பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முருகப்பெருமான் ஆலயங்கள் : கண்ணனூர் பால சுப்பிரமணியர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கண்ணனூர் பால சுப்பிரமணியர் ஆலயம். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே அமைந்திருக்கின்றது இந்த ஆலயம், காலத்தால் மிக மூத்த இந்த ஆலயமானது புராணக் காலத்திலே உண்டு, ராஜயோகம் தரும் இந்த ஆலயம் முருகப்பெருமான் இந்திரனை வென்று அவனின் பிணிமுக யானையினை வாகனமாக கொண்ட கோலத்தைக் காட்டி முன்பே ராஜகுருக்களால் அமைக்கப்பட்டது, மிகத் தொன்மையானது. முருகப்பெருமான் போர்க்கடவுள் அப்படியே தமிழ் கடவுள் என்பது வெறுமனே தமிழ் மொழிக்காக மட்டுமல்ல, முருகப்பெருமான் வழிபாடு லௌகீகமும் ஆன்மீகமும் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றத்தூர் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றத்தூர் முருகப்பெருமான் ஆலயம். முருகப்பெருமான் ஆலயங்களில் புகழ்பெற்றதும் தொன்மையானதுமான இந்த ஆலயம் திருப்போரூருக்கும் திருத்தணிகை மலைக்கும் இடையே சிறிய குன்றில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வரலாறு முருகப்பெருமானிடம் இருந்தே துவங்குகின்றது. முருகப்பெருமானின் சிறப்பே அவர் எல்லா வகை போரையும் செய்தார் என்பது. வான் வழி, கடல் வழி , நிலவழி போர் என எல்லாமும் செய்தவர் அவர், அந்த முருகப்பெருமான் திருபோரூரில் சில அசுரர்களை ஒழித்துவிட்டு தணிகை மலை நோக்கி செல்லும் போது […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : வில்பட்டி முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : வில்பட்டி முருகன் ஆலயம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மலையில் அமைந்துள்ளது இந்த வில்பட்டி வெற்றி வேலப்பர் ஆலயம், இது தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் மகா தொன்மையானது. எவ்வளவுக்குத் தொன்மையானது என்றால் அகத்தியர் போகர் காலத்தில் உருவான ஆலயம் இது, இரு வகையில் இது தொன்மையானது. இந்த மலையில்தான் அகத்தியரின் சீடரான போகர் வசித்தார், இங்கு நிரம்பியிருக்கும் மூலிகைகளை ஆராய்ந்து மருந்து செய்வது, மானுட இனத்துக்காய்ப் பெரிய தவத்தை இயற்றுவது எனப் போகர் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : சொர்ணமலை முருகன் ஆலயம் கோவில்பட்டி.

முருகப்பெருமான் ஆலயங்கள் : சொர்ணமலை முருகன் ஆலயம் கோவில்பட்டி. தென்முனையில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது சொர்ணமலை அல்லது கதிரேசன் மலை எனும் முருகப்பெருமான் ஆலயம் இதன் வரலாறு சுவாரஸ்யமானது. இந்த முருகப்பெருமானின் வரலாறு இலங்கை கதிர்காமம் ஆலயத்தில் இருந்து துவங்குகின்றது. பொதுவாக தென்முனை மக்களுக்கு அன்றைய பிரதான தொழில்களில் ஒன்று வணிகம் , அதிக மழைவளம் ஆறுவளம் இல்லா அப்பூமியில் நாயக்கர் காலத்தில் உருவான சாலை வசதிகளும் இதர வசதிகளும் வியாபாரத்தைப் பெருக்கின‌. சாத்தூர், சிவகாசி […]

சிவபெருமானின் வன ஆலயங்கள் (பஞ்சவன சிவதலங்கள்)

சிவபெருமானின் வன ஆலயங்கள் (பஞ்சவன சிவதலங்கள்) – முன்னுரை. தென்னாடு கொண்ட சிவனே போற்றி என்பது கயிலாயத்துக்கு தெற்கே உள்ள நிலத்தினைச் சொன்னாலும் தென் பகுதியான தமிழகத்தில் சிவனுக்கான ஆலயங்கள் மிக அதிகம். அவை வகைபடுத்தப்பட்ட முறையும் அதிகம். பஞ்ச ஆரண்ய தலம், நவ கைலாயம், அட்ட வீராட்டானம், சப்த விடங்கர், நவபுலியூர், பஞ்ச சபைகள் என எத்தனையோ வகைகளில் சிவாலயங்கள் வகைபடுத்தப்பட்டன. ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரம் தத்துவங்களைக் கொண்டவை, சிவன் ஒவ்வொரு வடிவிலும் வந்து போதித்து […]

பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள்.

பஞ்ச நரசிம்மர் ஆலயங்கள் – முன்னுரை. கார்த்திகை மாதம் என்பது கர்ம தொடர்புடையது, கர்மத்தைச் சரியாக முடிக்க ஒரு வைராக்கியம் வேண்டும், கூடவே உக்கிரமான வேகமும் வேண்டும், இதனாலேதான் கார்த்திகை மாதம் ருத்ர அம்சமெல்லாம் கொண்டாடப்பட்டது. காலபபைரவர், யமன் போன்ற தெய்வங்களெல்லாம் இம்மாதத்தில் கொண்டாடப்பட்ட ரகசியம் இதுதான், கார்த்திகை என்பது மாதங்களில் எட்டாம் மாதம், எட்டு என்பது எப்போதுமே ஒரு சமநிலை அல்லது பழையன முடிந்து புதியன பிறப்பதைச் சொல்லும், புதிய படைப்பினைச் சொல்லும் கர்கம் முடித்துப் […]