பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்னும் 2 மணிநேரத்தில் அதுவும் தெரிந்துவிடும்..

இன்று நடைபெற போவது என்னவென்றால் குறைந்தபட்சம் 117 அதிமுகவினைரை மட்டுமாவது சசிகலா கும்பலால் கட்டுபடுத்த முடியுமா? முடியாதா எனும் போட்டியே அன்றி வேறல்ல‌ இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தோற்கும் பட்சத்தில் அவர்களின் முடிவு உடனே தொடங்கும் ஒருவேளை வெற்றிபெற்றால் அவர்களின் முடிவு கொஞ்ச நாளைக்கு தள்ளிபோடப்படும் அவ்வளவுதான் வெற்றி பெற்றாலும் 4 ஆண்டுகள் ஆட்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை, வழுக்கு தரையில் சுற்றிலும் எல்லோரும் உருட்டு கட்டைகளால் தாக்கும் நிலையில் கையில் எண்ணெய் குடத்தினை 4 வருடம் சுமந்து […]

காஸி : திரைப்பட விமர்சனம்

இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வெற்றி வங்கப்போர் அதில் குறிப்பிடதக்கது பாகிஸ்தானின் காஜி நீர்மூழ்கி கப்பலை போட்டு தாக்கியது அந்த யுத்தத்தில் இந்தியாவின் பெரும் பலம் ஐ.என்.எஸ் விக்ராந்த். இங்கிலாந்திடமிருந்து வாங்கபட்ட‌ விமானம்தாங்கி கப்பல், அதன் பலம் அக்காலத்தில் பெரிது, கிழக்கு கடற்கரை முழுக்க அது கட்டுபடுத்தியது. இது இந்தியாவின் பலம் என்றால் பலவீனம் எது என்று பார்ப்பதுதானே அமெரிக்க பழக்கம், அது மிக சரியாக கணித்தது இந்தியாவிடம் கப்பல் உண்டே தவிர நீர்மூழ்கி கப்பல் இல்லை […]

செங்கோட்டையனுக்கு ஆங்கிலம் தெரியாததா பிரச்சினை ?

செங்கோட்டையனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியாமல் போனதா? அவரே பாவம் அவருக்கு என்னதான் தெரிந்திருக்கின்றது, வழி தெரியாமல் அவரே விழித்துகொண்டிருக்கின்றார் தமிழில் கேட்டாலே சரியான பதில் சொல்ல தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அவரிடம் ஆங்கிலத்தில் கேட்டால் எப்படி? தமிழ்நாட்டு அரசியல்வாதிக்கு ஆங்கிலம் ஏன் தெரியவேண்டும்? காமராஜர், கலைஞர் எல்லாம் பெர்னாட்ஷா அளவிற்கா பேசினார்கள்? ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஜெயா ஆண்ட ஆட்சி தெரியுமல்லவா? இன்றைய நிலைக்கு காரணமே அந்த ஆங்கிலம் […]

சசிகலா என்றாலே தலைதெறிக்க ஓடமாட்டார்களா?

சிறையில் தனிமையாக உணர்கின்றாராம் சசிகலா, சாப்பாடு உட்பட பல விஷயங்களில் சிரமாம், சிறைத்துறையினர் ஒத்துழைக்கவில்லை என செய்தி பின்ன? இவரிடம் கன்னட சிறையினர் ஓடி சென்று நண்பர்கள் ஆவார்களா? இவரை நண்பராக ஏற்றுகொண்டு ஆனானபட்ட‌ ஜெயலலிதா செத்தே போனது யாருக்கு தெரியாது? பின் யார் அந்த சவாலை எடுக்க துணிவார்கள்? சசிகலா என்றாலே தலைதெறிக்க ஓடமாட்டார்களா?  

கிளைமேக்ஸை நோக்கி பரபரப்பு நகர்கின்றது…

நாளை சட்டமன்ற சிறப்பு கூட்டம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் கிளைமேக்ஸை நோக்கி பரபரப்பு நகர்கின்றது, பழனிச்சாமி கோஷ்டி ஒன்றும் பெரும் பலத்தில் இல்லை, 8 பேர் வோட்டை மாற்றினால் தீர்ந்தது விஷயம் அதாவது அமைச்சரவை அறிவிக்கபட்ட நிலையில் அதிருப்தி எம் எல் ஏக்கள் சிலர் நிச்சயம் இருப்பார்கள், கொடுப்பதை வாங்கிவிட்டு பட்டை நாமம் சாத்தலாம் எனும் திட்டம் சிலருக்குள் ஓடிகொண்டிருக்கும் ரிசார்ட் எம் எல் ஏக்களை முழுமையாக நம்ப முடியாது, அங்கிருந்தே தப்பியவர்கள் மத்தியில் தப்ப முயற்சித்துகொண்டு […]

