பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தொழில்திறமை என்பது வேறு… ஊழலில் சம்பாதிப்பது வேறு…

ஜெயா ஊழல் பற்றி சொன்னால், உனக்கு தெரியாதா கலைஞர் குடும்பம் ஆசியாவின் பணக்கார குடும்பம் ஆகிவிட்டது, சன் டிவி மதிப்பென்ன, இந்த சொத்து மதிப்பென்ன? என குமுறுகின்றார்கள் சன்டிவி என்பது தொலைகாட்சி தொழில், எல்லோரையும் போலத்தான் அவர்களும் தொடங்கினார்கள், ஆனால் தொழில்திறமை இருந்தது ஒரு சேனல் 20க்கும் மேற்பட்ட சேனலானது அதோடு அவர்கள் ஓயவில்லை, எப் எம் ரேடியோ, நாளிதழ் என இறங்கிகொண்டே இருந்தார்கள், அவர்களுக்கு அத்துறை இயல்பாய் வந்தது, சாதித்தார்கள் சரி ஜெயாவும் டிவி தொடங்கினார், […]

அம்மா காட்டிய வழியம்மா….

இன்னும் அம்மா காட்டிய வழியில் இயங்க வேண்டும், அம்மா கண்ட கனவினை நிறைவேற்றவேண்டும் என கொஞ்சமும் யோசிக்காமல் அக்கட்சி சொல்லிகொண்டே இருக்கின்றது பன்னீரோ, பழனிச்சாமியோ கூவத்தூர் கோயிந்தசாமியோ அந்த கோஷத்தை விடவில்லை விடவும் மாட்டார்கள் உச்சநீதிமன்றம் மிக கடுமையாக ஊழல் வழக்கில் அவர்களை தண்டித்தபின்னும், இறந்த ஒரே காரணத்திற்காக ஜெயா சிறைசெல்லாமல் தப்பித்தபின்னும் இப்படியே சொல்லிகொண்டிருப்பது எப்படி? கலைஞர் எழுதிகொண்டிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பார் “இன்னும் அம்மா வழி நடப்போம் என்றால் அது ஆம், நாங்கள் ஊழல் வழிக்கு […]

ஜெயா டிவி செய்யற கூத்து தாங்கல…

இந்தியா முழுக்க பெங்களூர் சிறையினை உற்றுபார்க்க, நாமோ ஜெயா டிவியினை உற்றுபார்த்தோம் அப்படி ஒரு வழக்கு நடந்ததாகவோ, ஒரு தீர்ப்பு வழங்கபட்டதாகவோ , மூவரை அவகாசமின்றி நீதிமன்றம் உள்ளே தள்ளியதாக தகவலே இல்லை மாறாக சின்னம்மா எழுச்சியுரையாற்றினார், எல்லோரும் அழுதார்கள். ரிசார்ட்டில் கொதித்தார் எல்லோரும் கைதட்டினார்கள், அதன் பின் சின்னம்மா வீர சபதம் செய்தார், அவ்வளவுதான் அதன்பின் சின்னம்மா என்ன ஆனார் என சொல்லவே இல்லை, மாறாக ஆளுநரை அர்ச்சிக்க தொடங்கிவிட்டார்கள் சின்னமா இனி கொஞ்சநாளைக்கு வெளிவரமுடியாது, […]

திறடா கதவை, தள்ளுடா உள்ளே

சுப்ரீம் கோர்ட் செவிட்டில் அடித்து சொல்லியிருக்கும் பாயிண்டுகள் இப்படி இருக்கின்றது * ஒரே நாளில் 10 கம்பெனி தொடங்கியிருக்கின்றார்கள், ஆனால் கம்பெனி ஒரு வியாபாரமும் செய்யவில்லை *9 00 ஏக்கர் அரசு நிலத்தினை அரசு நிர்ணயிக்கும் விலையினை விட அடிமாட்டு விலைக்கு வாங்கியிருக்கின்றார்கள் என்றால் ஜெயா முதல்வராக செய்திருப்பது என்ன? *சசிகலா , சுதாகரன், இளவரசி போன்றோர் ஒரு தொழிலும் செய்யவில்லை எனும்பொழுது இவ்வளவு பணம் எப்படி வந்தது? உண்மை அதுதான், சசிகலா ஜெயா துணியினை துவைத்தார், […]

பெரும் சாதனை ஒன்றை இந்திய விண்வெளிதுறை செய்திருக்கின்றது

தமிழக குழப்பங்களை விடுங்கள், இது காமெடி ரகம். சிரிக்கலாம் அவ்வளவுதான் பெரும் சாதனை ஒன்றை இந்திய விண்வெளிதுறை செய்திருக்கின்றது 104 செயற்கைகோள்களை இந்திய ராக்கெட் விண்வெளியில் நிறுத்தியிருக்கின்றது, பெரும் சாதனை இது 1960களில் அமெரிக்காவும் ரஷ்யாவும் விண்வெளியில் சாதித்தபொழுது நாம் நடை கூட பழகவில்லை, கொஞ்சம் கொஞ்சமாக நாம் விண்வெளிக்கு செல்லும் பொழுது 1970கள் ஆனது அவர்கள் ஒலிம்பிக்கில் ஓட துவங்க, நாமோ நடைபழகிகொண்டிருந்தோம். சதிஷ் தவானும், அப்துல் கலாமும் கண்ட தோல்விகள் கொஞ்சமல்ல, ஆனால் போராடினார்கள் […]

அடுத்த இன்னிங்க்ஸுக்கு தமிழகம் ரெடி..

