பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முதல்வர் சசிகலாவை சிறையில் சந்திக்கிறார்….

விரைவில் சசிகலாவினை சக அமைச்சர்களோடு சென்று சிறையில் சந்திக்கின்றார் முதல்வர் பழனிச்சாமி அங்கு சிறைதோழிகள் இருந்தால் சசிகலா இப்படித்தான் அறிமுகபடுத்துவார் “இவர்தான் பழனிச்சாமி, தமிழகத்திலே மிகுந்த தைரியமும் அறிவும் கொண்டவர், என் அடிமைகளில் ஒருவர் என்னிடம் முதலமைச்சராக இருக்க இவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? அவர்கள் எல்லாம் அமைச்சர்கள், இவர்களை எல்லாம் அறிமுகபடுத்தும் அவசியமில்லை, இந்த அமைச்சரவையில் அமைச்சர்களானால் அவர்களின் தைரியமும் அறிவும் எவ்வளவு இருக்கும்? அதனால் இவர்கள் இரண்டாவது தைரியமானவர்கள்”      

கோவை வருகின்றார் மோடி

கோவை வருகின்றார் மோடி எதற்காக வருகின்றார் என்றால் அங்கு ஏதோ ஈஷா மையத்தில் 112 அடி ஆதியோகி சிலை திறப்பாராம் சமீபத்தில் கன்னியாகுமரியில் ராமயாண சிலைகளை அவர் டெல்லியிலிருந்தே வீடியோவில் திறந்தது குறிப்பிடதக்கது தமிழகத்தில் பெரும் தொழிற்சாலை, ஒரு பாலம், ஒரு குடியிருப்பி, அணைகட்டுக்கள், பெரும் அறிவியல் கழகங்களை ஒரு பிரதமர் திறக்கின்றார் என்றால் அது பாராட்டதக்கது நேரு, இந்திரா எல்லாம் அதனைத்தான் தமிழகத்திற்கு செய்தார்கள்,மாறாக விவேகானந்தர் பாறை கட்டங்களில் கூட அந்த பிரதமர்களின் அக்கறை இருந்ததில்லை […]

ஊடகங்களின் செயல்பாடு மழலையின் மரணத்தை விட கொடூரமானது

தமிழக செய்திகளை தமிழக ஊடகங்களை காட்டிலும் வெளிநாட்டு ஊடகங்களே உண்மையினை சொல்கின்றன‌ ஜெயா சாவு மர்மத்தினை வெளிமாநில பத்திரிகைகளும், வெளிநாட்டு பத்திரிகைகளும் பெரும் விவாதமாக அடித்து சொல்கின்றன, தமிழக ஊடகங்கள் எல்லாம் மூச், ஒன்றிரண்டை தவிர‌ அப்படித்தான் மகா பாதக செயலான எண்ணூர் சிறுமி ரித்விகா செய்திகளும் மறைக்கபடுகின்றன‌ உண்மையில் அது ராஜேஸ் என்ற மிருகத்தின் பாலியல் வக்கிரத்தில் நடந்த கொலை என்கின்றது அந்த ஊடகங்கள், நம் ஊடகங்களோ அது நகைக்காக என சொல்லி பலவற்றை மறைக்கின்றன‌ […]

அரசியலில் திரை நடிகர்கள்….

இந்த பிறவி அல்ல, இனி ஏழேழு பிறவியிலும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது உலகிற்கே தெரிந்துவிட்டது. விஜயகாந்த் அரசியல் சூதில் சிக்கி மல்லாக்க கிடக்கின்றார், இனி அவர் எழுந்துவருவது எல்லாம் அலாவுதீன் பூதம் வந்தால்தான் முடிகின்ற காரியம் அதனால் கமலஹாசனை அரசியலுக்கு இழுத்துவிடுவது என சிலர் தீர்மானம் செய்திருப்பது போல தெரிகின்றது அதில் மகா முக்கியமான பொறுப்பினை சுப்பிரமணியன் சாமி ஏற்றிருக்கலாமோ என்னமோ கமல்ஹாசனை மிக சீரியசாக சீண்டி பார்க்கின்றார். தமிழகத்தில் முதன் முதலாக ஒரு ஆச்சரியம் […]

சி.ஆர் சரஸ்வதி போலிசில் புகார்

https://youtu.be/FsaC7hgNXGk சசிகலாவிற்கு ஆதரவு தந்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் , போனை கூட எடுக்க முடியவில்லை : சி.ஆர் சரஸ்வதி போலிசில் புகார் சரஸ்வதிக்கே இந்த பாடா?, நாஞ்சில் சம்பத்திற்கு என்ன பாடோ? சென்னைக்குள்ளே இன்னொவாவில் சுற்றிகொள்ளவேண்டியதுதான் அப்படியானால் அந்த 122 உறுப்பினர்கள் நிலை என்ன? இனி தொகுதிக்கு எப்படி பணியாற்றுவார்கள்??? ஆக அந்த 122 உறுப்பினர்களும் தொகுதி மக்களுக்கு ஏதும் நல்லது செய்யவேண்டும் என நினைத்தால் தொகுதிபக்கம் செல்லாமல் இருப்பது நல்லது மீறி சென்றால் அடிக்க […]

