பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வேறு எதுவுமாக இருக்கவே முடியாது

முகமது நபியின் புனிதமான போதனையினையும், அவருக்கு பின் வந்த புனிதமான கலீப்பாக்களின் ஆட்சியினையும் படித்து பாருங்கள் இஸ்லாம் அல்லாதவரை கொல்லுங்கள் என எங்குமே அவர்கள் சொல்லவில்லை இஸ்லாமிய வரலாற்றில் முகமது நபி காலம் முதல் ஆட்டோமன் துருக்கியர் மொகல் காலம் வரை எல்லா காலத்திலும் எல்லா மதத்தாரும் வாழ்ந்திருக்கின்றனர் இவ்வளவுக்கும் இஸ்லாமியரின் பரம வைரியான யூதர்களே நபி காலத்தில் இருந்து ஆட்டோமன் காலம் வரை பாதுகாப்பான வாழ்வினையே வாழ்ந்திருக்கின்றனர் மிக சிறந்த இஸ்லாமிய மன்னரான சலாவுதீன் யூதருக்கும் […]

தமிழ் தேசிய கும்பலுக்காக சென்றீரா?

கோமதி மாரிமுத்து என்பவர் நிச்சயம் நல்ல ஓட்டபந்தய வீரர் ஆனால் ஜெகத் கஸ்பர் என்பவருடன் அமர்ந்து பேட்டி கொடுத்தபின் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அம்மணி குழப்பவாதி தெளிவானவர்களுக்கு ஜெகத் கஸ்பர் எனும் போலிபாதிரியோடு என்ன தொடர்பு? அட கரகாட்ட கோஷ்டிகளும் நாட்டுபுற கோஷ்டிகளுமே ஜெகத்கஸ்பாரை கண்டு தலைதெரிக்க ஓடும்பொழுது அம்மணிக்கு என்ன வந்தது? அம்மணி முன்பு ஆடிய விளையாட்டுக்காக அவருக்கு அரசுபணி கொடுக்கபட்டிருக்கின்றது, நிச்சயம் வாழ்த்துகுரியது அதாவது அரசு அவருக்கான உதவிகளை சரியாக செய்கின்றது, நல்ல வேலை […]

இதையா இஸ்லாம் போதித்தது?

இலங்கை கொடூர தீவிரவாதியில் ஒருவனுக்கு சிறு குழந்தை இருக்கின்றது ராணுவம் வளைத்து நிற்கும் பொழுது அவன் மதிகெட்டு தற்கொலை தீவிரவாதியாய் செத்துவிட அக்குழந்தையும் காயம்பட்ட நிலையில் வாப்பா வாப்பா என கதறுகின்றது. ராணுவம் குறிப்பிட்ட‌ வீட்டிலிருந்து அக்குழந்தையினை மீட்கின்றது, அக்குழந்தையோ வாப்பா வாப்பா என அழுது என் அப்பாவிடம் என்னை சேர்த்துவிடுங்கள் என மழலையில் கத்துகின்றது ராணுவம் அக்குழந்தையின் காயத்துக்கு மருந்திடும் பொழுதே வாப்பா வாப்பா என அது மழலையில் கதறுவது இந்த நூற்றாண்டின் உருக்கமான சோக […]

ஓவிய ராஜா ரவிவர்மன்

கலைகளில் சிறந்ததும் கடினமானதும் மிக நுட்பமானதும் ஓவிய கலை, மற்ற கலைகளில் பெருந்தவறு என்றாலும் திருத்தலாம் ஆனால் ஓவியத்தில் சிறு பிழை என்றாலும் முடிந்தது விஷயம், சிற்பமும் ஓவியமும் அப்படியே சிற்பத்தின் அஸ்திவாரம் ஓவியம் என்பதால் அதுதான் முதல்படி இதைத்தான் பகவான் கண்ணன் தெளிவாக சொன்னான் “அர்ஜூனா கலைகளிலே நான் ஓவியம்” ஓவிய கலையில் பண்டைய இந்தியா சிறந்திருந்தாலும் , தென்னிந்தியாவில் அது சிற்ப கலையாகவே வளர்ந்து நின்றது. கல்லில் வடிக்கும் ஓவியங்கள் காலத்திற்கும் நிலைக்கும் என […]