பெங்களூர் புறப்பட்டார் சசிகலா “அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் அந்த நினைவுகள் நெஞ்சில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள் அதுவொரு அழகிய நிலா காலம், நினைவினில் தினம் தினம் உலா போகும் தங்க சுரங்கங்கள் சேர்ந்து சென்னையில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்” ஜெயா சமாதியில் அடித்து சத்தியம் செய்துவிட்டு கிளம்பினார் சசிகலா அதனை பார்க்கும் பொழுது சபதத்தில் அடித்தது போல தெரியவில்லை, மாறாக “என்னை இப்படி உள்ளே தள்ளிவிட்டு நீ மட்டும் நிம்மதியாக உறங்குகின்றாயா?.. விடமாட்டேன்” […]

பன்னீரை சந்தித்தார் நடிகை கவுதமி இன்னும் பிற …

சென்னையில் பலத்த பாதுகாப்பாம், மெரினாவில் 4 பேர் கூடினாலே கலைந்து போக சொல்கின்றார்களாம் ஆனால் கூவத்த்தூர் கடற்கரையில் 130 பேர் கூடி ஆலோசனை செய்கின்றார்களாம், அவர்களை எந்த காவல்துறையும் கலைக்காதாம் இன்னும் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியோ, வஜ்ரா வாகத்தால் தாக்கியோ கலைத்தால் என்ன? அப்படியே தூக்கி லாரியில் ஏற்றி அந்தந்த தொகுதிகளில் கொண்டு இறக்கினால் என்ன? இதனை செய்ய பின்லேடனை நள்ளிரவில் சுட்டு கடத்திய அமெரிக்க சீல் படையினரா வருவார்கள்? தமிழக அரசுதான் […]

தீபா கட்சிக்கு என்ன செய்தார்?

தீபா கட்சிக்கு என்ன செய்தார்? அவரை எப்படி ஏற்கலாம் என சிலர் கொந்தளிக்கின்றார்களாம் அந்த கட்சியின் வரலாறு தெரியாமல் பேசுகின்றார்கள் அய்யோ பாவம் எம்ஜிஆரோடு கட்சி தொடங்கிய 7 பேரில் ஒருவரையா அடுத்த வாரிசு என 1987ல் தேர்ந்தெடுத்தார்கள்? கணபதியின் முன்னாள் மனைவியும் அண்ணா யாரென்றே சரியாக தெரியாத ஜாணகியினை முதல்வராக்கினார்கள், அவருக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு? இன்னொரு கோஷ்டி 1972 முதல் 1977 வரை கட்சியினை ரத்த அடிபட்டு வளர்த்த சீனியர்களை விட்டு விட்டு ஜெயலலிதாவினை […]

தமிழக நிகழ்வுகளும் பா.ஜ.க-வும்

கவர்னர் யோசிக்காமல் அன்றே முடிவு எடுத்திருந்தால் இன்றைக்கு தமிழகத்தின் நிலை என்ன? பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாருக்கு இப்பொழுது யாரோ நல்ல ஆலோசகர் கிடைத்துவிட்டார்கள், மனிதர் பொறுப்பாக் பேச தொடங்கியிருக்கின்றார், கொஞ்ச காலமக அவரிடம் மாறுதல் தெரிகின்றது தமிழிசைக்கு அப்படி யாரும் சிக்கவில்லையா? அல்லது சிக்கியவர்களை தன் போல மாற்றிவிட்டாரா? என்பதும் தெரியவில்லை பொன்னார் அப்படியே இருக்கின்றார், தமிழிசை மாறவே இல்லை, மாறவும் மாட்டார். தமிழக நிகழ்வுகளுக்கும், பா.ஜ.க-விற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” – அருண் ஜெட்லி முன்பு அமெரிக்க […]

வைகோ மைண்ட் வாய்ஸ்….

“எப்படியோ நமது மருமகன் டெக்ஸ்டைல்ஸ் வாங்கியது முதல், நாம் கண்டெய்னர் வாங்கியது வரை எல்லாமே வருமானத்துக்கு அதிகம் தான். நம் மீது வழக்கு போட்டிருந்தால் என்ன ஆயிருக்கும்? ஆனாலும் நம்மீது ஒரு வழக்கும் இல்லை, நம்மை கண்டு கொள்ளாதவரை நமக்கு லாபம் கலைஞரிடம் இருந்திருந்தால் இவ்வளவு கிடைத்திருக்குமா?