என்னிடம் மோசமாக நடந்துகொண்டார் : நடிகை வரலட்சுமி

பிரபல தொலைகாட்சியின் அதிகாரி என்னிடம் மோசமாக நடந்துகொண்டார் : நடிகை வரலட்சுமி நேற்று பாவனா விவகாரம் தொடர்பாக கொதித்த விஷால் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார் இந்நிலையில் வரலட்சுமி தானும் பாதிக்கபட்டேன் என கிளம்பியிருக்கின்றார் அம்மணி என்ன சொல்ல வருகின்றார்? இதற்கும் விஷால் கடிதம் எழுதவேண்டும் என்கின்றாரா? இல்லை முன்பே இந்த புகாரை சொல்லியும் விஷால் கடிதம் எழுதாமல் போய்விட்டார் என வருத்தபடுகின்றாரா? பாவனாவிற்கு ஆதரவாக விஷால் கடிதம் எழுதியபின் அம்மணியால் அமைதி காக்க முடியவில்லை என்பது மட்டும் […]

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் கையெழுத்து…

500 மதுக்கடைகள் அடைக்கபடும். . முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல் கையெழுத்து… நெடுஞ்சாலையில் இருக்கும் அந்த கடைகள் ஏற்கனவே சர்ச்சையானது, மருத்துவர் ராமதாஸ் வேறு அதனை பூட்டுவேன் என சொல்லிகொண்டிருக்கின்றார் இந்த கடைகளைத்தான் மூடுவதாக பழனிச்சாமி அறிவித்திருக்கின்றார் டாஸ்மாக் அம்மா கண்ட கனவு, சின்ன அம்மாவின் நினைவு பின் எப்படி அதனை மொத்தமாக‌ மூடுவார்கள்??? அன்னார் இன்னும் அந்த குற்றவாளி ஜெயலலிதாவின் படத்தினை சுமக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது ஒரு மாநில முதல்வர், ஒரு குற்றவாளியின் படத்தினை […]

குமாரசாமி செய்த குழப்பத்திற்கு தமிழக அரசு ஏன் நஷ்ட ஈடு கேட்க முடியும்?

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு செலவுக்காக 12.4 கோடியினை கேட்கின்றது கர்நாடக அரசு ஜெயா சொத்துகுவிப்பு வழக்கில் கைபற்றபட்ட 21 கிலோ தங்கம், ஏகபட்ட வெள்ளி, இன்னும் வைரம், வைடூரிய அட்டிகைகள், 10,500 பட்டு சேலைகள் (அப்படித்தான் செய்திகள் சொன்னது), பல ஆயிரம் செருப்புகள், தங்க வெள்ளி பாத்திரம் என ஏராளம் உண்டு திருவனந்தபுர பத்மநாபசாமி கோவிலுக்கு முன்பு பெரும் புதையல் போயஸ் கார்டனில்தான் கைபற்றபட்டது, அதுதான் நெடுநாள் சாதனையாக இருந்தது சமீபத்தில்தான் பத்மநாப சாமி முந்திகொண்டார்.. அவை […]

மிஸ்டர் சிம்பு, வேர் ஆர் யூ?

நடிகை பாவனா சம்பவம், கடும் நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்: விஷால் பேட்டி தமிழ்நாட்டில் நந்தினி போன்றோர் கொல்லபட்டாலோ, சிறுமி ஹாசினி போன்றோர் கொல்லபட்டாலோ வராத கவலை இவருக்கு மலையாள நடிகை மீது மட்டும் பொத்துகொண்டு வருகின்றது கேரள நடிகைகள் மட்டும்தான் பெண்களா? அவர்களுக்கு மட்டும்தான் மானம் உண்டா? அதற்கு பங்கம் வந்தால் மட்டும் பொங்குவீர்களா விஷால்? தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் இப்படி நடக்கும்பொழுதெல்லாம் அன்னார் பிசியாக டூயட்பாடிகொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது வரவர இவர் அழிச்சாட்டியம் […]

எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விஜயசாந்தி வாழ்த்து

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுக்கு நடிகையும், முன்னாள் எம்பியுமான விஜயசாந்தி வாழ்த்து அம்மணி உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், இந்த பழனிச்சாமி அரசு போல தெலுங்கானாவில் ஒன்று அமைய சம்பதிப்பீர்களா? அமைய விடுவீர்களா? தமிழ்நாட்டில் அமைந்தால் வாழ்த்துவீர்களா? அப்படி நல்ல அரசு என்றால் தாரளமாக அழைத்து அங்கே அமைத்துகொள்கின்றீர்களா? சசிகலா குடும்பத்தை தெலுங்கானாவிற்கு தத்தெடுத்துகொள்வீர்களா? தமிழக மக்கள் உங்களுக்கு மிகுந்த நன்றிகடன் காட்டுவார்கள், தாரளமாக அங்கே இவர்களை அனுப்புவார்கள் செய்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா? எப்படியோ, தமிழக […]