பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த வைகோ விவகாரம்தான் என்ன?

முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலைபோட்ட தகறாறில் ஏதோ அடிபிடி சர்ச்சையாக உடனே எனக்கு பாதுகாப்பில்லை என சொல்லி தேர்தலில் இருந்து விலகினார் வைகோ அப்படியே இப்பொழுதும் எனக்கு பாதுகாப்பில்லை என சொல்லி அரசியலிலிருந்தே விலகினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எங்கோ ஒரு கிராமத்தில் 4 பேரை சமாளிக்க பயந்து தேர்தலைவிட்டே ஓடியவர்தான் இன்று திமுகவிற்கு சவால்விட்டுகொண்டிருக்கின்றார் இதில் வைகோ அன்று கலைஞருக்காய் உளியினை பிடித்தார், டிடிஆரை பிடித்தார் என ஏகபட்ட முட்டுகள். […]

கறுப்பு பணத்தினை ஒழித்துவிட்டோம், இந்தியா சுபிட்சமாகுமா ?

கறுப்பு பணத்தினை ஒழித்துவிட்டோம் இனி இந்தியா சுபிட்சமாகும் என்றார்கள் உண்மையில் அப்படி ஒழித்தால் என்ன ஆகியிருக்கும்? விலைவாசி இறங்கி இருக்கும், மக்கள் சுமை குறைந்திருக்கும் ஆனால் பெட்ரோல் விலை ஏற்றியிருக்கின்றார்கள் சர்வதேச சந்தையில் பெருமாற்றம் இல்லை, அப்படி இருந்தும் ஏன் ஏற்றுகின்றார்கள்? உண்மையில் இந்த அரசு தடுமாறுகின்றது, டாலருக்கு நிகராண மதிப்பு மிக அதிகரிக்கின்றது. அதனை தடுக்க பெட்ரோல் விலையில் கை வைக்கின்றார்கள் அரசு ஆஆஆஆய்ய்ய் ஏய்ய்ய்ய் என அதிரடி காட்டினாலும் அதன் பலவீனமும், நிர்வாக கோளாறும் […]

மிஸ்டர் வாங் ஜியாங் தமிழகம் வாருங்கள்

சீனாவில் 92 பில்லியன் டொலர் சொத்துக்களை வாங்க மறுத்த மகன்பொருத்தமான வாரிசைத் தேடிவரும் கோடீஸ்வர தந்தை நமது ஊர் அம்பானி போல சீனாவில் வாங்க் ஜியான், பெரும் கோடீஸ்வரர், மோடி சீனா சென்றபொழுது அவரை சந்தித்தார் அவரும் 1000 கோடி இந்தியாவில் கொட்டுகின்றேன் என உறுதியளித்தார் உலகெல்லாம் அவருக்கு பெரும் தொழில் உண்டு, சில ஜாக்க்சிசான் பட வில்லன் கூட அவர் சாயலில் வருவார். அப்படிபட்ட பெரும் கோடீஸ்வரனின் மகன், எனக்கு உங்கள் சொத்துக்கள் வேண்டாம் என […]

தலையில் துண்டுபோட்டு டீ குடித்த நடராஜன்

முன்பெல்லாம் முட்டுசந்தில் மறைந்து, தலையில் துண்டுபோட்டு டீ குடித்த நடராஜன் இப்பொழுதெல்லாம் பகிரங்கமாக மேடை ஏறி பேசுகின்றார் பழ.நெடுமாறனின் மகன் அமெரிக்காவில் விருது வாங்கியதற்கு இவர்கள் பாராட்டுவிழா வைத்தார்களாம், அமெரிக்காவில் விருது வாங்கிய எத்தனையோ தமிழர்கள் உண்டு. அவர்கள் எல்லாம் முக்கியமா? பழ.நெடுமாறனின் மகன் வாங்கினால்தான் அது சிறப்பு அந்த விழாவில் நடராஜன் பேசியிருக்கின்றார், நிறைய அள்ளி விட்டிருக்கின்றார், அதாவது மகாத்மா காந்திக்கே மோதிரத்தை கொடுத்தாராம் பழ.நெடுமாறனின் தந்தை, உடனே காந்தி கோர்ட்டை கழற்றி அவரிடம் கொடுத்தாராம். […]

காலைக் கதிர்கள்…

எங்கே திரும்பினாலும் சின்னம்மா வாழ்க என போஸ்டர்கள் பேனர்கள், ஜெயா டிவி முழுக்க முழுக்க சின்னம்மா டிவியாகிவிட்டது இனி பெயர் மாற்றம் மட்டும்தான் பாக்கி இணையத்திலும் அதே அழிச்சாட்டியம் முகநூலில் 4 பதிவுகள் வந்தால் அதில் 3 எங்காவது சின்னம்மா என ஒட்டபட்ட பேனரின் படமாக இருக்கின்றது அவர்களுக்கு சின்னம்மா, சித்தப்பாதான் திரும்பும் இடமெல்லாம் தெரிகின்றார்கள் எமக்கு சின்னதம்பி குஷ்பூ மட்டும்தான் கண்ணுக்குள்ளே நிற்கின்றார் அவர்கள் சின்னம்மா, சித்தப்பா வாழ்க என சொல்லிகொண்டே இருக்கட்டும் நாம் இப்படி […]