அவர்கள் எண்ணபடியே வாழட்டும்

பள்ளிவாசல் என்றால் குரான் இருக்கும் இன்னும் ஏகபட்ட இஸ்லாமிய நூல்களும் அவற்றுக்கான விளக்கங்களும் இருக்கும் வந்தோருக்கு உணவும் இன்னும் பிற நல்ல விஷயங்களும்தான் பள்ளிவாசலில் இருக்கும், இதுவரை உலகம் கண்டது ஆச்சரியமாக இலங்கை பள்ளிவாசல்களில் என்னவெல்லாமோ மீட்கபடுகின்றன, அதில் வாள் முதல் ஏகபட்ட ஆயுதங்களும் அடக்கம் பாலில் கலந்துவிட்ட விஷம் போல அந்த கொடூர கும்பல் புனிதமான பள்ளிவாசல்களை ஆயுத குடோனாக மாற்றி வைத்து தொலைத்திருக்கின்றன‌ இந்நிலையில் அங்கு ஒரு விஷயம் மனதை உருக்குகின்றது தேவாலயங்களில் பலியானோருக்காக […]

அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருக்கின்றது

தனது மாபெரும் பலமும் தன் வான்பலத்தின் அடையாளமுமான எப் 35 ரக விமானம் பசிபிக் கடலில் இன்னும் மீட்கபடாதத விவகாரத்தில் அமெரிக்கா கடும் அதிருப்தியில் இருக்கின்றது இந்த பழனிச்சாமி அரசு அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது போல அவற்றை பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு சும்மா இருக்க முடியாது காரணம் அதன் அதிநவீன தொழில்நுட்பம் எதிரிகளான சீனா, ரஷ்யா கையில் கிடைத்துவிட்டால் சிக்கல், அதே போல தயாரித்துவிடுவார்கள் இதனால் மிக கடுமையான முயற்சி செய்தும் விமானம் விழுந்த […]

கடும் எச்சரிக்கை

இலங்கையில் இன்னும் தாக்குதல் நடத்த படலாம் என கடும் எச்சரிக்கை விடுதிருக்கின்றது அமெரிக்கா அமெரிக்காவினை விட இஸ்ரேலின் எச்சரிக்கையே கடும் அச்சம் கொடுக்கின்றது, ஆம் இலங்கையின் இஸ்ரேலியருக்கு மிக மிக உச்சபட்ச எச்சரிக்கையினை அந்நாடு கொடுப்பது சரியான அறிகுறி அல்ல‌ பிடிபடும் ஆயுதமும் கொல்லபடும் நபர்களிடமிருந்து கைபற்றபடும் தகவலும் பெரும் அதிர்ச்சி அளிக்கும் ரகம் கொழும்பு மட்டுமல்ல, மொத்த இலங்கையினையே ஆப்கன் போல நாசமாக்கும் பெரும் சதிதிட்டம் இது ஆடிப்போய் இருக்கின்றது சிங்கள உச்சபீடம் நிலமை இன்னும் […]

உலக வழக்கம் இது

இஸ்லாமியர் என்றாலே கொடூரமானவர்கள் என்றும் கொள்ளை அடிப்பவர்கள் என்றும் ஆலயங்களை நொறுக்கி தீக்கிரையாக்குவார்கள் என்றும் ஏகபட்ட பேர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உண்மை அது அல்ல, அக்காலத்தில் மதகுருக்களின் மறைமுக ஆட்சியில் ஆலயமே செல்வங்களின் பொக்கிஷங்களின் கஜானாவாக இருந்தது ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் ஆலயத்தை நெபுகாத்நேச்சர் எனும் பாக்தாத் மன்னன் அப்படித்தான் உடைத்தான் அனுராதாபுர புத்த விகாரையினை ராஜராஜ சோழன் அப்படித்தான் கொள்ளையடித்து வந்தான் அலெக்ஸ்டாண்டரும், நெப்போலியனும் எகிப்தின் கல்லறைகளையும் ஆலயங்களையும் விடாமல் […]

விளையாட்டும் இந்த உலகில் முக்கியமல்லவா?

தங்க மங்கை கோமதி தமிழ்நாடு திரும்பிவிட்டார் ஆயினும் அரசு பெரிதாக கண்டுகொண்டதாக தெரியவில்லை இந்திய பெண்கள் ஹாக்கி அணியினையே கண்டுகொள்ளாத மத்திய அரசு வழக்கம் போல் கண்டுகொள்ளவில்லை பழனிச்சாமி அரசு சம்பிரதாயத்துக்கு ஏதோ சொன்னது திமுக 10 லட்சம் பரிசு கொடுத்திருக்கின்றது, நிச்சயம் வாழ்த்துகுரியது, தமிழக காங்கிரசும் பரிசு அறிவித்திருக்கின்றது நடிகர்கள் உட்பட அந்த சமூகம் அமைதி, தொழிலதிபர் உலகமும் கனத்த அமைதி கோமதியின் கதையினை திரும்பிபார்த்தால் வலிக்கத்தான் செய்கின்றது கடும் வறுமை, அந்த வறுமையிலும் விடாபிடியாக […]

பிட்டி தியாகராயர்

தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர். பிராமணருக்கு எதிரான முதல் குரலை இவர்தான் எழுப்பினார் நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார் மற்ற சாதி மக்களின் […]