ஏய் கன்னடமே, சசிகலாவினை நீயே வைத்து அழு…

தமிழக சிக்கல் உச்சமாக, இங்கு ஆளும் கட்சி பன்னீர் மீது கல்லெறிதல், எம் எல் ஏக்களை கடத்துதல், அவர்களுக்கு கோடிகளில் செட்டில் செய்தல் என கடும் பரபரப்பாக இருக்கின்றது இவர்களிடமிருந்து தங்கள் எம் எல் ஏக்களை காத்துகொள்ளும் விஷயத்தில் திமுக இருக்கின்றது ஊடகங்களுக்க்கு இப்பொழுது பன்னீரா, பழனிச்சாமியா என்பதே வியாபாரம் இந்த குழப்பத்தில் மிக அழகாக காவேரியின் குறுக்கே சத்தமே இன்றி அணைகட்டுகின்றது கன்னடம் தமிழக அரசு மல்லுகட்டி நீதிமன்ற கதவுகளை தட்டவேண்டிய நேரம், காரணம் முன்பு […]

டில்லி சூனியம்…

பில்லி சூனியம் கேள்விபட்டிருப்போம், “டில்லி சூனியம்” என ஒன்று உண்டு, அது அடிக்கடி தமிழக அரசியல்வாதிகளுக்கு வைக்கபடும் சமீபத்தில் அது பன்னீர் செல்வம் என்பவருக்கு வைக்கபட்டிருக்கின்றது, இனி பழனிச்சாமி என்பவருக்கான டில்லி சூனிய பூஜைகள் இப்பொழுது ஆரம்பமாகியிருக்கும் ஒன்று அவர்களிடம் அடிமையாவது அல்லது அலறி அடித்து ஓடுவது என்பதை தவிர டெல்லி சூனியத்திற்கு யாரும் தப்பமுடியாது. ஆனானபட்ட காமராஜரையே குழம்ப வைத்த டில்லி சூனியம் அது தன்னை ஹீரோ என நம்பிய எம்ஜிஆர் அந்த சூனியத்தால் கடைசிகாலத்தில் […]

உலகின் ஆபத்தான நாடு பாகிஸ்தான்..

இந்தியா 104 செயற்கை கோளினை ஏவி உலக சாதனை படைத்தஅதே நேரம் பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதலில் ஏராளமானோர் பலியாகியிருக்கின்றனர் உலகின் ஆபத்தான நாடு என பாகிஸ்தானை உலகம் முத்திரை குத்திவிட்டது வஞ்சகமும், கொடும் புத்தியும், கல் மனமும் கொண்டவர்கள் வாழ்வதுமில்லை, பொறுத்தோரும் உழைத்தோரும் தாழ்வதுமில்லை பாகிஸ்தானின் நிலை மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது, இனி அவர்களாகவே அழிந்துவிடுவார்கள் போல, இவ்வளவிற்கும் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள் அப்படியே திமுகவிலிருந்து பிரிந்த அதிமுகவும் தானே அடித்துகொண்டிருக்கின்றது, அதன் அஸ்திமன காலம் வெகு அருகில் […]

இந்தியாவே தமிழகத்தை பார்த்து சிரிக்காதா?

“முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்கக்கூடாது” ‍ : மு க ஸ்டாலின் இதுதான் கலைஞர் ஸ்டைல், இதில் கொஞ்சம் தேறுகின்றார் ஸ்டாலின் வரிபுலிக்கு பிறந்த குட்டிக்கு சில வரிகள் குறைவாக இருக்கலாம், ஆனாலும் புலிதான் உச்ச நீதிமன்றம் மண்டையில் தட்டி உள்ளே தள்ளியிருக்கும் ஒரு பொருளாதார குற்றவாளியினை, ஒரு மாநில முதல்வராக பழனிச்சாமி சந்திக்க முடியுமா? ஆனால் இவர் நிச்சயம் செல்வார். அப்படி சந்தித்தால் மொத்த இந்தியாவும் என்ன நினைக்கும்? ஒரு குற்றவாளியினை ஒரு […]

ஜெயா சமாதியில் சசிகலா அடித்து ….

ஜெயா சமாதியில் சசிகலா அடித்து ஏதோ முணுமுணுக்கின்றா, அடிமைகள் எல்லாம் ஏதோ கோயில் நடை திறந்தது போல பரவசநிலையில் கை கூப்பி நிற்கின்றார்கள் அடுத்து கூவத்தூரில் சவால் விடுகின்றார் சசிகலா, அங்கும் அடிமைகள் ஆர்பரிக்கின்றார்கள் இந்த காட்சியினை காட்டிவிட்டு சின்னம்மாவின் கர்ஜனைக்கு ஆளுநர் மாளிகை கதவு திறந்தது, சின்ன அம்மா ஆசிபெற்ற பழனிச்சாமி முதல்வரானால் என மகிழ்வோடு சொல்லிவிட்டு செய்திகளை முடிக்கின்றது ஜெயா டிவி அவர்களுக்கொரு தனி உலகம்… எடப்பாடி பழனிச்சாமிக்கு மோடி வாழ்த்து என்னது மோடி […]