பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியாயிற்று….

இந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியாயிற்று, இன்னும் வெறும் 20 நாள் சூட்டிங் என விஷால் மேக் அப்புடன் வந்துவிட்டார் வைகோ நடுவுல கொஞ்சம் பக்கம் காணோம் விஜய் சேதுபதி போல ஆகி, “பாஜகவா அய்யய்யோ அது மதவாத கட்சி, ஸ்டாலின் அண்ணே நல்லாஇருக்கியா அண்ணே..” என சென்று சேர்ந்துவிட்டார் அவர் தலையில் அடிபட்டிருக்க்கின்றது என அறியாத ஸ்டாலினும் வரவேற்றிருக்கின்றார் ஆக இப்போதைக்கு திமுக, தினகரன், மதுசூதனன், விஷால், பாஜக‌ என ஐம்முனை போட்டி நடக்கின்றது. […]

அண்ணே நீங்க வசமா மாட்டிகிட்டீங்க….

அண்ணே நீங்க வசமா மாட்டிகிட்டீங்க, பிரபாகரன் ஒரு மாவீரன், வீரத்திற்கு எடுத்துகாட்டுண்ணு சிங்களனே சொல்லிட்டான் யார்டா சொன்னா?? சிங்கள புத்த குருண்ணே, அப்படியே சரத் பொன்சேகாங்கிற தளபதி கூட சொல்லிருக்காரு. அந்த சரத் சும்மா இல்லண்ணே பிரபாகரன் வச்ச குண்டுல 27 தையலோட பொழைச்சவரு, அவரே பிரபாகரன பத்தி பெருசா பேசிட்டாரு, இனி நீங்க என்ன எழுதுனாலும் நடக்காது ஹிஹிஹிஹி டேய் ஏன் சொன்னாங்க‌ அவர் வீரம் அப்படிண்ணே அடேய் இந்த பிரபாகரன் சக போராளி இயக்கத்தை […]

புனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள்…

புனித தோமா பற்றி தெரியாமல் எழுதிவிட்டாய் என பலர் சீறுகின்றார்கள். உலக வரலாற்றை எல்லாம் தேடியவன் தோமாவின் வரலாற்றை தேடாமல் இருப்ப்போமா? இயேசுவின் 12 சீடர்களில் தாமஸ் எனும் தோமையாரும் ஒருவர், எங்கோ பாமரராய் சுற்றி திரிந்த அவரை இயேசு சீடராக்குகின்றார் ஆனால் இயேசு உயிர்த்ததை நம்பமாட்டேன் என அடம்பிடித்தபொழுது இயேசு வந்து இதோ என் காயம் என காட்டி அவரை நம்பவைத்து முழுமையாக ஆட்கொண்டார் இத்தோடு பைபிள் புனித தாமஸ் என்பவரை பற்றி முடித்துகொள்கின்றது, அதன்பின் […]

தமிழக டிவிக்கள் பெரும் துரோகம் செய்கின்றன‌

இந்த தமிழக டிவிக்கள் குழந்தைகளுக்கும், மாணவ சமூகத்திற்கு எதிராகவும் பெரும் துரோகம் செய்கின்றன‌ ஒரு சேனலில் சிறு குழந்தைகள் எல்லாம் காதை பொத்திகொண்டு ஒரு கையால் மைக் பிடித்தபடி பாடல் பாடிகொண்டே இருக்கின்றனர், அது என்னவோ உலக சாதனை முயற்சி என்பது போல் பெற்றோர்களும் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிய பார்த்துகொண்டிருக்கின்றாகள் இதற்கு நல்ல சம்பளம் வாங்கிகொண்டு ரிட்டையர்டு பாடகர்கள் ஜட்ஜ்களாம் ஒரு டிவியில் பேய்பிடித்து ஆடும் நபர்கள் போல பிஞ்சுகள் ஆடிகொண்டிருக்கின்றன, இங்கும் பெற்றோர்கள் தங்கள் […]

இந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்தது?

இந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்ததென்ற ஆராய்ச்சிக்கு பல கோணங்கள், ஆனால் ஏற்றுகொள்ள கூடிய வாதம் இதுதான் செங்கடல் பகுதிக்கும் கேரளாவிற்கும் சாலமோன் காலத்தில் இருந்தே போக்குவரத்து உண்டு, அப்படி கிறிஸ்தவம் பரவ தொடங்கிய காலத்தில் அது கேரளாவிற்கும் வந்தது. யூதர்கள் கொச்சின் வந்ததும், இஸ்லாம் கேரளா வந்ததும் அப்படித்தான் ஆனால் அது கேரளாவினை தாண்டி பரவவில்லை. கேரளாவின் சேரமன்னன் இஸ்லாமாக மாறி மெக்காவில் மரித்தும் கூட கேரளா தாண்டி இஸ்லாம் பரவவில்லை பின் அது வடக்கே இருந்துதான் […]