மலேசிய பெருமாள் கோவிலில் …

சீனர்களிடம் ஒரு கலாச்சாரம் உண்டு, எந்த நாட்டிற்கு சென்றாலும் அவர்கள் இருக்கும் இடத்தினை சீன கலாச்சாரத்திற்கு மாற்றிவிடுவார்கள் இந்தியர்களிடம் அப்பழக்கம் குறைவு எனினும், மலேசிய தமிழர்கள், இந்து அடையாளங்களுடன் பல இடங்களை தமிழக சூழலிலே மாற்றி , அதனை தொடர்ந்தும் வருகின்றார்கள், பெரும் இந்து ஆலயங்களும் அதில் ஒரு வகை அப்படி ஒரு பெருமாள் கோயிலுக்கு செல்ல நேர்ந்தது சிறிய கோவில், ஆனால் அழகாக சாஸ்திரப்படி அமைத்திருந்தார்கள், சுற்றிலும் ஆழ்வார்களின் பாடல்களை அழகுற எழுதியிருந்தார்கள், கடவுள் படங்களை […]

வைகோ திமுக தொண்டர்களால் விரட்டப்ட்டார்..

கலைஞரை நலம் விசாரிக்க சென்ற் வைகோ திமுக தொண்டர்களால் விரட்டபட்டார் கலைஞருடன் இருந்து வளர்ந்து பின் அவருக்கே பாடம் கற்பிட்த்த பலபேரில் வைகோவும் ஒருவர், தொண்டர்களின் கோபம் நியாயமானது, ஆனால் அதற்காக செய்திருக்கும் காரியம் கொஞ்சமும் நியாமில்லாதது. உடல்நலம் இழந்த தன் முன்னாள் தலைவரை காணவந்த ஒருவரிடம் அமைதி காத்திருக்கலாம், ஒருவேளை கலைஞரை சந்தித்திருந்தால், கலைஞரால் பேசமுடிந்தால் என்ன கேட்டிருப்பார்?? “வாய்யா, இப்பொழுதுதான் சசிகலா அனுப்பியதாக செங்கோட்டையன், தம்பிதுரை எல்லோரும் வந்தார்கள், நீ ஏன் அவர்களோடு வரவில்லை […]

கலைஞரின் முத்திரை..

நாம் திமுகவின் ரகசிய பிரிவு என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அப்படி எல்லாம் அல்ல, திமுக மீது பெரும் அபிமானம் ஏதும் இல்லை. கலைஞர் என்பவர் முழுக்க ஏற்றுகொள்ளும் அரசியல்வாதி அல்ல, ஆனால் அதே நேரத்தில் அவரை முற்றிலும் விலக்கியும் விட முடியாது எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தது வானத்து விண்கல் பூமியில் விழுவது போல ஒரு விபத்து, அது விழுந்து பெரும் நெருப்பினை உண்டாக்கி, பின் புகை மூட்டம் உண்டாகி அது இன்னும் தெளியவில்லை ஆனால் கலைஞர் போன்ற […]

இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது…

தமிழ்நாட்டை “இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது” என ஒரு காலத்தில் சவுடால் பேசிய ரஜினிகாந்த் இன்று தனுஷ் படத்திற்கு கிளாப் அடித்துகொண்டிருக்கின்றார் அவர் எப்போழுது பேசுவார்? என்ன பேசுவார்? என யாருக்கும் தெரியாது, ஆனால் பேசவேண்டிய நேரத்தில் பேசவே மாட்டார். மத்திய அரசு கஜானாவை நிரப்புவதிலேயே கவனம்: திருநாவுக்கரசர் மத்திய அரசு இந்திய கஜானாவினை நிரப்புவதில் கவனமில்லாமல் பாகிஸ்தான் கஜானாவினை நிரப்புவதிலா கவனமாக இருக்கும்? இவர் அம்மா இறந்த அதிர்ச்சியில் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார், பேசட்டும் இவரின் கவனம் எங்கிருக்கின்றது? […]

ஜெயா மீண்டும் வந்துவிடுவாரா?: திருநாவுக்கரசு

திருநாவுக்கரசர் ஜெயா மீண்டும் வந்துவிடுவாரா? என சொன்னதற்கு, இப்படி சொன்னால் ராஜிவ் மீண்டும் வந்துவிடுவாரா? என இனவுணவாளர்கள் கேட்க எவ்வளவு நேரமாகும் என பதிவிட்டிருந்தோம் சொல்லி வைத்தாற்போல அடுத்த 5 நிமிடத்திலே சீமான் அதே பாணியில் சீறிவிட்டார். நம்மை கண்காணித்து கொண்டிருப்பாரோ? ஆனால் சில அதிரடி கேள்விகளையும் கேட்டார், நடராஜனின் நெருங்கிய நண்பரான சீமான், திடீரென சசிகலாவினை எதிர்க்கும் நோக்கம் தெரியவில்லை. ஜெயா மரணத்தில் அவருக்கு உண்மை வேண்டுமாம் ஆச்சரியமாக அவரின் அண்ணன் பிரபாகரன் மர்மத்தில் அப்படி […]