத்யமூர்த்தி, புதுகோட்டை திருமயத்தில் பிறந்தவர் நன்கு படித்தவர், ஆங்கிலத்தில் பின்னி எடுத்தவர் என்பதால் பெரும் இடம் பெற்றிருந்தார், பெரிய இடமென்றால் எப்படி? ரவுலட் சட்டம், மாண்டேகு செம்ஸ்போர்டு போன்ற விவாதங்களில் இங்கிலாந்தில் வெள்ளையனோடு அமர்ந்து வாதிட்டவர், அந்த அளவிற்கு இந்திய அளவில் அவருக்கு மதிப்பு இருந்தது வெள்ளையன் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த தொடங்கியபொழுது தேர்தலிலும் வெற்றிபெற்றார், ஆனால் சுதந்திர […]

எங்கும் பணமழை பொழிகின்றது…

“அன்பே வா” படத்தில் கையில் சூட்கேசும், ஒரு கம்பும் தலையில் தொப்பியுமாக ராமசந்திரன் பாடுவார் காலங்கள் கடந்தாலும் எவ்வளவு ஆச்சரியமாக காட்சிகள் பொருந்துகின்றன? இப்பொழுது அதே தொப்பி, ஆனால் மறைமுகமாக சூட்கேஸ், அவ்வப்போது சிலருக்கு கம்பு அடி என அந்த கோஷ்டி ஆர்.கே நகரில் சுற்றுகின்றது 4 வரிகளோடு பாடல் முடிந்தால் அதிமுகவினருக்கு நல்லது, தொப்பி சூட்கேஸ் சகிதம் “எங்கும் பணமழை பொழிகின்றது” என சுற்றி சுற்றி பாடலாம், தொப்பி சகிதம் பாடல் களை கட்டியிருக்கும். ஆனால் […]

இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி செய்தி

நேரம் வரும்பொழுது உங்களை சந்திக்கின்றேன் : இலங்கை ரசிகர்களுக்கு ரஜினி செய்தி சந்திக்கவே மாட்டேன் என்னை விட்டு விடுங்கள் என இதற்கு பொருள், அதாவது முன்பு இப்படித்தான் நேரம் வந்தால் அரசியலுக்கு வருவேன் என சொல்லிகொண்டே இருந்தார் அவரை பொருத்தவரை வரமாட்டேன் என்பதை “நேரம் வரும்பொழுது..” என சொல்லிகொள்வார். ஆனால் சிலருக்கு “நேரம் கூடி” வந்துவிட்டது வேல்முருகன் மீது 10 கோடி ரூபாய் அபராதம் கேட்டு லைக்கா நிறுவணம் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றது அவரோ உடனே முத்தரசன், திருமாவுடன் […]

“குஷ்பூ விருது” வழங்கி பதிலடி கொடுப்போம்

89 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கபட்டிருக்கின்றன‌ கிரிக்கெட் சிங்கம் டோனி, மயிலு ஸ்ரீதேவி, ஜெயா பச்சன் உட்பட பலரை மத்திய அரசு நிராகரித்துள்ளதாம். அந்த நிராகரிப்பு பட்டியலில் குஷ்பூ பெயர் இருந்ததா இல்லையா என்பது பற்றி செய்தியில்லை.. ஆனால் விருது பெற்றவர்கள் பெயரிலும் அவர் இல்லை ரஜினிக்கே பத்ம விருது கிடைத்திருக்கும் பொழுது, குஷ்பூவிற்கு ஏன் மறுக்கபடுகின்றது? இது தான் அரசியல், இந்திய அரசியல், இது பெரும் வருத்தமான விஷயம்.. அது என்ன பத்ம விருது? அவர்களே […]

உகாதி சுபகாங்சலு…

தங்கள் கலாச்சாரப்படி யுகாதி கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் உகாதி நல்வாழ்த்துக்கள் வளமும், ஐஸ்வர்யமும், அமைதியும், ஆசியும் இல்லமெல்லாம் வந்து நிறையட்டும் “உகாதி சுபகாங்சலு…”

அந்த வீடியோ விவகாரம் பற்றி அங்கிள் சைமன் விளக்கம்

https://www.facebook.com/Jeyaganapathi/videos/10210246011239835/ அந்த வீடியோ விவகாரம் பற்றி பெரும் விளக்கம் கொடுத்துகொண்டிருக்கின்றார் அங்கிள் சைமன் வழக்கமாக காமெடி செய்பவர்தான், இப்பொழுது காமெடியின் உச்சகட்டத்திற்கு சென்றிருக்கின்றார், அவர் அரசியல் காமெடியின் உச்சமாக கூட இது இருக்கலாம் கர்பிணிகள், இதய நோயாளிகள், வயிற்றுபிரச்சினை உள்ளவர்கள் மேற்கொண்டு படிக்கவேண்டாம், அது உங்களுக்கு ஆபத்தானது.. சென்றுவிட்டீரகளா?….. அதாவது முன்பு அவர் கிறிஸ்தவ, இந்து தெய்வங்களை பேசிய பேச்சுக்களின் வீடியோக்களை வெளியிட்டு, அவர் பெயரை கெடுத்து சட்டமன்ற தேர்தலில் அவரை தோற்கடித்தார்களாம் இப்பொழுது ஆர்.கே நகரில் […]

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் …

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடக்க, அதற்கு ஆதரவாக மாணவர்களும் மெரீனாவில் கூடுவதாக செய்திகள் வருகின்றன‌ உண்மை நிலவரம் தெரியவில்லை விவசாயி 24 மணிநேரமும் வேலையிலிருப்பவன், சொந்த வீட்டு விஷேஷத்தில் அவன் கலந்துகொள்வது மிக பெரிய விஷயம், அப்படிபட்ட விவசாயி டெல்லிக்கு சென்று பல நாட்களாக போராடுகின்றான் என்றால் சில விமர்சனங்கள் வரத்தான் செய்யும் ராமேஸ்வரம் மீணவனுக்கு டெல்லி செல்ல இல்லாத வசதி, தமிழக ஏழை விவசாயிக்கு மட்டும் எப்படி சாத்தியம்? மாநில அரசினை கண்டித்து சென்னையில் ஒரு […]

திமுக தமிழகத்துக்கு செய்ததுதான் என்ன ?

“நீ திமுகக்காரன் என ஒப்புகொள், சும்மா ஏன் நடிக்கின்றாய்..” என பலர் வந்து இன்பாக்ஸில் கொதிக்கின்றார்கள், கொதிப்பவர்கள் யாரென்றால் அம்மா கோஷ்டி, கொஞ்ச நேரம் பேசியாகியது “எல்லா கட்சிக்கும் அடிப்படை கொள்கை, கோட்பாடு உண்டு, அதிமுகவின் கொள்கை என்ன?” அது..கொள்கை…..ம்ம்ம்.. அதெல்லாம் உனக்கு எதற்கு? சொல்லுங்கள், கொள்கை இல்லாமல் என்ன கட்சி? அதனை ஏன் நடத்தவேண்டும்? சீமானின் கட்சிக்கு கூட கொள்கை இருக்கும் பொழுது, உங்களுக்கு ஒன்று இல்லாவிட்டால் எப்படி? ம்ம்..அப்படியா கேட்கின்றாய் திமுக என்ன கிழித்தது? […]