சமீபத்தில் இந்தியா வந்திருந்தார் ஒபாமா…

மிக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார் ஒபாமா, பதவி போன பின்பு யார் வந்தாலும் கண்டு கொள்ளமாட்டார்கள் அல்லவா? கடவுளில் ஒருவரே நான் முன்னாள் கடவுள் என வந்தாலும் இங்கு மதிப்பில்லை அப்படி வந்த ஒபமா சும்மா இருக்கவில்லை மோடியினை சந்தித்து எல்லா மத மக்களையும் சமமாக மதிக்க வேண்டும், எந்த மக்களுக்கும் அவர்கள் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு என பேசியிருக்கின்றார் இந்த ஹாதியா விவகாரம் அவர் காதுக்கு எட்டியிருக்குமோ என்னமோ? பதிலுக்கு மோடி என்ன […]

கலைஞர் என்றால் களத்தில் இறங்குவார்…

கலைஞர் என்றால் களத்தில் இறங்குவார், அந்த ஜெயா இருந்திருந்தால் ஹெலிகாப்டரிலாவது ஒரு சுற்று சுற்றிவரும் இப்போதிருக்கும் முதலமைச்சர் என்ன திட்டம் வைத்திருக்கின்றாரோ தெரியவில்லை, நானே கட்சி புயலில் அடிபட்டு கிடக்கின்றேன் என்னை மீட்க யார் உண்டு? என அழாதவரை சிக்கல் இல்லை இந்த ராமசந்திரன் நூற்றாண்டு விழா, தினகரன் நடத்தும் கிறிஸ்மஸ் விழா என யாராவது அப்பக்க்கம் செல்லட்டும், அப்பொழுது இருக்கின்றது அடி என கன்னியாகுமரி பக்கம் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

இன்று சவேரியாரின் நினைவு நாள்

விவசாயியும் மீணவனும் இந்தியாவில் சில தொழிலாள இனங்களுக்கு கால காலமும் சிக்கல், பண்டைய காலமுதல் அப்படித்தான் இருந்திருக்கின்றது. சில தொழிலாள இனங்கள் அடக்கபட்டு, புறக்கணிக்கபட்டு இருந்தன, அதிலொரு இனம் ஆடுமாடு மேய்ப்பவர்கள். அவர்கள் மிக ஒடுக்கபட்டகாலத்தில் பகவான் கிருஷ்ணனே அவதரித்து அவர்களை காப்பாற்றி இருக்கின்றார். இன்று விவசாயமும் அந்த புறக்கணிக்கபட்ட‌ படியலில் இணைந்தாயிற்று ஆனால் காப்பாற்ற இன்னும் அவதாரம் வரவில்லை. ஆனால் இந்தியதொழிலாள இனங்களில் குறிப்பாக தென் தமிழகத்தில் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு தொழிலாள இனத்தின் சிக்கல் […]

போட்டியிடுகின்றா விஷால் ?

ஆர்.கே நகர் இடைதேர்தலில் போட்டியிடுகின்றா விஷால் : செய்தி இந்த மனிதருக்கு என்னாயிற்று? தேர்தல் என அறிவித்தால் இவருக்குள் ஏதோ ஒரு சாமி இறங்குகின்றது. நடிகர் சங்க தேர்தல் என்றால் இறங்குகின்றார், தயாரிப்பாளர் சங்க தேர்தல் என்றாலும் இறங்குகின்றார், இப்பொழுது சட்டமன்ற தேர்தலுக்கும் வந்துவிட்டார் இனி ஐ.நா சபை தேர்தலுக்கு செல்வார் போல இவர் வாக்கை பிரிக்க இறங்குகின்றார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, சரி விஷால் இறங்கிவிட்டால் இனி சரத்குமார் இறங்காமலா இருப்பார் அவர் வந்தால்தானே இனி […]

கண்ணெதிரே தோன்றினார் குண்டு கல்யாணம்…

சற்றுமுன் ஒரு கடைக்குள் நுழையும் பொழுது அவர் நின்றுகொண்டிருந்தார், அதே உருவம் அந்த உருவத்திற்கு ஏற்ற வட்ட முகம், எங்கோ பார்த்தது போல இருக்கின்றது என உற்றுபார்த்தால் தில்லு முல்லு ரஜினியுடனும், அதிமுக மேடையிலும் பார்த்தே அதே முகம். அந்த குண்டு கல்யாணம் திரையில் பார்ப்பது போலவே இருந்தார், ஜெயலலிதா கட்சியில் ஏன் அவர் இணைந்தார் என்பதற்கு பல காரணங்களில் சில காரணம் உடனே விளங்கியது அதாவது அவ்வளவு கெத்தாக நின்றுகொண்டிருந்தார், பார்வை உட்பட‌ “அண்ணே.. அம்மா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications